11-02-2019, 09:57 AM
அஜித், விஜய்க்கு என்ன மாதிரி படம் கொடுப்பீர்கள் - கார்த்திக் சுப்புராஜ் பதில்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய மூன்று படங்களும் திரை விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டவை. சமீபத்தில் இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்ட படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது
![[Image: karthik-subburaj.jpg]](https://static.tamil.news18.com/tamil/uploads/459x306/jpg/2018/12/karthik-subburaj.jpg)
இந்தநிலையில் தனியார் இணையதள ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள கார்த்திக் சுப்புராஜிடம், விஜய்யை வைத்து படம் இயக்கினால் என்ன ஜானரில் எடுப்பீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ் மாஸ் கேங்க்ஸ்டர் படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல் நடிகர் அஜித்தை வைத்து காமெடி படம் இயக்குவேன் என்று கூறிய அவர் கமல்ஹாசனுக்கு வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவேன் என்றும் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் பதிலை சமூகவலைதளங்களில் வீடியோவாக பார்த்த அஜித் ரசிகர்கள், விஜய்க்கு கேங்க்ஸ்டர் கதை அஜித்துக்கு மட்டும் காமெடி படமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)