Romance மெய்நிகர் பூவே
கார்த்திக்கிற்கு அவள் சொன்னதில் இருந்து வேலையே ஓடவில்லை. வருவாளா மாட்டாளா என்று அடிக்கடி ராஜியின் டேபிளை பார்த்து கொண்டிருந்தான்.


ராஜிக்கும் இது பிடித்திருந்தது. கார்த்திக்கை ஏங்க வைப்பது. அவளை பொறுத்த வரை இது ஒரு பொன்னான வாய்ப்பு. அதை இழக்க விருப்பம் இல்லை. ஆனாலும் அவனை ஏங்க வைக்க வேண்டும். அது அவளுக்கு சந்தோசத்தை கொடுத்தது. ஊடல் மோதல் அன்பு சண்டை  இவை அனைத்துமே காதலில் இருந்தால் தானே ரசிக்கும்.


ஈவினிங் அனைவரும் கிளம்ப ராஜியும் கிளம்பினாள். கார்த்திக்கிற்கு திக்கென்றானது.அய்யோ சொன்ன மாதிரியே போறாளே. நல்லா பழிவாங்குறா. அம்மா போன் பன்னி நான் எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன். பதட்டத்தில் போனை எடுத்து ராஜிக்கு கால் செய்தான்.


போனை எடுத்த ராஜி “ ஹலோ சொல்லுங்க. “


“ ஹேய் என்ன கிளம்பிட்ட. இன்னைக்கு வெளிய போகலாம்னு சொன்னேன்ல. “

“ நான் தான் சொன்னேன்ல நீங்க கூப்பிட்ட தோரணை எனக்கு பிடிக்கலன்னு. கூப்டுங்க. “


“ ரொம்ப ஓவரா பண்ற. உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். ப்ளீஸ் வா. “


“ பார்ரா. ம்ம்ம்ம். ப்லீஸ்லா சொல்றீங்க. ரொம்ப கெஞ்சுறீங்களா. “


“ கெஞ்சலா செய்யல. சீக்கிரம் வா. “


“ இல்லையா. அப்போ நான் வரல. “


“ ஹேய் ஆமா ஆமா. கெஞ்சுறேன். வா. “


“ இல்ல வந்துடுவேன். ஆனா மீரா இருக்காளே. அவ கிட்ட என்ன சொல்றது. “


“ அவகிட்ட எதாவது பொய் சொல்லிட்டு கழட்டி விட்டுட்டு வா. “


“ துருவி துருவி கேட்பாளே. என்ன சொல்ல அவகிட்ட. “


“ அதுக்காக நானா அவகிட்ட பேச முடியும். நீதான் எதாச்சும் சொல்லணும் . “


“ இது நல்லா இருக்கே. நீங்களே எதாச்சும் சொல்லி அவகிட்ட பேசிடுங்களேன். “


“ என்ன விளையாடுறியா. மரியாதையா வா. இல்லனா. “


“ என்ன சொன்னீங்க. இல்லன்னா. சொல்லுங்க. “


“ ஒன்னும் இல்ல. அவகிட்ட எதாச்சும் சொல்லிட்டு நீ மட்டும் வா. “


“ சரி இவ்ளோ சொல்றீங்க. நான் வரேன் பட் ஒரு கண்டிஷன். “


“ என்ன கண்டிஷன். நீ வரேன்னு சொன்னதே பெரிய விஷயம். நான் கேட் கிட்ட வெயிட் பண்றேன். நீ ஆபீஸ் பக்கத்துல இருக்குற பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணு. அங்க இருந்து உன்ன பிக்அப் பண்ணிக்கிறேன். கேப்ல போய்டலாம். கண்டிஷன அங்க வச்சி சொல்லு. “


“ கண்டிஷனே அதான். பைக்ல தான் நான் வருவேன். கேப் னா நான் வரல. “


“ என்னது பைக்லையா. சான்சே இல்ல. “


“ அப்போ நானும் உங்க கூட வரது சான்சே இல்ல. “


“ சரி சரி வந்து தொலையுறேன். கிளம்பு நீ. “


“ லவ் யூ மாமா. பை. “


இந்த மயிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. காலை கட் செய்தான்.


ராஜி மீராவிடம் சென்று அப்பா தனக்கு அலையன்ஸ் பார்த்திருப்பதாகவும் அவரை மீட் செய்ய போவதாகவும் கூற மீராவும் அவளுடன் வருவதாக சொன்னாள்.


ஆனால் ராஜி அவளை வேண்டாம் என்று சொல்லி தவிர்த்தாள். மீராவிற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் தோழிக்காக சரி என்று ஒப்புகொண்டாள்.


மீரா கம்பெனி கேப்பில் ஏறி சென்ற பின் ராஜி பஸ் ஸ்டான்ட் நோக்கி சென்றாள். இங்கோ அரவிந்த் கார்த்திக்குடன் வழக்கமாக செல்வதால் கார்த்திக்கிடம் எங்கு செல்வதாக கேட்க கார்த்திக் அவனிடம் ஷாப்பிங் என்று சொல்லி முடித்தான்.


அரவிந்தும் அவனுடன் வருவதாக சொல்ல கார்த்திக் அவனை கழட்டி விட்டு பார்க்கிங் வந்து பைக்கை எடுத்தான். பைக்கை கிளப்பி பஸ் ஸ்டான்ட் செல்ல ராஜி அங்கு காத்து கொண்டிருந்தாள்.


ஹெல்மெட்டை கழட்டாமல் அவள் அருகில் சென்று போகலாமா என்றான்.


“ யாரு நீங்க. வந்ததும் போகலாம்னு கேட்குறீங்க. “


“ ஏய் நான் தான் கார்த்திக். ஏறு போகலாம் “ ஹெல்மெட்டை கலட்டி விட்டு சொன்னான்.


“ ரோட்ல வச்சி இப்படி கேட்டா என்ன எப்படி நினைப்பாங்கலாம். அதை கழட்டிட்டு தான் கேட்டா என்ன. “



“ சரி ஏறு முதல்ல. போகும் போது பேசிக்கலாம். “



ராஜி அவன் தோலை பிடித்து ஏற கார்த்திக் தோலை சிலுப்பினான். ராஜி எஸ் என்பது போல செய்துவிட்டு பைக்கில் இருபுறமும் கால்களை போட்டு அமர்ந்து கொண்டாள்.


கார்த்திக் வேண்டா வெறுப்பாக பைக்கை உறுமிக்கொண்டு ஓட்டினான்.


“ ஹலோ சார். ரொம்ப முருக்காதீங்க. சகிக்கல. “ கைகளை அவன் இரண்டு தோளிலும் வைத்து கொண்டாள்.  


“ ஏய் கையை எடுடி முதல்ல. “


“ ஏன் பிடிக்கலையா உங்களுக்கு. “


“ கன்றாவியா இருக்கு. கைய எடு. “


“ ஒஹ் நீங்க அப்படி சொல்றீங்களா. இருங்க “ சொல்லி விட்டு அவன் இடுப்பை சுற்றி பிடித்து கொண்டாள்.

“ ஏய் ச்சீ ச்சீ. “
பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு “ என்னடி இதெல்லாம். அவள் கையை தட்டி விட்டான்.


“ நீங்க தான கையை எடுக்க சொன்னீங்க. அதன் நான் கற்பூரம் மாதிரி புரிஞ்சிகிட்டு இடுப்பை பிடிச்சிகிட்டேன். இதுவும் பிடிக்கலையா. “


“ நீ என்ன தொடாம இருந்தாலே போதும்னு சொன்னேன். “


“ அப்போ நான் எப்படி தான் பேலன்ஸ் பண்றது. “


அவள் கைகளை எடுத்து பின்னால் உள்ள சீட் கம்பியில் வைத்து இப்படி பேலன்ஸ் பண்ணு. கையை அங்கயே வச்சிக்கோ. சரியா.


மூஞ்சை தொங்க போட்டு கொண்டு “ ம்ம்ம்ம் போங்க “ என்றாள்.


சிறிது தூரம் சென்றிருக்க ஸ்பீட் பிரேக்கரில் பைக்கை ஏற்றி இறக்க அவன் தோளில் ராஜி முன்னோக்கி சாய அவள் மார்பகங்கள் கார்த்திக்கின் முதுகோடு அழுத்த கார்த்திக் பைக்கை நிறுத்தினான்.


ராஜிக்கு பெண்மைக்கே உரிய நாணம் வர தலையை குனிந்து கொண்டாள். ஒரு செகண்ட் தான் என்றாலும் அதில் காமம் தோன்றவில்லை.


மனதை கொள்ளையடித்தவன் தன்னை கொள்ளை கொள்ளவில்லை என்றாலும் அவனுடன் ஏற்பட்ட முதல் தீண்டல் இது. எதேச்சையாக நடந்திருந்தாலும் இதுவும் காதலில் ஒரு வகையான சந்தோசமே.


ராஜிக்கு அந்த தீண்டல் மனம் முழுவதும் இனம் புரியாத சந்தோசத்தை கொடுத்தது.


கார்த்திக் பைக்கை விட்டு இறங்கி “ ஏய் நீ முதல்ல தள்ளி உக்காரு. இப்போ ஏன் என்மேல சாஞ்ச “


“ நான் எப்போ சாஞ்சேன். நீங்க தான் ஸ்பீட் ப்ரேக்கர்ல வேணும்னு ப்ரேக் போட்டீங்க. “


“ நான் போட்டேனா.”


“ பின்ன நான் வேணும்னு சாஞ்சென்னு சொல்றீங்களா. “


“ அம்மா தாயே. நீ ஒன்னும் பண்ண வேண்டாம். நீ ரூமுக்கு போற வரைக்கும் பேசாம வா. என்னோட தோளை பிடிச்சிக்கோ. மேல மட்டும் உரசாத. “


“ சரிங்க மாமா. கோவபடாதீங்க. வாங்க வாங்க. “


கார்த்திக் பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்ய ராஜி அவன் தோள்களை பற்றி கொண்டாள். பைக்கை நேராக பீச்சிற்கு செலுத்தினான்.

பீச்சில் இறங்கியதும் இருவரும் இடைவெளி விட்டு நடந்து சென்றனர். ராஜி சந்தோசமாக முகத்தில் புன்னைகையுடன் நடக்க கார்த்திக் எப்படி ஆரம்பிப்பது என யோசித்து கொண்டிருந்தான்.


கடல் காற்றில் அவள் நெற்றியில் முடிகள் அசைய ராஜி அதை ஒதுக்கி விட்டு கொண்டே நடந்தாள். கார்த்திக் அவள் முகத்தை பார்த்து சொல்ல வர அவள் முடிகள் அசையும் அழகை பார்த்து மெய் மறந்தான்.


கார்த்திக் ஸ்கிப் பண்ணு. பார்க்காத. தலையை சிலுப்பி கொண்டு வேறு பக்கம் திருப்பி கொண்டான்.


“ அம்மா காலையில போன் பண்ணினாங்க. “ கார்த்திக்கே ஆரம்பித்தான்.


“ அத்தையா. என்ன விஷயமா கால் பண்ணினாங்க. “


“ நீ இங்க வந்ததுல இருந்து அம்மா கிட்ட பேசவே இல்லையா. “


“ இல்ல. பேசல. நான் பேசினா அவுங்க உங்க கிட்ட போன் கொடுக்க சொல்லுவாங்க. நான் உங்கள எங்க போய் தேடுறது. அப்புறம் மீரா வேற கூடவே இருக்குறதுனால பேசவும் முடியல. இப்போ வரைக்கும் அத்தை எனக்கு கால் பண்ணல. “


“ இன்னைக்கு கண்டிப்பா பண்ணுவாங்க.”


“ எப்படி சொல்றீங்க.”

“ நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் ஊருக்கு போகணும். தாலி பிரிச்சி போடணும்னு என்கிட்ட சொல்லி வர சொன்னாங்க. ரெண்டு பேரும் வரணுமாம். “


“ இதை நீங்க ஆபிஸ்ல வச்சே என்கிட்ட சொல்லிருக்கலாமே. “


“ உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க. மே பி இன்னைக்கு நைட்குள்ள கால் பண்ணுவாங்க. ஒரு வேலை என்னை கேட்டாங்கன்னா. அதன் நான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்.”


“ அப்போ உங்களுக்கா தோனல. அத்தைக்காக தான் என்ன இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க. இல்ல. “


“ ஆமா. நான் தான் எப்போதும் சொல்றேனே. ஐ அம் நாட் இண்டரெஸ்ட்டட் இன் லவ் னு. “


“ அய்யோ ஆரம்பிக்காதீங்க. அத்தை கால் பண்ற வரை தான் நீங்க என்கூட இருப்பீங்க. அப்படித்தான. “


“ எக்ஸ்சக்ட்லி. கற்பூர புத்தி புரிஞ்சிகிட்ட. “


( ஒஹ் அப்படி போகுதோ கதை . மறுபடியும் நடிப்பா. இப்போ என்னோட பெர்பாமேன்சை பாரு. )


“ சரி ஓகே டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. எனக்கு இப்போ மல்லிகை பூ வேணும். வாங்கி தரீங்களா. “


“ பூவா. வேணும்னா நீயே வாங்கிக்கோ. என்னால எல்லாம் முடியாது. “


“ சரி ஓகே நான் கிளம்புறேன். அத்தை கிட்ட நீங்களே பேசிக்கோங்க. பை “


“ ஹே எங்க போற. இருடி “


“ ஆமா நான் கேட்டது கிடைக்கலன்னா நான் போய்கிட்டே இருப்பேன். சிம்பிள் “


“ இரு வங்கி தொலைக்கிறேன். “

கார்த்திக் பூ வாங்கி வந்து அவளிடம் கொடுக்க ராஜி திரும்பி நின்றாள்.


“ அதான் வாங்கிட்டு வந்துட்டேன்ல பின்ன ஏன் திரும்பி நிக்குற, இந்தா பிடி. “


( அட அறிவு கெட்ட புருஷா பின்னாடி திரும்பி நின்னா நீ வச்சி விடணும்னு அர்த்தம். ரொமாண்டிக் பீலே இல்லாதவனா இருக்கியே. )


அந்த நேரம் அங்கு வந்த பூக்கார பாட்டி “ தம்பி அது திரும்பி நிக்குதுல்ல. அதுக்கு என்ன அர்த்தம்னு உனக்கு புரியலையா. பூவை நீ வச்சி விடணும்னு அர்த்தம். சும்மா வச்சி விடு நைனா. “ என்றாள்.


பாட்டி நீ வேற ஏன் பாட்டி முனுமுனுத்து கொண்டே அப்படியா என்றான் ராஜியை பார்த்து.

ராஜி தலை குனிந்து கொண்டே வெட்கத்துடன் சிரித்தாள். ஆமாம் என்பது போல தலையை அசைத்தாள்.


“ எனக்கு அதெல்லாம் தெரியாது. இந்தா நீயே வச்சிக்கோ. “


“ மாமா நான் திரும்பவும் சொல்றேன். நீங்க நான் சொல்றதை செய்யலைன்னா. “


“ போதும் போதும். திரும்பு. “


அவள் முடிகள் கார்த்திக்கின் முகத்தில் காற்றில் பறக்க கார்த்திக் கோவத்துடன் அவள் தலையில் அதை வைத்து விட்டான்.


ஒரு பெண்ணிற்கு இதை விட வேறு எந்த சந்தோசம் வேண்டும். மனம் கவர்ந்தவனுடன் அருகாமை, அவனின் தீண்டல்கள், அவன் வாசம், அவன் கையால் சூடும் பூ, அவன் வங்கி தரும் புடவை, அவ்வப்போது அவன் தரும் இன்ப அதிர்ச்சி, அவனிடம் இருந்து கிடைக்கும் பாராட்டுக்கள். ஒரு பெண்ணின் அதிக பட்ச ஆசை ஒரு ஆணிடம் இவை மட்டுமே.


ராஜிக்கு இதில் பாதி கிடைத்தாயிற்று. கடல் அலை போல அவள் மனம் அங்கு துள்ளி கொண்டிருந்தது.


“ போன் வருதா பாரு. “

“ அதுக்குள்ள என்ன அவசரம். “


“ என் கஷ்டம் என்னோட. உன்கூட இந்த ஒரு மணி நேரம் கூட இருக்க முடியல. லைப் லாங் நான் எப்படி இருக்க முடியும். “


“ கார்த்திக் உங்க கூட நானும் பைக்ல வருவேன் பீச் போவேன்னு நினைச்சிருக்கேன். அது இன்னைக்கு நடந்துருக்கு. அதே மதி உங்க கூட உங்க ரூம்ல இருப்பேன்னு நான் நம்புறேன். அதுவும் கண்டிப்பா நடக்கும்.”


“ சத்தியமா நடக்காது. போகலாமா. “


“ போகலாம்னா எங்க போறதாம். எனக்கு எங்க வேணும்னாலும் ஓகே. “


“ அம்மாக்கு நீயே கால் பண்ணி பபேசிடேன். “


“ ஹலோ என்ன அப்ளிகேஷனா. ஆனா அதுக்கு லஞ்சம் கொடுக்கணுமே. “


“ லஞ்சமா. நான் என்ன அப்ப்ளிகேஷன் போட்டேன் .”


“ இப்போ சொன்னீங்களே நீயே கால் பண்ணி பேசிடேன்னு. இப்போ நான் கால் பண்ணி பேசிட்டேன்னு வைங்க நீங்க என்ன அம்போன்னு விட்டுட்டு போய்டுவீங்க. அப்றம் நான் என்ன பண்றதாம். சோ நான் சொல்றதை செய்யுங்க. நானே பேசுறேன். “


“ சரி சொல்லு. என்ன பண்ணனும் இப்போ. “


“ எனக்கு ஷாப்பிங் போகணும். அதுக்கு முண்டி சாப்பிடனும். எங்கையாச்சும் சாப்பிட கூட்டிட்டு போங்க. “


“ இம்சை உன்னால. வா போகலாம். “


“ ஓகே. “. இருவரும் பீச்சை விட்டு வெளியே வந்து ரெஸ்டாரென்ட் நோக்கி சென்றனர்.
[+] 8 users Like bsbala92's post
Like Reply


Messages In This Thread
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 24-06-2019, 11:46 PM
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 28-06-2019, 08:38 PM
RE: மெய்நிகர் பூவே - by bsbala92 - 24-02-2020, 12:48 PM



Users browsing this thread: 14 Guest(s)