11-02-2019, 10:00 AM
இந்த சூழலில் 7-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக்கும், குருணல் பாண்ட்யாவும் இணைந்து அணியை கரைசேர்க்க போராடினர். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டிற்கு துரத்திய இவர்கள் 22 பந்துகளில் 50 ரன்கள் கொண்டு வந்தனர். இதனால் கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.
20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி வீசினார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த தினேஷ் கார்த்திக் 2-வது பந்தை அடிக்கவில்லை. 3-வது பந்தில் எளிதில் ரன் எடுத்திருக்கலாம். எஞ்சிய 3 பந்துகளில் 14 ரன்களை தானே எடுத்து விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ, 3-வது பந்தில் பாதி தூரம் ஓடி வந்த குருணல் பாண்ட்யாவை திரும்பி போகும்படி சைகை காட்டி விட்டார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 4-வது பந்தில் தினேஷ் கார்த்திக்கும், 5-வது பந்தில் குருணலும் தலா ஒரு ரன் எடுத்தனர். 6-வது பந்து வைடாக வீசப்பட்டதால் மறுபடியும் வீசப்பட்ட 6-வது பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்தார். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
இந்திய அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. தினேஷ் கார்த்திக் 33 ரன்களுடனும் (16 பந்து, 4 சிக்சர்), குருணல் பாண்ட்யா 26 ரன்களுடனும் (13 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். 2-வது பேட்டிங்கின் போது தினேஷ் கார்த்திக் அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்றும் இந்திய அணி தோற்பது இதுவே முதல்முறையாகும். நியூசிலாந்து வீரர்கள் காலின் முன்ரோ ஆட்டநாயகன் விருதையும், கீப்பர் டிம் செய்பெர்ட் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன.
20 ஓவர் தொடரை பறிகொடுத்தாலும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற திருப்தியுடன் இந்திய அணி தாயகம் திரும்புகிறது.
இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
ரோகித் சர்மா கருத்து
தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘கடைசி வரை போராடியும் இலக்கை தொட முடியாமல் போனது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. 210 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டிப்பிடிப்பது எப்போதுமே கடினம் தான். இருப்பினும் கடைசி பந்து வரை முயற்சித்தோம். பதற்றமான தருணத்தில் நியூசிலாந்து நன்றாக ஆடி வெற்றியை வசப்படுத்தி விட்டது. வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்த பயணத்தில் இருந்து நிறைய சாதகமான விஷயங்களை எடுத்துக் கொள்ள முடியும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து சென்று விட வேண்டும். அடுத்து சொந்த ஊரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்த தொடரை வென்று கோப்பையுடன் தாயகம் திரும்பியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்’ என்றார்.