11-02-2019, 10:30 AM
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 4
மறுநாள் சத்யன் சொன்னதுபோலவே எல்லாம் தயாரானது, மான்சியின் அம்மாவும் தங்கையும் திருமணம் முடிந்து வருபவர்களுக்கு சத்யன் வீட்டில் உணவு சமைத்தார்கள், பாட்டி தனது கொள்ளுப்பேரனை இடுப்பில் இடுக்கிக்கொண்டு பம்பரமாய் ஊரை ஒரு வலம் வந்தார்கள், நெருங்கிய சொந்தங்கள் சிலருக்கு சொல்லிவிட்டு ஊர் அம்மன் கோயிலில் எளிமையான ஒரு திருமணத்திற்கு ஆகவேண்டியதை கவனித்தார்கள்,
மான்சி சத்யன் சொன்னதுபோல் குளித்துவிட்டு அதே முழுக்கைச் சட்டையுடன் சத்யன் எடுத்துவரும் கூரைப்புடவைக்காக சத்யன் வீட்டு வாசலில் நின்று பாதையில் தன் விழிகளை பதித்து காத்திருந்தாள்,,
மணி பதினொன்று ஆனது சத்யனை கானவில்லை, மான்சி தங்கை வேறு அடிக்கடி ஓடிவந்து “ என்னக்கா இன்னும் மாமாவை கானோம், என்னாச்சுன்னு தெரியலையே” என்று உள்ளே வைக்கும் சாம்பாருக்கு இங்கே வந்து இவள் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுப் போனாள்
மான்சிக்கு படபடப்பாக இருந்தது, இந்த அவசரக் கல்யாணம் நின்றுவிடுமோ, என் வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் நிலைக்காதோ, எனக்கு சத்தியோட பொண்டாட்டியா வாழ கொடுப்பினை இல்லையோ, என் சத்திக்கு என்னாச்சுன்னு தெரியலையே, என்று குழம்பி தவித்தாள்,அந்த கொஞ்சநேர காத்திருப்பில் மான்சியின் மனம் இந்த உலகையே ஒருமுறை சுற்றி வந்தது
ஏதோ ஞாபகம் வந்தாற்போல் வீட்டுக்குள் ஓடி கூடத்தில் இருந்த பூஜை அலமாரியின் கதவைத்திறந்து உள்ளே இருந்த விளக்கை ஏற்றி, அங்கிருந்த முருகனின் படம் முன்பு கைகூப்பி நின்றாள், “ என் சத்திக்கு எதுவும் ஆயிருக்ககூடாது முருகா” என்று அவள் மனம் மறுபடியும் மறுபடியும் அதையே உருப்போட்டது,
கண்களில் கண்ணீர் வழிய கடவுளை கைகூப்பி நிற்கும் மகளை ஆச்சர்யமாக பார்த்தாள் மான்சியின் தாய், தன் மகள் தெய்வத்திடம் வேண்டி நின்று இப்போதுதான் பார்க்கிறாள்,
வீட்டுக்குள் வந்த பாட்டி மான்சி கண்ணீருடன் நிற்பதைப் பார்த்து நெகிழ்ந்து போனார், இனிமேல் தன் பேரனின் வாழ்க்கை சரியாகிவிடும் என்ற நிம்மதி ஏற்ப்பட்டது, மான்சியின் காதல் அவனை எடுத்த எந்த காரியத்திலும் உடனிருந்து ஜெயிக்கவைக்கும் என்ற நம்பிக்கை உண்டானது
மான்சி மறுபடியும் வாசலுக்கு வந்தாள், அவள் கண்ணில் வழிந்த கண்ணீர்க்கு பதில் சொல்வதுபோல் சத்யன் யாருடனோ மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினான், மான்சி புன்னகையுடன் அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டாள்
உதடுகளில் தேங்கிய சிரிப்புடன் அவளை நெருங்கிய சத்யன் “ ஸாரி மான்சி ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேன், தென்காசிலேருந்து இங்க வர பஸ் கிடைக்கலை, அப்புறமா இவர்கிட்ட விஷயத்தை சொல்லி ஹெல்ப் கேட்டேன், உடனே ஹெல்ப் பண்ணார்” என்றவன் அந்த நபரிடம் திரும்பி “ ரொம்ப நன்றிங்க சார், இவதான் சார் என்னோட மனைவி இன்னும் கொஞ்சநேரத்தில்” என்று பெருமை பொங்க அறிமுகம் செய்தான்
மான்சியை பார்த்து அந்த நபர் கைகூப்பி வணக்கம் சொல்ல, மான்சியும் பதிலுக்கு வணக்கம் சொன்னாள், “ எனக்கு நேரமாச்சு வர்றேன் தம்பி” என்று அந்த நபர் விடைபெற்றார்
மான்சியை நெருங்கி அவளை உற்றுப்பார்த்த சத்யன் “ அழுதியா மான்சி? ” என்றான்
மான்சி எதுவும் சொல்லாமல் தலையை குனிந்துகொண்டாள்
“ கேட்குறேன்ல்ல பதில் சொல்லு அழுதியா மான்சி, ஏன் அழுத?” என்று மறுபடியும் கேட்டான்
அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி “ ஒன்னைய இவ்வளவு நேரமா கானோம்னு அழுதுட்டேன் சத்தி” என்று சொல்லும்போதே மறுபடியும் அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது
அப்போது அங்கே வந்த மான்சியின் அம்மா “ ஆமா தம்பி என்னிக்கும் சாமி கும்பிடாதவ இன்னிக்கு அழுதுக்கிட்டே உங்களுக்காக சாமி கும்பிட்டா தம்பி, நீங்க வர லேட்டாயிருச்சுன்னு ரொம்ப பயந்துட்டாப் போலருக்கு” என்று சத்யனிடம் கூறினாள்
கையிலிருந்த பொருட்களை பக்கத்தில் இருந்த மான்சியின் அம்மாவிடம் கொடுத்துவிட்டு, மான்சியின் கையைப்பற்றி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து “ ம் இதுக்கெல்லாமா அழுவுறது, எனக்கு வீரமா பேசுற மான்சிய தானே புடிக்கும், இந்த அழுமூஞ்சி மான்சிய புடிக்கலையே என்னப் பண்ணலாம்?” என்று யோசிப்பவன் போல நடித்து “ பேசமா வேறப் பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்” என்று குறும்புத்தனமாக பேசினான்