12-02-2019, 10:48 AM
அதற்கு மேல் சத்யனால் கோபத்தை பிடித்துவைக்க முடியவில்லை, அவளை இழுத்து தனது நெஞ்சில் போட்டுக்கொண்ட சத்யன் “ இல்லம்மா உன்மேல எனக்கு கோபம் இல்ல, வருத்தம்தான் மான்சி,, நான் எவ்வளவு சொன்னாலும் நீ உன்னையே இப்படி வருத்திக்கிறயே அதுதான் எனக்கு வருத்தம் மான்சி, என்னால உன்னைய அந்தமாதிரி பார்க்க முடியலை மான்சி, உன்னை சிம்மாசனத்தில் அமர்த்தி ஒரு மகாராணியா வாழவைக்க முடியலைன்னாலும், என் பொண்டாட்டியா சகல உரிமைகளோடயும் வாழவைக்கனும்னு நெனைக்கிறேன் மான்சி ” என்ற சத்யனின் குரலும் தழுதழுக்க
“ அய்யோ சத்தி எனக்கு எந்த கொறையும் இல்ல, ஒரு ராஜாவோட பொஞ்சாதியைவிட நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சத்தி, நாமலும் கூட சேர்ந்து உழைச்சா ரெண்டாளு கூலி மிச்சமாவும்னு தான் போறேன், ஒனக்கு புடிக்கலைன்னா இனிமே வேலை செய்யல, சும்மா எல்லாறையும் வேல வாங்க மட்டும் வர்றேன் சத்தி, இது போதுமா சத்தி? இப்போ சந்தோசமா?” என்று மான்சி அவனை ஆறுதல்படுத்தினாள்
“ ம்ம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் மான்சி,, மான்சி நான் சொல்றதை கேளு, காலேஜ்ல படிக்கும் போது எல்லாரையும் போல எனக்கும் ஏகப்பட்ட ஆசைகள் இருந்துச்சு, எனக்கு பொண்டாட்டி எப்புடி வரனும், அவ என்கிட்ட எப்படியெல்லாம் நடந்துக்கனும், அவளும் நானும் எப்படியெல்லாம் வாழனும்னு ஏகப்பட்ட ஆசைகள் இருந்துச்சு, எனக்கும் கல்யாணம் ஆச்சு, என்னோட ஆசைகள் ஒன்னுகூட நிறைவேறலை மான்சி, என்னோட நாலுவருஷ இழப்புக்களுக்கு மிச்சம் நம்ம மனுநீதி மட்டும்தான், ஆனா உன்னை பார்த்ததும் என்னோட ஆசைகள் எல்லாம் மறுபடியும் துளிர்விட்டு வளர்ந்து இப்போ பெரிய மரமாயிருச்சு, எந்த நிமிஷமும் நீ கஷ்டப்படக்கூடாதுன்னு நெனைக்கிறேன் மான்சி, நீ வேலை செய்யவேண்டாம், ஒரு மேஸ்திரி மாதிரி எல்லாரையும் அதட்டி வேலை வாங்கு மான்சி அது போதும்” என்று சத்யன் சொல்ல சொல்ல அவனுடைய மனநிலை மான்சிக்கு தெளிவாக புரிந்தது
“ சரி சத்தி இனி உன் ஆசைப்படியே இருக்கேன், அடுத்து நான் என்ன செய்யனும்னு ராசா உத்தரவு போட்டீகன்னா, அதை சரியா செஞ்சு ராசாகிட்ட நல்லபேரு வாங்குவேன்” என்று மான்சி குறும்புடன் பேசி அவன் மனதை இலகுவாக்க..
தன்மேல் கிடந்த அவளை புரட்டி கட்டிலில் தள்ளிய சத்யன், அவள்மீது ஒரு காலையும் கையையும் தூக்கிப்போட்டு வளைத்துக்கொண்டு “ இன்னிக்கு என் மகாராணி வேலை செய்து ரொம்ப களைத்துப் போயிருக்காங்க, அதனால இன்னிக்கு மகாராணிக்கு லீவு விட்டுட்டு, அவங்களுக்கு இதமா அணைச்சு தூங்க வைக்கப்போறேன்” என்று சத்யன் காதலோடு சொன்னதும் மான்சிக்கு விழிகளில் நீர் நிரம்பியது
அவளுக்குத் தெரியும் சத்யனுக்கு இரவில் தேவைகள் அதிகமென்று, ஆனால் தனக்காக அதையும் ஒதுக்கும் புருஷனை நினைத்து அவளுக்கு மனமும் விழியும் நிறைந்தது, ஒருக்களித்து படுத்து அவனை அணைத்துக்கொண்டு கண்மூடினாள்
சத்யனும் அவளை இதமாக அணைத்து முதுகை வருடி, கூந்தலை கோதிவிட்டு, தோள்களை இதமாக பிடித்துவிட்டு தூங்கவைத்தான், தனது கைக்குள் தூங்குபவள் மனைவியாக தெரியவில்லை சத்யனுக்கு, மனுவைப் போல அவளும் ஒரு குழந்தையாகவே தோன்றினாள்
அதன்பிறகு வந்த நாட்களில் போட்ட சூளை லாபகரமாக விற்க அடுத்தடுத்து மூன்று சூளைகள் போட்டு லாபம் சம்பாதித்தார்கள், செங்கல் நல்ல தரமானதாக இருந்தததால் கேரளா வியாபாரிகள் போட்டிபோட்டுக் கொண்டு செங்கலை வாங்கினார்கள்,
மான்சியின் தங்கைக்கு ஏற்கனவே அவளின் மாமன் மகனையே பேசிமுடித்து இருந்ததால், சத்யன் ஒரு தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து புவனாவின் திருமணத்தை நடத்தி வைத்தான்
திருமணம் முடிந்து புவனா கணவன் வீட்டுக்கு போய்விட, தனது மாமியாரை சத்யன் தன் வீட்டுக்கே அழைத்துக்கொண்டான், பாட்டியும் மான்சியும் அம்மாவும் ஏற்கனவே ஊர் புரணி பேசி ரொம்பவும் நெருக்கமாகிவிட்டதால் வேறு எதுவும் பிரச்சனை இல்லாமல் போனது
மனுவை டவுனில் ஒரு காண்வென்டில் சேர்த்தார்கள், அவன் முதல் நாள் பள்ளிக்கு செல்லும்போது மனுவைவிட மான்சிதான் அவனை பிரியமுடியாமல் அழுதாள், கடைசியாக மனுதான் அவள் கண்களை துடைத்து “ அயுவத அம்மா, நான் சீக்கிதமாவே வந்துர்றேன்” என்று ஆறுதல் சொல்லிவிட்டு போகும்படி ஆனது
இவர்கள் இருவரையும் பார்த்து சத்யன் விழுந்து விழுந்து சிரித்தான்
மனுவை இரண்டுவேளையும் ஸ்கூலுக்கு அழைத்து போய் வர சத்யன் ஒரு பைக் வாங்கினான், மகனுடன் சத்யன் வந்து புது பைக்கில் இறங்கிய போது அந்த வண்டிக்கு திருஷ்டி படக்கூடாது என்று மான்சி அந்த பைக்குக்கு திருஷ்டி சுற்றியதில்,, பைக் மாரியம்மன் கோயிலில் கூல் ஊத்தும் அண்டா போலானது