Romance ஓகே கண்மணி
#40
ஒரு இட்லியை எடுத்து அதை கார்த்திகை பார்த்து நீட்டி வேணுமா என்பது போல காட்ட கார்த்திக் பிளேட்டை சாப்பிட்ட பிளேட்டை எடுத்துக்கொண்டு கை கழுவ சென்றான்.நடந்த போட்டியிலும் ராஜி ஒன்றை கவனிக்க தவறவில்லை.

சட்னியின் சுவை வழக்கத்தை விட ஏதோ வித்யாசமாக தெரிந்தது.என்ன பண்ணிருப்பான்னு யோசித்து கொண்டே அதை ரசித்து சாப்பிட தொடங்கினாள்.அப்போது அவளுக்கு விக்கல் வர ஹூக்ஹூக்ஹூக் என்று விக்க தொடங்கினாள்.அப்போது பார்த்து ஜக்கில் தண்ணீர் காலி ஆகி இருக்க சரி எப்படியும் கார்த்திக் எடுத்து தருவான்னு பார்க்க அவன் அதை கண்டு கொள்ளாமல் கிச்சன் பார்த்து சென்று விட்டான்.

சரி ஆபத்துக்கு பாவம் இல்லை என்று விக்கி கொண்டே பிரிட்ஜை திறந்து பார்க்க அங்கும் வாட்டர் பாட்டில் காலியாக இருந்தது.சனியன் தண்ணிய கூட விட்டு வைக்கல.சரி கிச்சன் போய் குடிக்க வேண்டியது தான்.நாம இதை படுத்தி எடுக்கலாம்னு பார்த்தா இது நம்மள படுத்தி எடுக்குது.ரெண்டு நாள் கூட இதுகூட தனியா இருக்க முடியலையே.இன்னும் 15 நாள் எப்படித்தான் கழிய போகுதோன்னு முனகிக்கொண்டே கிச்சன் பக்கம் செல்ல கையில் சுடுநீருடன் வந்தான் கார்த்திக்.

அதை கொண்டு அவள் முகத்தை நோக்கி ஊற்றுவதை போல டம்ளரை வைக்க ஏய்ய்ய்ய்ய் லூசு.மெண்டல் என்று திட்டிக்கொண்டு கைகலால் முகத்தை மறைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டாள். அறிவு இருக்கா உணக்க் என்று சொல்லி கொண்டே அவள் திரும்பி கார்த்திக்கை பார்க்க டேபிளில் சூடு தண்ணீர் மட்டும் இருந்தது.

வேகமாக அதை எடுத்து குடிக்க சென்றவளுக்கு அப்போது தான் உரைத்தது விக்கல் நின்றுவிட்டதுன்னு.தொண்டையை தடவி பார்த்த ராஜி மெதுவாக தண்ணீர் குடித்தாள்.பின் பிளேட்டை கழுவி,கை கழுவி விட்டு வந்து சோபாவில் வந்து இருந்தாள்.அங்கு டீபாயில் டாக்ட்டர் கொடுத்த மாத்திரையும்,ப்ளாக் டீயும் இருந்தது.

ராஜி கார்த்திக்கை தேட அவன் ரூமிற்கு சென்று இருந்தான்.டீயை குடித்து விட்டு மாத்திரையை முழுங்கினாள்.ஏனோ அவள் மனம் கார்த்திக்கை தேடியது.ரூமிற்கு சென்று அவனை பார்த்தாள் ராஜி.தேங்ஸ் என்று சொன்னாள்.பரவாயில்லை.இப்ப பெட்டரா இருக்கான்னு கேட்டான் கார்த்திக்.

கொஞ்சம்.சமையல் சூப்பரா இருந்துச்சு.ஏன் கார்த்திக்.எனக்காக இவ்ளோ விஷயம் பாத்து பாத்து பண்ற.நான் எவ்ளோ திட்டினாலும் கோவப்பட மாட்டேங்குற.எல்லார் மேலையும் அன்பா இருக்க.அப்ப ஏன்என் என்னை மட்டும் அழ வச்ச.நான் உனக்கு அப்படி என்ன செஞ்சிட்டேன்.நா ன்ன உனக்கு அவ்ளோ பிடிக்குமா.

நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணல.ஏன் ஒரு பிரெண்டா கூட உன்கிட்ட நிறைய விஷயங்கள் மறச்சிருக்கேன்.இவ்ளோ இருந்தும் நானே சாப்பிட கூடாதுன்னு இருந்தாலும் சாப்பிட வைக்கிற.நான் கேக்காமலே எனக்காக எவ்ளோ பண்ற.ஏன் கார்த்திக்.நான் உனக்கு அவ்ளோ பிடிக்குமா சொல்லுன்னு கேட்டாள் ராஜி.

அவன் எதுவும் சொல்லாமல் அவளை பார்த்து சிரிப்பை மட்டும் பதிலாக தர விழியோரமாய் ராஜிக்கு கண்ணீர் எட்டி பார்த்தது.இல்ல இந்தமுறை ணீ சொல்லித்தான் ஆகணும்.சிரிச்சி மழுப்பாத.பதில் சொல்லுnன்னு சொன்னாள் ராஜி.

அது ஒன்னும் இல்ல ராஜி.சிம்பிள்.நான் உன்னை காதலிக்கிறேன்.அவ்ளோதான்.அது எந்த அளவுக்குன்னு என்னால நிரூபிக்க முடியாது.யு நோ வாட்.சப்போஸ் உனக்கு வேற யார்கூடவாச்சும் கல்யாணம் நடந்துருச்சுன்னு வச்சுக்கோ நான் என்ன நினைப்பேன் தெரியுமா.உனக்கு தாலி கட்டினவன் சீக்கிரமே சாகணும்னு தான் கடவுள்கிட்ட வேண்டிப்பேன்.

முதல் இரவுல ஸ்விட்ச் போடும்போது அவனுக்கு ஷாக் அடிச்சி இல்லனா பைக்ல போகும்போது ஆக்சிடன்ட் ஆகி இல்லனா ஹார்ட் அட்டாக் வந்து இப்படி எதுலையாவது ஒன்னுல அவன் சாகணும்னு தான் நான் டெயிலி வேண்டிப்பேன்னு சொன்னான் கார்த்திக்
அப்ப என்ன உண்மையா லவ் பன்றேன்னு சொல்லிட்டு என் வாழ்க்கை நாசமா போகணும்னு நினைப்ப அப்படித்தான என்றாள் ராஜிசத்தியமா உன் வாழ்க்கை நாசமாக போகணும்னு எண்ணம் இல்லை.அப்படி ஒன்னு நடந்தாச்சும் உன்னை செகண்ட் மேரேஜ் பன்னி உன்கூட ஒரு லைப் வாழ்ந்துட மாட்டேனான்னு ஒரு ஆசை அவ்ளோதான்.

அதான் இந்த மேரேஜ் விசயத்துல நான் கொஞ்சம் செல்பிஷா நடந்துக்கிட்டேன்.உனக்கு என்கூட இருக்க பிடிக்கலைன்னா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.நான் ட்ரான்ஸபெர் வாங்கிடறேன்.நீ இங்க அப்பா,அம்மா கூட இருந்துக்கோ.நான் வீக்லி ஒன்ஸ் மட்டும் வரேன்னு சொன்னான் கார்த்திக்.

அவன் கடைசியாக சொன்ன வார்த்தைகள் அத்தனையும் கேட்ட ராஜிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.இந்த அளவுக்கு பைத்தியமாக இருக்கும் ஒருவனை நாம் தவறாக புரிந்து விட்டோமோ என்று மனதில் யோசிக்க தொடங்கினாள் ராஜி.

ஆனால் அவளது பெண் புத்தி அவளை எச்சரித்தது.அவன் நடிக்கிறான்.இப்படி சொல்லித்தான் உன்னோட வாழ்க்கையை சீரழிச்சான்.இப்ப மறுபடியும் ஆரம்பிக்கிறான்.நம்பாதே என்று எச்சரித்தது.இப்படியாக புத்திக்கும் மனதுக்கும் இடையே இருதலை கொல்லி எறும்பாய் மாட்டிக்கொண்டு தவித்தாள் ராஜி.

என்மேல உள்ள கோவம்லாம் அப்படியே இருக்கட்டும்.அதை எப்ப வேணும்னாலும் என்கிட்ட காட்டலாம்.யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்.இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடு நம்ம சண்டையை அப்றம்சி வச்சிக்கலாம்.அப்புறம் சாப்பாடு நான் செஞ்சுடுறேன்.நீ ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு ரூமை விட்டு வெளியே சென்றான் கார்த்திக்.

அவன் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் திரும்ப திரும்ப அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்க அவளையும் அறியாமல் அவளுடைய கண்கள் கண்ணீரை அவளுக்கு மருந்தாக கொடுத்தது.அப்படியே அவளும் தூங்கி போனாள் ராஜி.

மதியம் அவள் முழித்து பார்க்கும் போது அவள் எதிரே இருந்து விகடனை புரட்டி கொண்டிருந்தான்.அவள் எழுந்து பார்க்கும் போது இப்ப எப்படி இருக்கு பரவா இல்லையான்னு கேட்டான் கார்த்திக்.ம்ம்ம்ம்ம்ம் பரவா இல்லை.நான் போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துடுறேன்னு சொல்லிவிட்டு பேஸ் வாஷ் செய்து வந்தாள் ராஜி.

சாப்பிடலாமா பசிக்குதுன்னு கேட்டாள் ராஜி.ம்ம்ம்ம்ம்ம் கண்டிப்பா.போலாம்னு சொல்லி விட்டு டைனிங் டேபிள் நோக்கி சென்றான் கார்த்திக்.அவனை பின் தொடர்ந்து சென்ற ராஜி பிளேட்டை எடுக்க செல்ல நீ உக்காரு.நான் வைக்கிறேன்ன்னு சொல்லிவிட்டு அவளுக்கு பிளேட்டில் சாதம் வைத்து கொஞ்சம் ரசம் ஊற்றி அவளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ப்ரை செய்து அவளுக்கு கொடுத்தான்.அதை வாங்கி ஒரு வாய் சாப்பிட்ட ராஜி சாப்பாடு நன்றாகநன்றாக தோன்றியது.கசப்பாக இருந்த வாய்க்கு அந்த சாப்பாடு ருசியாக இருந்தது.

கார்த்திக் என்ன செய்கிறான் என்று ராஜி எதிரே பார்க்க அங்கு இன்னொரு பிளேட்டில் சாதம் வைத்து அதில் சிக்கன் குழம்பை ஊற்றிக்கொண்டிருந்தான் கார்த்திக்.

சிக்கெனை வைத்து அதை ரசித்து சாப்பிட தொடங்கினான் கார்த்திக்.அவ்வபோதுத ஆஹா,அருமை,சூப்பர்டா கார்த்திக்.பின்னிட்ட போ என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டான் கார்த்திக்.

அதை பார்த்த ராஜி எருமை எருமை எப்படி திங்குது பாரு.உடம்பு சரி இல்லாம ஒருத்தி இருக்கானு அக்கறை இல்லாம எப்படி பார்க்க வச்சி திங்குது பாரு. உனக்கு ஒரு நாள் இருக்கு என்று மனதில் நினைத்து கொண்டாள்.

அந்நேரம் பார்த்து கார்த்திக்கிற்கு விக்கல் வர தண்ணீர் எடுக்க அப்போது ராஜியை பார்க்க அவள் அவனை பார்ப்பதை தவிர்த்து தலை குனிந்து சாப்பிடுகிற மாதிரி நடித்தாள்.அவள் உதட்டின் ஓரம் ஒரு குறுஞ்சிறுப்பு தோன்றியதை கார்த்திக் கவனித்து விட்டான்.

யாரும் நான் சாப்பிடுறதை பார்த்து கண்ணு வைக்க வேண்டாம்.வேணும்னா எடுத்து சாப்பிடலாம்.ஆனா டாக்டர் ஹெவி புட் சாப்பிட கூடாதுன்னு சொல்லிருக்காங்க.

ஹலோ நான் ஒன்னும் கண்ணு வைக்கல.நீ கொஞ்சம் மூடிட்டு சாப்பிடுறியா.உனக்கு விக்கல் வந்துச்சுன்னா தண்ணி எடுத்து குடி.அதுக்கு ஏன் என்னைய குறை சொல்ற.

அவன் பதில் பேசாமல் சாப்பிட்டான்.அன்று ராஜிக்கு சீக்கிரமே உடல் சரி ஆகி விட அடுத்து வந்த இரண்டு நாட்கள் இருவரும் பேசாமல் இருந்து கொண்டனர்.

பின் ஒரு நாள் ராஜியிடம் உன்னை அத்தை பார்க்கணும்னு சொன்னாங்க.உடம்பு சரி இல்லனு சொன்னேன்.உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க.போயிட்டு வரலாமான்னு கேட்டான் கார்த்திக்.

லூசு உன்னை யாரு எங்க அம்மாகிட்ட சொல்ல சொன்னா.அவுங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டு இருப்பாங்க.எதுவுமே கேட்டுட்டு செய்ய மாட்டியா.

நான் என்ன பண்ண.போன் பண்ணாங்க.நீ எங்கன்னு கேட்டாங்க.உடம்பு சரி இல்லன்னு சொன்னேன்.நம்ம வீட்ல வேற ஆள் இல்லையா.அதான் உன்னை அங்க கூட்டிட்டு வர சொன்னாங்க.சரி உனக்கு இஷ்டம் இல்லனா விடு.நான் கால் பண்ணி அவளுக்கு வர விருப்பம் இல்லனு சொல்லிடுறேன்.

ஒன்னும் பண்ண வேண்டாம்.அதான் எனக்கு இப்ப.சரி ஆகிடுச்சுல்ல.ஓஹோ நான் இங்க இருக்குறது உனக்கு தொந்தரவா இருக்குன்னு சொல்லு.நான் இங்க இல்லனா தண்ணி அடிக்கலாம்.ஜாலியா இருக்கலாம்னு பிளான் பண்ற அப்படித்தான.

அப்பா செம ஷார்ப் நீ.கிளம்பலாமா.ரெண்டு நாளைக்கு தேவையான டிரஸ் எடுத்து வச்சுக்கோ.
ஹாபன் ஹவர்ல கிளம்பனும்.நான் பிரெஷ் ஆகிவிட்டு வந்துடுறேன்னு சொல்லிவிட்டு குளிக்க சென்றான் கார்த்திக்.

பின் இருவரும் ராஜியின் அம்மா வீட்டுக்கு காரில் சென்றனர்.மாப்பிள்ளையும் பொண்ணும் வருவதை பார்த்த லட்சுமிக்கோ ரொம்ப சந்தோசம்.இருவரையும் வரவேற்று குடிக்க டீ கொடுத்தாள்.

என்ன திடீர்னு ரெண்டு பேரும் வந்துருக்கீங்க.இவள் வேறு துணி எல்லாம் கொண்டு வந்துருக்கா.என்ன ஆச்சு என்று கேட்டாள்.

அது ஒன்னும் இல்லை அத்தை அப்பா அம்மா ரெண்டு பேரும் காசி போயிருக்காங்க.நான் வேற ஆபிஸ் போய்டுவேன்.வீட்ல இவள் மட்டும் தனியா இருப்பா.ரெண்டு நாளைக்கு முன்னாடி இவளுக்கு உடம்பு சரி இல்லை.அதான் அவுங்க வரும்வரைக்கும் ராஜி இங்க இருக்கட்டும்னு தோணுச்சு.ஏன் அவள் இங்க இருக்க கூடாதா.

அப்பா அம்மா காசி போனது எனக்கு தெரியாதுப்பா.அதுவும் இல்லாம இது அவள் பொறந்த வீடு எப்ப வேணும்னாலும் அவள் இங்க வரலாம்.அவள் இல்லாம நீ சாப்பாட்டுக்கு அங்க தனியா என்ன பண்ணுவ

அதெல்லாம் நான் சமாளிச்சுப்பேன் அத்தை.நீங்க என் பொண்டாட்டிய நல்லா பாத்துக்கோங்க.அது போதும்.

அங்கு நடந்ததெல்லாம் பார்த்து கொண்டிருந்த ராஜிக்கு அப்போதுதான் எல்லாம் புரிந்தது.அம்மாவுக்கு எந்த விஷயமும் தெரியாது என்று.கார்த்திக் தனக்காகத்தான் எல்லாம் செய்கிறான் என்று உணர்ந்தாள்.

நானும் அதான்மா சொன்னேன்.எனக்கு ஒன்னும் பயம் இல்லை.நான் இருந்துப்பேன்னு.இவன்தான் கேக்க மாட்டேங்குறான்.

ஏய் அது என்ன இவன்,அவன்னு சொல்லிட்டு.அவனை மரியாதையா பேசுடி.சின்ன வயசுல அப்படி கூப்பிட்ட.இப்பவும் அப்படியேவா இருப்ப

அத்தை அவள் அப்படியே கூப்பிடட்டும்.இதுல என்ன இருக்கு.அதுவும் இல்லாம அவ அப்படி கூப்பிடுறதுதான் எனக்கும் பிடிச்சுருக்கு.

சரிப்பா.இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்.முன்னாடி மாதிரி வந்ததும் ஓடிடாத.சரியா என்று சொல்லி விட்டு சமயல் செய்ய துவங்கினாள் லட்சுமி.

கார்த்திக்கை பார்த்த ராஜி என்ன சீன் போட்ரியா.நான் உன்னை கேட்டேனா.எனக்கு இங்க இருக்க பிடிக்கலை எங்க அம்மா வீட்டுல கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்னு
.இப்படி எல்லாம் செஞ்சி என்கிட்டே நெருங்கலாம்னு நினைக்காத.உடம்பு சரி இல்லாம இருந்தேன்.நீ ஹெல்ப் பண்ண.அதுக்கு தேங்ஸ்.

சரி.வேற எதாவது இருக்கா.

எதாவது சொல்லு.கோவப்படு.உன்னை எவ்ளோ இன்சல்ட் பண்றேன்.உனக்கு என்மேல கோவமே வராதா.

ஏன் கோவப்படணும் ராஜி.நான் பண்ணினதுக்கு நான் அனுபவிக்கிறேன்.நீ என்கிட்டே அந்நியோன்யமா பாசமா இருந்தா கூட எனக்கு இவ்ளோ சந்தோசமா இருக்குமான்னு எனக்கு தெரியல.ஆனால் நீ இப்படி சிடு சிடுன்னு பேசுறது,கோவப்படுறது இது தான் எனக்கு சந்தோசமா இருக்கு.இன்னும் உன்கிட்ட இதே மாதிரி நிறைய எதிர் பார்க்கிறேன்.

அப்போது அவனுக்கு போன் வர அதை எடுத்து கொண்டு வெளியே சென்றான் கார்த்திக்.

ரொம்ப அழகா நடிக்கிறான்.இப்படி பேசி பேசியே கவுத்துடுவான்.விழுந்துடாத ராஜி.திரும்பவும் லவ் கிவ்வுன்னு கஷ்டப்படாத என்று அவள் மனம் எச்சரித்தது.அதன் பின்பு சாப்பிட்டுவிட்டு அவன் கிளம்ப போவதற்கு முன் கார்த்திக் தன்னுடைய கிரெடிட் கார்டை எடுத்து ராஜியிடம் கொடுத்து விட்டு சென்றான்.
அவனுடைய கிரெடிட் கார்டை ராஜியிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தான் கார்த்திக்.

வரும் வழி எங்கும் அவனுக்கு ராஜியின் நினைவாகவே இருந்தது.அவள் இல்லாத இனி வரும் நாட்களை எவ்வாறு கழிக்க முடியும்.

ச்ச மடையா மடையா.ஏன்டா அவளை கொண்டு போய் விட்டுட்டு வந்த.மெண்டல் மெண்டல்.அவள் இல்லாமல் என்ன செய்ய போற.

அவகூட சண்டை போட்டுட்டு இருந்தால் கூட சந்தோசமா இருக்கும்.அவளே இல்லனா.எனக்கு வேணும்.பெரிய இவனாட்டும் கொண்டு போய் விட தெரிஞ்சுதுல.இப்ப அனுபவி என்று தன்னை தானே கடிந்து கொண்டான்.

இங்கோ ராஜியின் வீட்டில் அவள் மாடியில் உள்ள ரூமில் இருந்து தனியாக யோசித்து கொண்டிருந்தாள்.

அப்போது அவளுடைய தங்கை சக்தி அவள் முதுகில் தொட அப்போது தான் சுயநினைவுக்கு வந்தவளாய் திரும்பினாள் ராஜி.

என்ன மேடம் வீட்டுக்காரனை விட்டு இருக்க முடியலையோ.ஒரே சிந்தனையை இருக்கு.

ஆமாடி.அவன் நினைப்பாவே இருக்கு.அங்க தனியா இருந்து பாவம் என்ன கஷ்டப்படுவனோ.

அப்பா புருஷன் மேல எவ்ளோ அக்கறை.முடியல

ஹேய் என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது. நக்க.லா.நாளைக்கு உனக்கும் கல்யாணம் ஆனா தெரியும் என் பீலிங்.

தான் நடிக்கிறோம்னு எந்த வகையிலும் சக்திக்கு தெரிந்துவிடக்கூடாது என்று தெளிவாக இருந்தாள் ராஜி.அதற்கேற்றார் போல் முகத்தையும் சோகமாக வைத்து கொண்டாள்.

இங்கு வீட்டிற்கு சென்ற கார்த்திக் கதவை திறந்து விட்டு லைட்டை ஆன் செய்தபோது அங்கு சோபாவில் ராஜி கோவமாக அவனை முறைத்து கொண்டிருந்தாள்.

வீட்ல பொண்டாட்டிய தனியா விட்டுட்டு எங்க இவ்ளோ நேரம் ஊர் சுத்திட்டு வர.நீயெல்லாம் எப்படித்தான் லவ் பண்ணினியோ.

ஹே இப்பதான் உன்ன உங்க வீட்ல விட்டுட்டு வந்தேன்.அதுக்குள்ள நீ இங்க எப்படி.

என்ன விரட்டி விடுறதுலையே குறியா இரு.போடா உனக்கெல்லாம் நான் செட்டே ஆகமாட்டேன்.போடா என்று சொல்லிவிட்டு கிட்சன் பக்கம் சென்றாள் ராஜி.

ஹேய் ராஜி நில்லு.ஐ ஆம் சாரி.ஒரு நிமிஷம் நில்லு.ப்ளீஸ் என்று ஓடிச்சென்ற கார்த்திக் அவள் கைகளை பிடிக்க அவன் கைகள் காற்றில் பறந்து விழுந்தது.

அவன் கண்களை கசக்கி கொண்டு பார்க்க அங்கு யாரும் இல்லை.டைனிங் டேபிளில் இருந்து அவன் யோசிக்க தொடங்கினான்.அது பிரம்மை என்று தெரிய சில வினாடிகளே தேவை பட்டது.

நிஜமாவே நீ கார்த்திக்கை லவ் பண்றியா அக்கா

இது என்னடி புதுசா கேக்குற.அவன் என் புருஷண்டி.அவனை லவ் பண்ணாம வேற யாரை நான் லவ் பண்ண போறேன்.

இல்லக்கா நீ இன்னும் அந்த ரமேஷ லவ் பண்றியோன்னு சின்ன சந்தேகம்.அதான் கேட்டேன்.

லூசாடி நீ.அவனுக்கு எப்போ கல்யாணம் ஆச்சோ அப்பவே நான் அவனை மறந்துட்டேன்.அப்பறம் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.இப்ப போய் நான் இன்னொருத்தன மனசுல நினைச்சுட்டு இருந்தா அது எவ்ளோ பெரிய கேவலம்.

அப்ப ஏன் நீயும் கார்த்திக்கும் வீட்டுக்கு வந்த உடனே அம்மா கிச்சன் உள்ள போனதுக்கு அப்பறம் சண்டை போட்டிங்க.

நாங்க எப்படி சண்டை போட்டோம்.சும்மா தேவை இல்லாம உலராத.

நாங்க ரெண்டு பெரும் பேசுனது இவளுக்கு எப்படி தெரியும்.சரி எதுவா இருந்தாலும் சமாளிப்போம் என்று எண்ணினாள் ராஜி.

அக்கா நான் உளறலை.நீதான் ஏதோ மறைக்கிற.நீங்க ரெண்டு பேரும் பேசினதல் நான் கேட்டேன்.மறைக்காம சொல்லு உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை.

ஏய் புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் அதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது.

சரி என்கிட்ட சொல்ல வேண்டாம்.அம்மாகிட்ட சொல்லு.நான் அம்மாகிட்ட உங்க ரெண்டு பேருக்கும் எதோ பிரச்சனையாம் அதான் கார்த்திக் உன்னை இங்க விட்டுட்டு போறான்னு சொல்லிடுறேன்.நீ அம்மாகிட்ட பேசிக்கோ

ஏய் லூசு.அப்படி எதுவும் பன்னி தொலைச்சிடாதடி.எங்களுக்குள்ள ஒரு பிரச்சனையும் இல்ல.என்ன கொஞ்ச நேரம் தனியா விடுறியா.ப்ளீஸ்

அப்ப என்ன பிரச்சனைனு சொல்லு.

ஒரு தடவை சொன்னா புரியாது உனக்கு.போடி.

நீ சரிபட்டு வரமாட்ட.அம்ம்ம்ம்ம்ம்மா.

ஹேய் கூப்பிடாத.சொல்லி தொலைக்கிறேன்.என்று அவள் வாயை பொத்தினாள் ராஜி.

யாரிடமாவது மனசுவிட்டு பேசினாள் நல்லா இருக்கும்.அதை இவளிடமே இப்போதைக்கு சொல்லி விடலாம் என்று ராஜிக்கு தோன்றியது.

சொல்லு

மௌனமாக இருந்த ராஜியின் கண்களில் நீர் சுரக்க தொடங்கியது.

அக்கா.சொலுக்க்க்க்க்க் என்று அவளை திருப்பிய ஷக்தி அவள் அழுவதை கண்டு ஏன்க்கா அழகுற என்று கேட்டாள்.

அவள் மார்பில் சாய்ந்து மேலும் விசும்பி விசும்பி அழுக ஆரம்பித்தாள்.
[+] 7 users Like bsbala92's post
Like Reply


Messages In This Thread
ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:50 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 12:57 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:06 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 04-11-2019, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 04-11-2019, 02:04 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 04-11-2019, 03:54 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:01 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:03 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:09 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-11-2019, 06:11 PM
RE: ஓகே கண்மணி - by Kedibillaa - 06-11-2019, 09:02 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 06-11-2019, 09:06 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 06-11-2019, 09:13 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 06-11-2019, 11:00 PM
RE: ஓகே கண்மணி - by Northpole7 - 04-12-2019, 08:10 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 05-12-2019, 08:51 AM
RE: ஓகே கண்மணி - by krishkj - 05-12-2019, 03:05 PM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 05-12-2019, 03:13 PM
RE: ஓகே கண்மணி - by opheliyaa - 08-12-2019, 11:23 PM
RE: ஓகே கண்மணி - by Krish126 - 10-12-2019, 04:07 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:17 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 24-02-2020, 01:27 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 24-02-2020, 02:36 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 25-02-2020, 12:00 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 25-02-2020, 03:45 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 26-02-2020, 05:41 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 28-02-2020, 10:27 AM
RE: ஓகே கண்மணி - by Remoella - 29-02-2020, 08:48 AM
RE: ஓகே கண்மணி - by Sri tamil - 29-02-2020, 12:20 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 01-03-2020, 04:12 AM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 06-03-2020, 04:05 PM
RE: ஓகே கண்மணி - by Yesudoss - 07-03-2020, 10:04 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:28 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:29 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 07-03-2020, 11:57 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 07-03-2020, 01:23 PM
RE: ஓகே கண்மணி - by Mookuthee - 07-03-2020, 04:34 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:41 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 07-03-2020, 05:43 PM
RE: ஓகே கண்மணி - by badboyz2017 - 07-03-2020, 06:57 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 07-03-2020, 10:22 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 07-03-2020, 10:57 PM
RE: ஓகே கண்மணி - by AjitKumar - 07-03-2020, 11:22 PM
RE: ஓகே கண்மணி - by Karmayogee - 07-03-2020, 11:43 PM
RE: ஓகே கண்மணி - by Sarran Raj - 07-03-2020, 11:47 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 07-03-2020, 11:52 PM
RE: ஓகே கண்மணி - by Dorabooji - 08-03-2020, 06:39 AM
RE: ஓகே கண்மணி - by Vettaiyyan - 08-03-2020, 11:12 AM
RE: ஓகே கண்மணி - by mulaikallan - 08-03-2020, 10:27 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 09-03-2020, 07:44 AM
RE: ஓகே கண்மணி - by Mech3209 - 09-03-2020, 05:48 PM
RE: ஓகே கண்மணி - by Losliyafan - 13-03-2020, 04:05 AM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-03-2020, 05:19 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-03-2020, 06:55 AM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 16-03-2020, 08:50 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 20-03-2020, 02:01 PM
RE: ஓகே கண்மணி - by Kanakavelu - 21-03-2020, 09:08 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 21-03-2020, 10:35 PM
RE: ஓகே கண்மணி - by Thangaraasu - 21-03-2020, 11:46 PM
RE: ஓகே கண்மணி - by sexycharan - 27-03-2020, 12:42 AM
RE: ஓகே கண்மணி - by zulfique - 28-03-2020, 11:02 AM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 30-03-2020, 11:44 PM
RE: ஓகே கண்மணி - by Kris12 - 05-04-2020, 09:37 AM
RE: ஓகே கண்மணி - by Dumeelkumar - 06-04-2020, 07:03 AM
RE: ஓகே கண்மணி - by kangaani - 14-04-2020, 07:57 AM
RE: ஓகே கண்மணி - by Samadhanam - 14-04-2020, 11:30 AM
RE: ஓகே கண்மணி - by jiivajothii - 13-05-2020, 09:08 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 13-05-2020, 09:53 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:42 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 13-05-2020, 11:45 AM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 13-05-2020, 01:56 PM
RE: ஓகே கண்மணி - by Chitrarassu - 13-05-2020, 08:47 PM
RE: ஓகே கண்மணி - by zulfique - 13-05-2020, 09:03 PM
RE: ஓகே கண்மணி - by adangamaru - 13-05-2020, 10:01 PM
RE: ஓகே கண்மணி - by kramuram - 13-05-2020, 10:37 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 08:00 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:16 PM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 14-05-2020, 12:18 PM
RE: ஓகே கண்மணி - by BossBaby - 14-05-2020, 07:30 PM
RE: ஓகே கண்மணி - by selvaalion - 14-05-2020, 10:02 PM
RE: ஓகே கண்மணி - by Mr Strange - 14-05-2020, 10:54 PM
RE: ஓகே கண்மணி - by Remoella - 19-05-2020, 08:57 AM
RE: ஓகே கண்மணி - by kramuram - 21-05-2020, 01:08 PM
RE: ஓகே கண்மணி - by Charles - 25-05-2020, 02:32 AM
RE: ஓகே கண்மணி - by Mahesh111 - 16-06-2020, 12:56 PM
RE: ஓகே கண்மணி - by dharmarajj - 20-07-2020, 12:10 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 20-07-2020, 07:41 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 20-07-2020, 11:48 AM
RE: ஓகே கண்மணி - by kathalrani - 20-07-2020, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by xbiilove - 15-08-2020, 06:45 AM
RE: ஓகே கண்மணி - by Deva2304 - 16-08-2020, 08:23 AM
RE: ஓகே கண்மணி - by manigopal - 27-08-2020, 02:34 PM
RE: ஓகே கண்மணி - by Rangushki - 28-08-2020, 09:13 AM
RE: ஓகே கண்மணி - by praaj - 09-11-2020, 06:08 PM
RE: ஓகே கண்மணி - by Mottapayyan - 26-12-2020, 06:04 PM
RE: ஓகே கண்மணி - by Mood on - 06-07-2021, 11:19 PM
RE: ஓகே கண்மணி - by manigopal - 07-07-2021, 11:51 AM
RE: ஓகே கண்மணி - by bsbala92 - 06-07-2022, 07:55 PM
RE: ஓகே கண்மணி - by NovelNavel - 09-07-2022, 09:52 AM
RE: ஓகே கண்மணி - by sasi sasi - 04-12-2022, 08:17 PM



Users browsing this thread: 12 Guest(s)