Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
டோனி ‘300’

இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனிக்கு ஒட்டுமொத்தத்தில் இது 300-வது 20 ஓவர் போட்டியாகும். இதில் சர்வதேச மற்றும் உள்ளூர், லீக் 20 ஓவர் ஆட்டங்களும் அடங்கும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர், உலக அளவில் 13-வது வீரர் என்ற சிறப்பை டோனி பெற்றார்.

வெற்றிப்பயணம் முடிவு

* சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 தொடர்களை (8-ல் வெற்றி, 2 சமன்) இழக்காமல் இருந்தது. அந்த கம்பீர பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி இழப்பது இதுவே முதல்முறையாகும்.

* இந்த தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா மொத்தம் 131 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் இரு நாட்டு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் ஒன்றில் அதிக ரன்களை வழங்கிய இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை பெற்று இருக்கிறார்.

அதிசய ஒற்றுமை

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் நமது வீரர்களால் இலக்கை வெற்றிகரமாக எட்ட முடியவில்லை. முன்னதாக இதே மைதானத்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 16 ரன்களே தேவையாக இருந்தது. அதுவும் ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது.

அது மட்டுமின்றி இந்திய ஆண்கள் அணியும் சரி, பெண்கள் அணியும் சரி, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை சொந்தமாக்கி விட்டு, 20 ஓவர் தொடரை பறிகொடுத்திருக்கிறது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 11-02-2019, 10:00 AM



Users browsing this thread: 65 Guest(s)