11-02-2019, 09:59 AM
கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி - தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
ஹாமில்டன்,
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவும், நியூசிலாந்து அணியில் லோக்கி பெர்குசனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அறிமுக வீரராக பிளைர் டிக்னெரும் சேர்க்கப்பட்டனர்.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி காலின் முன்ரோவும், விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டும் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், சிறிய மைதானம் என்பதால் எதிர்பார்த்தது போலவே பேட்ஸ்மேன்கள் கோலோச்சினர். முன்ரோவும், செய்பெர்ட்டும் அதிரடியில் பின்னியெடுத்தனர். பேட்டில் சரியாக பட்ட பந்துகள் எல்லைக்கோட்டை நோக்கி தெறித்து ஓடின. ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 66 ரன்களை திரட்டினர். ரன்ரேட்டை 10 ரன்களுக்கு குறையாமல் பார்த்துக் கொண்ட இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் (7.4 ஓவர்) சேர்த்தனர். செய்பெர்ட் 43 ரன்களில் (25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) குல்தீப் யாதவின் சுழலில் விக்கெட் கீப்பர் டோனி யால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் இறங்கினார்.
முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யாவின் பவுலிங்கை, இந்த முறை நியூசிலாந்து வீரர்கள் நொறுக்கித்தள்ளினர். மிடில் ஓவர்களில் அவரது பந்து வீச்சில் மொத்தம் 4 சிக்சர்கள் பறந்தன.
உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த காலின் முன்ரோ 72 ரன்கள் (40 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். அடுத்த வந்த வீரர்களும் அதே உத்வேகத்துடன் பேட்டை சுழட்டியதால் நியூசிலாந்து அணி 200 ரன்களை எளிதில் கடந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக நியூசிலாந்து 202 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (4 ஓவரில் 26 ரன் கொடுத்து 2 விக்கெட்) தவிர மற்ற அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக குருணல் பாண்ட்யா 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
பின்னர் ‘மெகா’ இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (5 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தாலும் கேப்டன் ரோகித் சர்மாவும், தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். விஜய் சங்கரின் சில நேர்த்தியான ஷாட்டுகள் ரசிகர்களை பரவசப்படுத்தின.
அணிக்கு நம்பிக்கையூட்டிய இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் (46 பந்து) சேகரித்து பிரிந்தது. விஜய் சங்கர் 43 ரன்னிலும் (28 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த ரிஷாப் பான்ட் 28 ரன்னிலும் (12 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்கள்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 38 ரன்களில் (32 பந்து, 3 பவுண்டரி) தேவையில்லாமல் வைடாக சென்ற பந்தை அடிக்க முயற்சித்து விக்கெட் கீப்பர் செய்பெர்ட்டிடம் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் (21 ரன்), விக்கெட் கீப்பர் டோனியும் (2 ரன்) அடுத்தடுத்து வெளியேற, இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 145 ரன்கள் (15.2 ஓவர்) எடுத்திருந்தது.