12-02-2019, 10:42 AM
" முதல் இரவு"
" தூக்கம் பறந்த இந்த இரவு!
" தலையணையை மறந்த இரவு!
" முந்தானையின் மறைவுக்குள் முற்றும் துறந்த இரவு!
" எனக்கு அவளும், அவளுக்கு நானும் ஆடையான இரவு!
" எனது வேட்டியை விரிப்பாக்கிய இரவு!
" அவள் புடவையைப் போர்வையாக்கிய இரவு!
" கரைகாணா சந்தோஷத்தில், எங்களின் ஆடைகள் கறையான இரவு!
" எச்சங்களை மிச்சமில்லாமல் உள்வாங்கிய இரவு!
" விடியும்வரை வேட்கையுடன் கூடித்தழுவிய இரவு!
" விடிந்ததற்காக முதன்முறையாக சூரியனை நான் சபித்த இரவு!
" தூக்கம் பறந்த இந்த இரவு!
" தலையணையை மறந்த இரவு!
" முந்தானையின் மறைவுக்குள் முற்றும் துறந்த இரவு!
" எனக்கு அவளும், அவளுக்கு நானும் ஆடையான இரவு!
" எனது வேட்டியை விரிப்பாக்கிய இரவு!
" அவள் புடவையைப் போர்வையாக்கிய இரவு!
" கரைகாணா சந்தோஷத்தில், எங்களின் ஆடைகள் கறையான இரவு!
" எச்சங்களை மிச்சமில்லாமல் உள்வாங்கிய இரவு!
" விடியும்வரை வேட்கையுடன் கூடித்தழுவிய இரவு!
" விடிந்ததற்காக முதன்முறையாக சூரியனை நான் சபித்த இரவு!
சத்யன் மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே திகைப்பில் இருந்தனர், ஆனால் பாட்டியின் பார்வையில் மட்டும் திகைப்புடன் ஒரு பெருமிதமும் கலந்திருந்தது,
“ ஏன்மா மான்சி சூளை போடுறது சாதரண விஷயமில்ல, நல்லா யோசனை பண்ணி சொல்லும்மா” என்று மேஸ்திரி கேட்க..
ஓடி வந்து காலைக் கட்டிக்கொண்ட மகனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு “ அதெல்லாம் நல்லா யோசிச்சுட்டேன் மேஸ்திரி, நீ உன் மொதலாளி கிட்ட சொல்லி குத்தகை காலாவதி ஆயிருச்சுன்னு சொல்லிரு,, இன்னும் மூனு நாளு டைம் தர்றேன் அதுக்குள்ள உங்க சாமான்களை எடுத்துகிட்டு நெலத்த காலி பண்ணி குடுங்க” என்று மேஸ்திரியிடம் சொன்ன மான்சி தன் அம்மாவின் பக்கம் திரும்பி “ எம்மாவ் நீயும் குடிசைய காலிப் பண்ணி இருக்குறதை மூட்டைக்கட்டி திண்ணையில கொண்டுவந்து போடு, மேஸ்திரி கூரைய பிரிச்சதும், நாம வேற குடிசை போட்டுக்கலாம்” என்று தன் அம்மாவுக்கும் உத்தரவிட, அவளும் சரியென்று தலையசைத்தார்
இனி பேசி பயனில்லை என்று புரிந்துகொண்ட மேஸ்திரி “ சரிம்மா நல்லபடி சூளைப் போட்டு நல்லாருங்க,, நான் போய் மொதலாளிகிட்ட விஷயத்தை சொல்லி வேற எடம் பாக்கச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்
சத்யனுக்கு அவள் முடிவுகள் வியப்பாக இருந்தது, இன்னிக்கெல்லாம் உட்கார்ந்து எண்ணிப்பார்த்தால் கூட வீட்டில் நாலாயிரம் ரூபாய்க்கு மேல இல்லை, இவ என்னடான்னா சூளை போடலாம்னு சொல்றாளே என்று கவலையுடன் எண்ணியவாறு மான்சியைப் பார்த்தான்
அவன் பார்வையில் அவன் மனதை படித்த மான்சி “ என்னா சத்தி கையில காசு இல்லாம இவபாட்டுக்கு பேசுறாளேன்னு பாக்குறியா,, புவனா கல்யாணத்துக்கு அம்பதாயிரம் சேத்து வச்சிருக்ககேன் சத்தி அத வச்சு சூளை வேலையை ஆரம்பிக்கலாம், வித்து லாபம் வந்ததும் அந்த அம்பதாயிரத்த எடுத்து வச்சிட்டு மீதி லாபத்துல அடுத்த சூளை போடலாம் சத்தி, ஆனா என்ன ஒன்னு முப்பதாயிரம் கல்லுதான் அறுக்க முடியும், ஏவாரத்துக்கு அறுத்தா எடுத்த எடுப்புலயே மூனு லட்சம் நாலு லட்சம்னு கல்லு அறுத்தான், ஏவாரிகளுக்கு கல்லு சப்ளை பண்ண முடியும், சரி விடு படிப்படியாவே முன்னுக்கு வரலாம் ” என்று மான்சி யோசனை சொல்ல..
ஒரு கன்னிப்பெண் திருமணத்திற்கு வைத்திருக்கும் பணத்தை எடுத்து சூளை போடுவதா என்று சத்யனுக்கு சங்கடமாக இருந்தது.
“ ஏலேய் சத்தி என்னமோ கையில காசு இல்லாதவன் மாதிரி முழிக்குறியே, போய் பேங்குல கெடக்குற காசையெல்லாம் எடுத்துட்டு வந்து ஒம் பொஞ்சாதி கைல குடுறா, இனிமே அவ பாத்துக்குவா எல்லாத்தையும்” என்று பாட்டி உற்சாகமாய் சொன்னார்
சத்யனுக்கும் அதுதான் சரியென்று பட்டது, “ சரி மான்சி நீ போய் சாப்பாடு எடுத்து வை, நான் சாப்பிட்டு பேங்குக்கு போய்ட்டு வர்றேன்” என்று சத்யன் சட்டை போட அறைக்குள் நுழைந்தான்
இடுப்பில் இருந்த மகனை தங்கையிடம் கொடுத்து விட்டு மான்சியும் அவன் பின்னோடு அறைக்குள் நுழைந்தாள்,
சத்யன் ஏதோ யோசனையாக கட்டிலில் அமர்ந்திருக்க, அவன் அருகில் போய் அமர்ந்த மான்சி அவன் தோளில் இருந்த துண்டை எடுத்து தலையில் இருந்த ஈரத்தை துவட்டிய வாறு “ என்னா சத்தி ரொம்ப பலமான யோசனை போலருக்கு” என்று கேட்டாள்
தன் தலையை துவட்டிய அவள் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்திக்கொண்ட சத்யன், பிறகு அந்த இரண்டு கைகளிலும் மாறி மாறி முத்தமிட்டு கையை விரித்து பார்த்தான், இந்த ஒரு வாரமாக கடினமான வேலை எதுவும் செய்யாததால் கைகளின் கடினத்தன்மை மாறி கொஞ்சம் மென்மையாக இருந்தது
கவலையுடன் மனைவியை ஏறிட்ட சத்யன் “ மான்சி நீ சொல்றது எல்லாம் சரிதான், ஆனா நீ மறுபடியும் கஷ்டப்படக்கூடாது மான்சி, நீ செய்ற வேலைக்கு ரெண்டு ஆளைக்கூட வச்சுக்கலாம், அவங்க கூட இருந்து நானும் உழைக்கிறேன், நீ வீட்டுல இருந்து கணக்கு வழக்கு பாத்துக்கிட்டு, சாப்பாடு மட்டும் செய் மான்சி, நீ பட்டக் கஷ்டமெல்லாம் போதும்மா, இனி என் பொண்டாட்டியை ராணிமாதிரி வச்சு பாத்துக்கனும்னு நான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன் மான்சி” என்று சத்யன் உருக்கமாக பேசினான், அவன் கண்களும் அதற்க்கேற்ப்ப கலங்கி தழும்பியது