12-02-2019, 06:18 PM
எப்படியாவது வெளியில் எதாவது வேலை செய்து ஸ்பான்ஸர்ஷிப்புக்கு அவர்கள் செலவு செய்த பணத்தை திருப்பிக் கொடுப்பதாக மன்றாடினாள். முதலில் அன்பாக பேசியவர்கள் அவள் மறுக்க பலாத்காரத்தில் ஈடு பட்டனர். போராளியாக இருந்தவளை எளிதில் அவர்களால் தங்கள் இச்சைக்கு பணியவைக்க முடியவில்லை. பலாத்காரமாக அவளுக்கு போதை மருந்து ஏற்றியபின் அவர்களின் தாக்குதலுக்கு பலியாகி பல முறை கற்பழிக்கப் பட்டாள். அரை மயக்க நிலை மாறாமல் அவளை வைத்து பகல் நேரத்தில் அக்கூட்டத்தினருக்கு சிற்றுண்டி போலவும் இரவில் பேருண்டியாகவும் பரிமாறப் பட்டாள். தனக்கு என்ன நடக்கிறது என்று அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் இருந்தாள். சிறிது சிறிதாக தான் போதை மருந்துக்கு அடிமையாவதை உணர்ந்தாள். முழுவதும் அடிமையாவதற்குள் அங்கு இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று தக்க சமயத்திற்காக காத்து இருந்தாள். ஒரு நாள் விடியலுக்கு முன் அவர்கள் கண்ணயர்ந்த சமயம் தப்பி ஓடினாள். துரத்தியவர்களிடமிருந்து தப்பிக்க சாலையின் குறுக்கே ஓட ஜாஷ்வா தன் இரவு நேர வேலை முடித்து வீடு திரும்புகையில் அவன் காரில் அடிபட்டாள். அடி பட்டு விழுந்தவளை துரத்தியவர்கள் புறக்கணித்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். ஜாஷ்வா அவளை மருத்துவமனையில் சேர்த்தான். இரண்டு வாரங்களில் அவள் உடலில் பட்ட காயங்கள் ஆறி உடல் நிலை சற்று தேறியதும் அவளுக்கு ஏற்படுத்தப் பட்ட போதை மருந்து பழக்கத்தை திடீரென நிறுத்தியதால் தோன்றும் வித்ட்ராயல் சின்ட்ரோம் (withdrawal syndrome or discontinuation syndrome) அவளை வதைக்க தொடங்கியது. அதுவரை அதை அறியாமல் இருந்த மருத்துவர்கள் அவளை வேறு ஒரு மருத்துவத்திற்கு அழைத்து செல்லுமாறு ஜாஷ்வாவிடம் கூறினர். அவளை தன் ஃப்ளாட்டிற்கு அழைத்து வந்தவன் இரண்டொரு நாட்கள் அவள் பட்ட அவஸ்தையை பொறுக்க முடியாமல் சிறிதளவு போதை மருந்தை அவளுக்கு ஏற்றுவதற்கு தன் உடன் பிறவா சகோதரர்கள் மூலம் ஏற்பாடு செய்தான். பிறகு அவளை ஃபீனிக்ஸ் ஹௌஸ் (Pheonix House) என்ற பெயரில் இயங்கும் போதை பொருளுக்கு அடிமையானவர்களை குணப்படுத்தும் ஒரு மையத்திற்கு அழைத்து சென்றான். அங்கு இரண்டு வாரங்கள் தங்கி மருத்துவம் பெற்றபின் மறுபடி அவளை தன் ஃப்ளாட்டிற்கு அழைத்து வந்தான்.