மாலதி டீச்சர் by JNS
#3
காலையில் மீண்டும் குட் மார்னிங் அனுப்பினேன். ரிப்ளை வந்தது. நிம்மதியாயிருந்தது. சிந்துவை ஸ்கூலில் விட்டுவிட்டு வெளியே வந்து காத்திருந்தேன். மாலதி வருவதைப் பார்த்ததுதும் தற்செயலாக எதிர்படுவது போல் சென்று ஹலோ சொன்னேன். அவளும் சிரித்து ஹலோ சொன்னாள். அவளுடைய பற்கள் சீராகவும் நேர்த்தியாகவும் இருந்தது. வெளிர் பச்சை நிற சேலையில் சொக்க வைத்தாள். நன்கு படிய தலையை சீவி மஞ்சள் நிறப் பூ ஒன்றைச் சூடியிருந்தாள். இரண்டு நிமிடம் பேசிவிட்டு விலகினேன். வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்த போது இரண்டாவது மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்தாள். சிறிது மேலே ஏறிவிட்டுத் திரும்பிப் பார்த்தாள். நான் பார்ப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டு படியேறிச் சென்றாள். மதியம் லஞ்ச் டைமில் மெசேஜ் அனுப்பினேன். உடனடியாகப் பதில் அனுப்பினாள்.
‘குட் ஆப்டர்நூன் மேடம்’
‘குட் ஆப்டர்நூன் சிவா’
‘தேங்ஸ் மேடம்’
‘சாப்பிட்டீங்களா?’
‘இன்னும் இல்ல இனிமேதான். நீங்க?’
‘நான் சாப்பிட்டுகிட்டே இருக்கேன்.’
‘என்ன சாப்பாடு?’
‘மோர் குழம்பும் வெண்டைக்காயும்’
‘ஓ நைஸ். எனக்குப் பசிக்குது.’
‘ஹ ஹ ஹா..’
‘எனக்கு மோர்குழம்பு இல்லையா?’
‘வாங்க ஷேர் பண்ணி சாப்பிடலாம்’
‘ஓ தேங்ஸ். நீங்க சொன்னதே சாப்பிட்ட மாதிரி இருக்கு’
இப்படி சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் அவரவர் வேலையில் மூழ்கிப் போனோம். இரவில் அவள் நினைவு அதிகமாய் வந்தது. படியேறும் போது அவள் திரும்பிப் பார்த்த பார்வை என்னை தூங்கவிடாமல் செய்தது. மணி பதினொன்றரை ஆகியிருந்தது. மெசேஜ் அனுப்பிப் பார்க்கலாமா என்று தோன்றினாலும் பயமாயிருந்தது. தயங்கி தயங்கி ‘குட்நைட் மேடம்’ என்று அனுப்பினேன். சிறிது நேரம் கழித்து பதில் அனுப்பினாள்.
‘என்ன இந்த நேரத்துல குட்நைட் ? இன்னும் தூங்கலையா?’
‘இல்ல மேடம் தூக்கம் வரல’
‘ஏன்?’
‘தெரியல. நீங்க தூங்கலையா?’
‘இல்ல. கொஞ்சம் பேப்பர் கரெக்சன் இருந்துச்சு. அதான் பாத்துகிட்டுருக்கேன்.’
‘நான் டிஸ்டர்ப் பண்றேனா?’
‘இல்ல நோ ப்ராப்ளம். முடிக்கப் போறேன்.’
‘ம்ம்.. தென்?’
‘சொல்லுங்க சிவா’
‘என்ன சொல்ல?
‘இப்பல்லாம் அடிக்கடி சிந்துவ நீங்கதான் ஸ்கூல்ல வந்து விடுறீங்க போல’
‘ஆமாமா’
‘எதுக்கு ஸ்கூலுக்கு வர்ற பேரண்ட்ச சைட் அடிக்கவா?’
‘ஐயோ அதெல்லாம் இல்ல மேடம்.’
‘ம்ம்..’
‘உண்மைய சொல்றதா இருந்தா நான் உங்களைப் பார்க்கத்தான் அடிக்கடி வரேன்.’
‘வாட்.. என்னைப் பார்க்கவா? என்னை எதுக்கு பாக்கணும்?’
‘தெரியல.. உங்களை பாக்கனும் போல இருக்கும் அதான் அடிக்கடி வரேன்.’
அதற்குப் பின் சிறிது நேரம் மெசேஜ் வரவில்லை. நான் ‘சாரி’ என்று அனுப்பினேன். பதில் வரவில்லை. மணி பணிரெண்டாகியிருந்தது. சிறிது நேரத்தில் மெசேஜ் வந்தது. ‘குட்நைட்’
நான் பதிலனுப்பினேன். ‘கோபமா மேடம்?’
‘நோ.. நான் எதுக்கு உங்க மேல கோபப்படனும்?’
‘ம்ம்ம்’
‘ஒகே எனக்கு தூக்கம் வருது குட்நைட்’
‘ஓகே. ஸ்லீப் வெல். குட்நைட்’
நான் மொபைலை வைத்துவிட்டுத் தூங்கினேன்.
Like Reply


Messages In This Thread
RE: மாலதி டீச்சர் JNS - by johnypowas - 11-02-2019, 01:30 PM



Users browsing this thread: 14 Guest(s)