screw driver ஸ்டோரீஸ்
"ம்ம்ம்ம்.. இந்த தண்ணியடிக்கிறது.. தம்மடிக்கிறதுலாம் உன்னோட வச்சுக்கோ.. அசோக்கை கெடுத்திடாத.. புரியுதா..?"

சொல்லிக்கொண்டே வைஷூ வண்டியை ஸ்டார்ட் செய்ய, சந்துரு வாய்க்குள் முணுமுணுத்தது எனக்கு தெளிவாக கேட்டது.

"ஆமாமாம்.. இவனை நான் கெடுக்குறனா.. இப்போதான வந்திருக்கான்.. இன்னும் கொஞ்ச நாள்ல பாரு.. மெட்ராசையே இவன் கெடுத்துடுவான்.."

அவன் முணுமுணுத்துக்கொண்டு இருக்கும்போதே, வைஷூ ஆக்சிலரேட்டரை முறுக்க, ஸ்கூட்டி சீறிக்கொண்டு பறந்தது. நான் இப்போது இரண்டு கையாளும் வைஷூவின் இடுப்பை வளைத்துக் கொண்டேன். அவளுடைய பின்னங்கழுத்தை மூக்கால் உரசினேன். சூடாக மூச்சு விட்டேன். அவள் மீதிருந்து, வியர்வையும் பெர்ஃப்யூமும் கலந்து அடித்த அந்த வாசனையை ஆழமாக நுகர்ந்தேன். ஆர்வத்தை அடக்க முடியாமல் அவளது தோள்ப்பட்டையில் 'இச்ச்ச்..' என்று என் இதழ்கள் பதித்தேன்.

"வாயை வச்சுக்கிட்டு சும்மா இருடா நாயி ..!!" தோளை நெளித்தபடி அவள் எரிச்சலாக சொல்ல,

"எங்கடி கூட்டிட்டு போற என்னை..?" அவள் காதோரமாய் நான் கேட்டேன்.

"ம்ம்ம்ம்.. உனக்கு வேலை வாங்கிக் கொடுத்த எனக்கு.. நீ ட்ரீட் கொடுக்கப்போற எடத்துக்கு..!!"

"அடச்சீய்.. அக்காவும் தம்பியும் ஒரே மாதிரி இருக்குறீங்கடி..!! உன் தம்பிக்கு வோட்கா புடிக்கும்.. உனக்கு என்ன.. விஸ்கியா ப்ராண்டியா..?"

"த்தூ.. கருமம்..!! ஏதாவது நல்ல ஹோட்டல் போலாம்.. சாப்பாடு வாங்கிக் கொடு.."

"சாப்பாடுதான..? வாங்கித்தர்றேன்..!! பில் மட்டும் நீ பே பண்ணிடு..!!"

"ஏன்..? நீ பண்ண மாட்டியா..?"

"கைல காசு இருந்தாத்தான பே பண்றதுக்கு..? ஊர்ல இருந்து கொண்டு வந்ததே நூறு ரூபா.. அதுலயும் இப்போ அம்பதுதான் மிச்சம் இருக்கு..!!"

"நூறு ரூபாயா..? அடப்பாவி... ஒத்தை நூறு ரூபாயை கைல புடிச்சுட்டு மெட்ராஸ்க்கு பொழப்பு தேடி வந்திருக்கியே.. உனக்குலாம் எவ்ளோ தைரியம்..?"

"ம்ம்ம்ம்... எல்லாம் நீயும் உன் தம்பியும் இருக்குற தைரியந்தான்..!!"

"ஓஹோ..? அப்போ நான்தான் இன்னைக்கு பலியாடா..?" அவள் சலிப்பாக சொன்னாள்.

"ஒய்.. என்ன.. ரொம்பதான் சலிச்சுக்குற..? எல்லாம் அக்கவுண்ட்ல வச்சுக்கம்மா.. அப்புறமா செட்டில் பண்ணிர்றேன்..!!"

"அக்கவுண்டா..? உனக்கு என்ன அக்கவுன்ட் இருக்கு.. எங்கிட்ட..!!"

"ம்ம்ம்ம்... நான் உன்னை கட்டிக்கிறதுக்கு.. எனக்கு வரதட்சணை கொடுக்கணும்ல..? அதுல கழிச்சுக்கோ..!!"

"ஹாஹா.. உனக்குலாம் பொண்டாட்டியா வந்து இம்சை அனுபவிக்கிறதுக்கு.. நீதாண்டா எனக்கு வரதட்சணை கொடுக்கணும்..!!"

நுங்கம்பாக்கம் ஹைரோடில் இருந்தது அந்த ரெஸ்டாரன்ட். பளிச்சிடும் இரவு விளக்குகளோடு, பளபளப்பாய் கம்பீரமாய் நின்றிருந்தது. சற்றே காஸ்ட்லியான ரெஸ்டாரன்ட்தான். நான்தான் மெனுகார்டின் ப்ரைஸ் காலத்தை பார்த்து வாயைப் பிளந்து கொண்டிருந்தேன். வைஷூ மிகவும் கேஷுவலாக அதைப் புரட்டி, எனக்கும் சேர்த்து அவளே ஆர்டர் செய்தாள். 

ஆர்டர் செய்த ஐட்டங்கள் வரும் வரை, அவ்வப்போது.. அருகில் இருப்பவர்கள் கவனியாத போது.. எனது கன்னம், கழுத்து, காது, உதடுகள் எல்லாம்.. காதலாக 'இச்.. இச்.. இச்..' செய்து எச்சிலாக்கினாள். அவளது ஆர்வம் எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. நீண்ட நாளுக்கப்புறம் என்னை பார்ப்பதால், அவளும் சற்று வேகமாக இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 12-02-2019, 11:27 AM



Users browsing this thread: 5 Guest(s)