screw driver ஸ்டோரீஸ்
"எதுக்கு..?"

"எங்கயாவது வெளில போலாம்டா..!!"

"வெளிலயா..?" நான் அதிர்ந்தேன்.

"அதுக்கெதுக்கு ஷாக் ஆகுற நீ..?"

"இல்ல வைஷூ.. சந்துரு வெளில வெயிட் பண்ணிட்டு இருக்கான்..!!"

"ப்ச்..!! அவனை எதுக்கு கூட்டிட்டு வந்த..? அறிவே கெடையாது உனக்கு..!! போய் மொதல்ல அவனை கெளப்பி விடு.. போ..!! நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்..!!"

"ஏய்.. அவன்.. பாவ.."

"மூடிட்டு போய் நான் சொன்னதை செய்.. போ..!!"

அவ்வளவுதான்..!! காலை கட் செய்துவிட்டாள். அவள் சூடாக உதிர்த்த வார்த்தைகளில் எனக்கு காதில் புகை வரும்போல் இருந்தது. லிப்ட் வந்ததும் நான் கீழே வந்தேன். அந்த பில்டிங்கை விட்டு வெளியேறினேன். காம்பவுண்டை ஒட்டியே, கொஞ்ச தூரத்தில் இருந்த அந்த பெட்டிக்கடையை நோக்கி நடந்தேன். தூரத்தில் செல்கையிலேயே வாயில் சிகரெட்டோடு, புகை சூழ சந்துரு காட்சியளித்தான். நான் அவனை நெருங்கி, அவனது வாயில் இருந்த சிகரெட்டை பிடுங்கி, எனது வாயில் வைத்துக்கொண்டு,

"டீ சொல்லு மாப்ள..!!" என்றேன். சொல்லிவிட்டு கடைக்கு வெளியே கிடந்த பெஞ்சில் வந்து அமர்ந்து கொண்டேன்.

"அண்ணா.. இன்னொரு டீ கொடுண்ணா.."

சொல்லிவிட்டு சந்துருவும் வந்து எனக்கு அருகில் பெஞ்சில் அமர்ந்துகொண்டான். கொஞ்ச நேரம் அமைதியாக என் வாயில் புகைந்த சிகரெட்டையே ஏக்கமாக பார்த்தான். அப்புறம் மெல்ல கையை நீட்டி, அதை பறித்தபடி கேட்டான்.

"என்னடா மச்சான் ஆச்சு..?"

"ரெண்டரை லட்சம்..!!" நான் ஆஃபர் லெட்டரை ஆட்டிக்கொண்டே சொன்னேன்.

"மச்சான்...!!!! கங்க்ராட்ஸ்டா..!! எப்படிடா..?? ரெண்டு வருஷம் சும்மா தெண்டத்துக்கு ஊரை சுத்திட்டு.. அட்டன்ட் பண்ணின மொத இன்டர்வியூவ்லேயே.. ஆஃபர் லெட்டர் வாங்கிட்ட..?? மச்சம்டா மச்சான்..!!"

"மச்சமா..? மண்டை நெறைய மூளை வேணும்டா அதுக்குலாம்..!! மசுரு..!!"

சொல்லிக்கொண்டே கடைக்காரன நீட்டிய டீயை வாங்கிக் கொண்டேன். வாயில் வைத்து ஒரு சிப் சிப்பியவன், 'த்தூ..!!' என்று துப்பினேன். எரிச்சலாக சந்துருவிடம் சொன்னேன்.

"என்னடா.. உங்க ஊர்ல டீ கூட இவ்வளவு கேவலமா இருக்கு.. மாட்டுக்கு வைக்கிற கழனி தண்ணி மாதிரி.." நான் சொல்ல சொல்ல டீக்கடைக்காரன் முறைப்பதை, ஓரக்கண்ணால் என்னால் உணர முடிந்தது.

"த்தா.. மூடிட்டு குடிடா..!!" எரிச்சலாக சொன்னான் சந்துரு. நான் அட்ஜஸ்ட் செய்து அந்த டீயை குடித்தேன். சற்றே கிண்டலான குரலில் சந்துருவிடம் கேட்டேன்.

"அப்புறம் மாப்ள.. நைட்டு என்ன ப்ளான்..?"

"நீதான் சொல்லணும்..?"

"நானா..?"

"ஆமாம்.. ஆஃபர்லாம் வாங்கிருக்க.. வந்து ட்ரீட் வை..!! ஓசில தண்ணியடிச்சு ரொம்ப நாள் ஆச்சு..!!"

"தண்ணியா...? ச்சீச்சீ.. தள்ளி உக்காரு..!! பேட் பாய்..!!"

"அடிங்ங்ங்... உன்னை விட்டா.. ஒயின்ஷாப்ல இருக்குற மொத்த சரக்கையும்.. ஒரே நாள்ல முடிச்சுடுவ.. நீ என்னை பேட் பாய்னு சொல்றியா..? நேரம்டா..!!"

"சரி விடு..!! நான் குடிப்பேன்.. ஒத்துக்குறேன்..!! ஆனா.. அதுக்காகலாம் உனக்கு தண்ணி வாங்கித் தர முடியாது..!!"

"மச்சான்.. காலைல இருந்து உன் டார்ச்சரை ரொம்ப அனுபவிச்சுருக்கேன்டா.. அதுக்காகவாவது வாங்கிக் கொடுடா ப்ளீஸ்..!!" இப்போது அவன் குரல் சற்று பரிதாபமாக ஒலித்தது.

"என்னடா.. ரொம்ப ஓவரா பேசுற..? அப்டி என்ன பண்ணிட்ட..?"

"என்ன பண்ணிட்டனா..? நீ மெட்ராஸ் வர்றேன்னு.. நான் தங்கி இருந்த வீட்டுல.. உனக்குன்னு ஒரு ரூம் ஒதுக்கி.. அதை தொடைச்சு கிளீன் பண்ணிருக்கேன்..!! காலங்காத்தால எந்திரிச்சு.. உன்னை வந்து ரயில்வே ஸ்டேஷன்ல பிக்கப் பண்ணிருக்கேன்..!! ஹாட் வாட்டர் போட்டுக் கொடுத்திருக்கேன்..!! ஆபீசுக்கு லீவ் போட்டு.. இன்னைக்கு பூரா உன் கூட பைக்ல சுத்திருக்கேன்..!! அதுலாம் கூட பரவால்ல..!! எல்லாத்துக்கு மேல.. நீ இன்டர்வியூ போனப்புறம்.. இந்த இத்துப்போன கடைல.. இரண்டு மணி நேரம் உக்காந்திருந்திருக்கேன்..!!" 

சந்துரு சீரியஸாக பேசிக்கொண்டிருக்க, நான் மெல்ல திரும்பி டீக்கடைக்காரனை பார்த்தேன். அவன் இப்போது முன்பை விட அதிகமாக முறைத்தான்.
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 12-02-2019, 11:23 AM



Users browsing this thread: 9 Guest(s)