screw driver ஸ்டோரீஸ்
அப்போ.. உண்மைலேயே அவளை லவ் பண்றியா..?"

"இல்லை.. ஊர் சுத்திட்டு.. அப்டியே உன் அக்காவை கழட்டி விட்ரலாம்னு இருக்கேன்..!! கேள்வியைப் பாரு.. சீரியஸா லவ் பண்றேண்டா..!! உன் அக்கா என்னை விட ரொம்ப சீரியஸ்..!! தெரியுமா..?"

"மச்சான்.. ப்ளீஸ்டா.. சொன்னா கேளுடா..!! இந்த மெட்ராஸ்ல எக்கச்சக்கமான பொண்ணுக இருக்காளுக..!! எவளாவது ஒருத்தியை கரெக்ட் பண்ணிக்கோ.. என் அக்காவ மட்டும் விட்ருடா ப்ளீஸ்..!!"

"ஏன்..?"

"எங்க வீட்ல அவளுக்கு நல்ல டீசண்டான மாப்ளையா பாக்குறாங்கடா..!!"

"ங்கொய்யால.. அப்டியே அப்பிருவேன்.. அப்போ நாங்க டீசன்ட் கெடயாதா..?"

"ச்சே.. நான் அப்டி சொல்லலடா..!! உங்க வீட்லயும் சரி.. எங்க வீட்லயும் சரி.. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஒத்துக்க மாட்டாங்கடா..!!"

"ஒத்துக்கலைன்னா.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்குவோம்.. உனக்கு என்ன வந்துச்சு..?"

"அப்போ வேற வழியே இல்லையாடா..?" அவன் மிகவும் பரிதாபமாக கேட்டான்.

"வண்டியை எடுத்துட்டு மொதல்ல கெளம்பு.. அதான் ஒரே வழி..!! உன் அக்கா வர்ற நேரம் ஆயிடுச்சு.. அவ வர்றதுக்குள்ள உன்னை கெளப்பி விடுறேன்னு சொல்லிருக்கேன்.. உன்னை இப்போ இங்க பார்த்தான்னா.. அப்டியே டென்ஷன் ஆயிடுவா..!! கெளம்பு..!!"

"என்னடா இப்படி வெரட்டுற..? சின்ன வயசுல இருந்து எவ்ளோ பழகிருக்கோம்.. என்னை விட என் அக்காதான் உனக்கு முக்கியமா போயிட்டாளாடா..?"

அவன் கேட்க, நான் கொஞ்ச நேரம் அவன் முகத்தையே அமைதியாக பார்த்தேன். அப்புறம்
அவனுடைய தோளில் கை போட்டேன். சாந்தமான குரலில் சொன்னேன்.

"மாப்ள.. எனக்கு உன்னை பிடிக்கும்..!! நீ ரொம்ப நல்லவன்..!! ஆனா நான்.. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு.. குடும்பம் நடத்தி.. கொழந்தை பெத்துக்க முடியுமா..? சொல்லு..!! அதனால.. உன்னை விட உன் அக்காதான்டா எனக்கு ரொம்ப முக்கியம்..!!"

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, எங்கள் முன்னால் அந்த ரெட் கலர் ஸ்கூட்டி பெப் வந்து நின்றது. வைஷூதான்..!! ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றியவள், எடுத்ததுமே தன் தம்பியை ஏறிட்டு சீறினாள்.

"நீ என்னடா பண்ணிட்டு இருக்குற இங்க..? ஆபீஸ் போகலையா..?"

"இ..இல்லக்கா.. போனேன்..." சந்துரு ஒரு மாதிரி நடுங்கியபடி சொன்னான்.

"அப்புறம் என்ன இந்தப்பக்கம்..?"

"அது.. அது.. இவன்தான் அட்ரஸ் கண்டு பிடிக்க கஷ்டமா இருக்கும்னு என்னை கூட்டிட்டு வந்தான்..!!"

"ம்ம்ம்.. அட்ரஸ்தான் கண்டுபிடிச்சாச்சுல..? கெளம்ப வேண்டியதுதான..??"

"இ..இந்தா.. கெளம்புறேன்..!!"

"ம்ம்ம்..!!! வீட்ல போய் இதுலாம் சொல்லிட்டு இருக்காத.. புரியுதா..?" தன் தம்பியை எச்சரித்தவள், என்னிடம் திரும்பி சொன்னாள்.

"உக்காரு அசோக்..!!"

நான் சந்துருவை நக்கலாக பார்த்துக்கொண்டே, வண்டியின் பின்னால் அமர்ந்து கொண்டேன். ஒரு கையை அவளுடைய தோளிலும், ஒரு கையை அவளுடைய இடுப்பிலும் வைத்துக் கொண்டேன். சந்துரு என்னையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது வைஷூ தன் தம்பியை பார்த்து கேட்டாள்.

"என்னடா.. அப்டியே பாவமா பாக்குற..?"

"அது ஒன்னும் இல்ல வைஷூ.. எனக்கு வேலை கெடைச்சதுல..? உன் தம்பிக்கு தண்ணி வாங்கித் தரணுமாம்.." நான் ரொம்ப கூலாக சந்துருவை அவன் அக்காவிடம் போட்டுக் கொடுத்தேன்.

"என்னது...?? தண்ணியா..?? தண்ணியடிக்கிறியா நீ..??" வைஷூ அவன் தம்பியை உக்கிரமாக முறைக்க,

"ஐயோ.. அதுலாம் ஒன்னுல்லக்கா.. அவன் சும்மா சொல்றான்..!!" அவன் பதறினான்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 12-02-2019, 11:26 AM



Users browsing this thread: 1 Guest(s)