Checkmate ... A cybercrime thriller dreamer
#9
.anjana Edwards - An Introduction Jan 2004 to May 2009Baticoloa, Sri Lanka to Harlem, N.Y, U.S.Aசஞ்சனா எட்வர்ட்ஸ் - ஒரு அறிமுகம் 26 டிசம்பர் 2004 முதல் மே 2009 வரை மட்டக்கிளப்பு, இலங்கையில் தொடங்கி ஹார்லம் பகுதி, நியூ யார்க் நகரம் வரை இலங்கையில் மீன் பாடும் தேன் நாடு என்று பெருமையுடன் அழைக்கப் படும் மட்டக்களப்பில் பார்த்திபன் வேதநாயகி தம்பதியர் இருவரும் அரசாங்க வேலையில் இருந்தனர். அதிக பணக்காரர்கள் இல்லை என்றபோதும் ஏழைகள் என்று சொல்ல முடியாது. 'பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கொடுக்க வேண்டும் அவர்கள் நல்லதொரு நிலைமைக்கு வர வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் குறிக்கோள். அப்போது அவர்களின் இருபத்து மூன்று வயதான மகன் சந்தோஷ் முது நிலை பட்ட படிப்பில் சேர்ந்து இருந்தான். அழகுப் பெட்டகமான இருபத்தோரு வயதான மகள் சஞ்சனா இள நிலை பட்ட படிப்பில் இருந்தாள். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு சிறிதும் ஏமாற்றம் அளிக்காமல் இருவரும் படித்து வந்தனர். இருவரும் பட்ட படிப்புடன் தனியாக கம்ப்யூட்ர் டிப்ளமாவும் படித்து வந்தனர். சந்தோஷ் படிப்பை முடித்தவுடன் பார்த்திபன் அமெரிக்காவில் அவருக்கு தெரிந்தவரிடம் ஒரு வேலைக்கும் சொல்லி வைத்து இருந்தார். சந்தோஷ் தன் தங்கையை மேல் படிப்புக்கு அமெரிக்கா அழைத்து செல்ல திட்டமிட்டு இருந்தான். அன்று பார்த்திபன்-வேதநாயகி தம்பதியினரின் திருமண நாள். வேலைக்கு போகுமுன் கல்லடியில் இருக்கும் ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்துக்கு சென்று வழிபட்டு செல்லவிருந்தனர். சந்தோஷும் சஞ்சனாவும் கல்லூரிக்கு போகுமுன் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக் கூறி மாலை எல்லோரும் டின்னருக்கு போக திட்டமிட்டு விடைபெற்று சென்றனர். அன்று அவர்கள் கோவிலுக்கு சென்ற போது வந்த சுனாமி அக்கோவிலின் கர்ப்பகிரகம் இருக்கும் கோபுரத்தை பைசா நகரத்து கோபுரம் போல் சாய்த்தது. சந்தோஷுக்கும் சஞ்சனாவுக்கும் அவர்கள் உடல்களை தேடி அவைகளை கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் ஆகின. பெற்றோரை இழந்த இருவரும் போக இடமின்றி படிப்பை தொடர வழியின்றி வேலை தேடி அலைந்தனர். சுதந்திர இயக்கத்தை சேர்ந்த சிலர் தங்களை போராளிகள் என்று காட்டிக் கொள்ளாமல் பொது நல சேவையில் ஈடு பட்டு இருந்தனர். சந்தோஷ் அவர்களுடன் பழக்கமாக, போக்கிடமின்றி தங்கையுடன் அவ்வியக்கத்தில் சேர்ந்தான். மேலும் படிக்கவும் இயலும் என்ற வாக்குறுதி கிடைத்ததால் சஞ்சனாவும் சம்மதித்தாள். ஆனால் வடக்கு மாகாணத்தில் இருக்கும் ஒரு முகாமில் அவர்கள் முதலில் படித்தது யுத்தக் கலை. சுதந்திரப் பற்று இருப்பினும் சஞ்சனா துப்பாக்கி கலாசாரத்தை அறவே வெறுத்தாள். இருப்பினும் சந்தோஷும் அவளும் கை தேர்ந்த போராளிகளாகினர். பல ஆபரேஷன்களை வெற்றிகரமாக முடித்து பாராட்டு பெற்றனர். அடுத்த இரண்டு வருடங்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் மனதுக்குள் வெறுத்தாள். சஞ்சனாவின் மன நிலையை அறிந்த சந்தோஷ் எப்படியும் அவளை அங்கு இருந்து வெளியே அனுப்பி விட முடிவெடுத்தான். அமெரிக்காவில் இருந்த தந்தைக்கு தெரிந்தவரை அணுக அவர் சிறிது பண உதவி செய்வதாகவும் அந்நாட்டுக்குள் வந்தபின் அடைக்கலம் தருவதாகவும் வாக்களித்தார். ஆனால் விசாவுக்கு தன்னால் ஸ்பான்ஸர் செய்ய இயலாது என்றார். வேறு ஒருவரை ஸ்பான்ஸர்ஷிப்புக்கு அணுகினார். அவர் அமெரிக்காவில் தன் முதலாளி கொடுப்பார்; ஆனால், அவரிடம் ஒரு வருடமாவது மிக குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய வேண்டும் என்று கூற அதற்கு ஒப்புதல் கொடுத்தான். கிடைத்த பண உதவியையும் சேர்த்து கையில் இருந்த பணத்தில் சஞ்சனாவுக்கு மட்டும் விமான டிக்கட் எடுக்க முடிந்தது. அந்த இயக்கத்தில் சேர்வது சுலபம் ஆனால் விடுபட்டுப் போவது கடினம். தன் உயிரை பணயம் வைத்து சஞ்சனாவை வெளியில் கொண்டு வர முடிவெடுத்தான். அவனை விட்டு செல்ல மறுப்பாள் என்று அறிந்த சந்தோஷ் தானும் உடன் வருவதாக கூறி இருந்தான். ரகசியமாக இருவரும் வெளியேறுகையில் மற்ற இயக்கத்தினரால் கண்டு பிடிக்கப் பட குண்டடி பட்டான். குற்றுயிரும் குலையுயிருமாக பிரயாணம் செய்து வந்தவன் கொழும்பு நகரத்தை அடையுமுன் உயிர் விட்டான். கொழும்பு நகரத்தில் தந்தையின் நண்பர் ஒருவர் வீட்டில் சில நாட்கள் செய்வது அறியாது திகைத்து இருந்தவள் தன் அமெரிக்க பயணத்தை தொடர முடிவெடுத்தாள். அண்ணன் ஏற்பாடு செய்து இருந்த ஸ்பான்ஸர்ஷிப் கடிதம், பாஸ்போர்ட் மற்றும் அவன் தன் சேமிப்பனைத்தையும் போட்டு எடுத்து இருந்த ஓபன் டிக்கட்டுடனும் அமெரிக்க தூதரகத்தில் க்யூவில் நின்று விசா பெற்றாள். ஸ்பான்ஸர்ஷிப் கொடுத்தவருடன் தொடர்பு கொண்டு அமெரிக்கா வருவதை அறிவித்தாள். ஒரு வருடம் குறைந்த சம்பள வேலையில் இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவள் அமெரிக்கா வந்தடைந்த பிறகே அவளுக்கு ஸ்பான்ஸர்ஷிப் கொடுத்தது ஒரு போதை மருந்து கடத்தும் கும்பல் என்று அறிந்தாள். அவர்களுக்கு அவள் செய்ய வேண்டி இருந்த வேலை அவர்களுடன் போகுமிடமெல்லாம் செல்லுவதும் வேண்டுமென்ற போது தன் உடலை பரிமாறுவதும் என்று அறிந்தவள் அதற்கு மறுத்தாள். ஒரு தனி அறையில் சிறைவைக்கப் பட்டாள்.
Like Reply


Messages In This Thread
RE: Checkmate ... A cybercrime thriller dreamer - by johnypowas - 12-02-2019, 06:16 PM



Users browsing this thread: 1 Guest(s)