Romance மெய்நிகர் பூவே
அன்றில் இருந்து தினமும் சாக்லேட் வைப்பதும் கார்த்திக் அதை தூக்கி எறிவதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருந்தது. அன்றொரு நாள் கார்த்திக் ஆபிசில் இருக்க கார்த்திக்கின் தாய் அவனுக்கு கால் செய்தாள்.



போனை பார்த்த கார்த்திக் அம்மா என்று தெரிந்து கொண்டான். இப்போ எதுக்கு கால் பண்றாங்க. எதாச்சும் முக்கியமான விஷயமா இருக்குமோ. ஒரு வேலை ராஜிய கேட்பாங்களோ. கடவுளே இவளை கட்டிக்கிட்டு ஒவ்வொரு நிமிஷமும் கத்தி மேல நடக்குற மாதிரியே இருக்குது. சமாளிப்போம். நினைத்து கொண்டு போனை அட்டென்ட் செய்தான்.


“ என்ன புது மாப்பிள்ளை என்ன நியாபகம் இருக்கா. “


“ ம்ம்மா. என்னமா நீ. உன்ன போய் எப்படி மறப்பேன். என்னமா இந்த நேரத்துல. "


“ பின்ன உன்கிட்ட பேசுறதுக்கு நல்ல நேரமா பார்க்கணும். பேசாதடா நீ. சென்னைக்கு போய் இவ்ளோ நாள் ஆகுதுல்ல. ஒரு நாளாச்சும் போன் பண்ணனும்னு உனக்கு தோணுச்சாடா. உனக்கு எப்படி தோணும். அதான் புதுசா ஒருத்தி வந்துட்டால்ல. எங்கள எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுமா.”


“ ம்மா அப்படிலா ஒன்னும் இல்ல. ஆபிஸ்ல நிறைய வேலை அதான் பேச முடியலம்மா.”


“ சரிடா நீதான் பேசல. என் மருமகளாச்சும் பேசலாம்ல. அவளும் இது நாள் வரைக்கும் பேசவே இல்ல. “


“ என்னது அவளும் உங்கிட்ட இவ்ளோ நாள் பேசலையா.”


“ டேய் என்னடா தெரியாத மாதிரி கேக்குற. அவ உன்கூடதான இருக்கா. உனக்கு தெரியாமையா இருக்கும். ரெண்டு பேரும் ஒண்ணா தான இருக்கீங்க. உண்மைய சொல்லுடா. “


( அய்யோ உளறிட்டேனே. கார்த்தி மாட்டிகிட்ட. எதாவது சொல்லு. கேப் விடாத,கண்டுபிடிச்சிடுவாங்க.)


“ ம்ம்மா அது வந்து ஒன்னும் இல்லமா. அவள உங்கிட்ட பேசுன்னு சொன்னேன். அவ மறந்துடுப்பா வேலை பிஸில. அவளுக்கு இப்போ கொஞ்சம் வேலை அதிகம். அதான்மா. “


“ டேய் என்னடா புள்ள நீ. நீதாண்டா அவளுக்கு வேலை கொடுக்குறவன். கட்டுன பொண்டாட்டிக்கு வேலைய குறைச்சிட்டு வேற யாரையாச்சும் அதை செய்ய சொல்லுடா. இதெல்லாம் உனக்கு சொல்லியா தரனும். “


“ அம்மா இது ஒன்னும் என்னோட கம்பெனி கிடையாது. எனக்கு மேல இருக்குறவங்க என்ன செய்ய சொல்றாங்களோ அதை தான்மா நான் செய்ய முடியும். “


“ என்னமோ போடா. ஆனா ஊருக்கு வரும்போது மட்டும் என் மருமக இளைச்சி போய் வந்தா உனக்கு நல்லா இருக்குடா இங்க. “


“ அம்மா இபோ எதுக்கு கால் பண்ணின. அதை சொல்லுமா முதல்ல. “


“ டேய் ஆமாடா சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன். தாலி பிரிச்சி கோர்க்க 2 நாள் கழிச்சி நல்ல நாளாம். அன்னைக்கு தேதி குறிச்சிருகோம். நீயும் ராஜியும் நாளைக்கு கிளம்பி வந்துடுங்க. “


“ முடியாதே. “


“ என்னடா சரியா கேக்கல. “


“ இல்லம்மா இங்க வேலை அதிகமா கிடக்கு. நான் வேணும்னா ஒன்னு பண்றேன். அவளை மட்டும் அனுப்பி வைக்குறேன். சடங்கு முடிஞ்சி அவ வந்தா போதும். “


“ டேய் மடையா. அதுக்கு புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் இருக்கனும்டா. உன்ன வருவியான்னு கேக்கல. வரணும்னு சொல்றேன். புரிஞ்சுதா. “


“ ம்மா புரிஞ்சிகோம்மா. இப்போ முடியாது. “


“ டேய் இதெல்லாம் சடங்குடா. இதுலா அந்த அந்த டைம்ல கரெக்டா நடத்திடனும். அதுக்கு கூட வராம வேலை பார்க்குறேன்னா அப்படி ஒரு வேலையே உனக்கு தேவை இல்ல. இப்போ நீ இங்க கிளம்பி வர போறியா இல்ல நன்னக குடும்பத்தோட அங்க வந்து அதை செய்யட்டுமா. “


“ அம்மா அம்மா அப்படிலா எதுவும் பண்ணிடாதீங்க. நானே கிளம்பி வரேன். “


“ என்னது நானேவா நாங்க ரெண்டு பேரும்னு சொல்லுடா. “


“ நாங்க ரெண்டு பேரும் கிளம்பி வந்துடுறோம். ”


“ சரிடா நான் சாயந்திரம் ராஜி கிட்ட பேசுறேன். அவளை பேச சொல்லு. வச்சிடட்டுமா. “


“ அம்மா அவகிட்ட எதுக்கும்மா. நானே அவகிட்ட சொல்லிடுறேன். “


“ டேய் பொம்பளைங்களுக்குள்ள பேசுறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும். நான் சொல்லிக்கிடுவேன் என் மருமக கிட்ட. நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். வச்சிடுறேன். நீ வேலைய பாருடா. போ. “


“ சரிம்மா வைக்கிறேன். “


அடுத்து புது பிரச்சனை வந்துடுச்சா. சந்தோசமா போய்கிட்டு இருந்த வாழ்க்கைல ஒரு பொண்ணு. ஒரே ஒரு பொண்ணு தான் வந்தா. மொத்தமா போச்சு. நானா கேட்டேன். எனக்கு கல்யாணம் வேணும். பொண்ணு வேணும்னு. எத்தனையோ பேரு பொண்ணு கிடைக்கலன்னு அலையுறாங்க. அவனுகளுக்கு கொடுக்குறத விட்டுட்டு எனக்கு கொடுத்து என் வாழ்க்கைய எதுக்கு கெடுக்கணும். கடவுளே உன்னோட டிஸைன புரிஞ்சிக்கவே முடியல. அய்யோ நான் ஏன் புலம்புறேன். புலம்ப வச்சிட்டாலே புலம்ப வச்சிட்டாலே.


அந்த நேரம் சந்துரு அவன் ரூமிற்கு “: என்ன செஞ்சிட்டாளே வச்சி செஞ்சிட்டாளே. காதல் அம்பு விட்டு என்ன செஞ்சிட்டாளே. ம்ஹூம் மொஹ்ஹோம் . என்ன மச்சான் ரொம்ப ஜாலியா இருக்க. தனியா வேற போலபிட்டு இருக்க. “ பாட்டு பாடிக்கொண்டே அவனிடம் கேட்டான்.


“ போடா லூசு கூதி. மூடிட்டு உன் வேலைய போய் பாரு. வந்துட்டான். “


“ என்ன மச்சான் இவ்ளோ அசிங்கமா சொல்லிட்ட. இன்னைக்கு சாக்லேட் தரலையே. ஒரு வேலை என்மேல பாசம் குறைஞ்சிடுச்சோன்னு கேட்க வந்தா. ஏன்டா இவ்ளோ கடுப்பு. “


“ டேய் போய்டு செம கடுப்புல இருக்கேன். இன்னும் எதாச்சும் சொல்லிட போறேன். “

“ ஓகே மச்சான் கூல். நான் அப்றமா வந்து சாக்லேட் வாங்கிகிடுறேன். நான் போகட்டுமா. “


“ எப்பா இந்தாடா சாக்லேட். பொறுக்கிட்டு போடா. முதல்ல இடத்தை காலி பண்ணு. “


“ மச்சான் என்ன பத்தி என்னடா நினைச்ச. நீ டெய்லி கொடுக்குற இந்த சாக்லேட்டுகாக இங்க வரேன்னு என்ன தப்பா நினைச்சிட்டல்ல.”


“ என்னடா பிரச்சனை உனக்கு. நீயுமாடா. “


“ பரவா இல்ல மச்சான். இருந்தாலும் நீ இவ்ளோ அன்பா கொடுக்குறதனால நான் எடுத்துகிடுறேன். தேங்க்ஸ்டா. “


“ டேய் உனக்கு வெட்கமே இல்லையாடா. உன்ன இவ்ளோ கேவலபடுத்துறேன். வெட்கமே இல்லாமே அதை எடுத்து திங்குற. “


“ மச்சான் நான்லா புளிப்பு மிட்டாய் கொடுத்தாலே சுதந்திர தின விழாவுக்கு ஏழு மணிக்கு ஸ்கூல் போய்டுவேன். 80 ரூபாய் சாக்லேட்னா விடுவேனா. “


கார்த்திக் சிரித்தே விட்டான். ஆனா நல்ல காமெடி பண்றடா. சரி வா மச்சான் ஒரு தம் போடலாம். என்று சொல்லி இருவரும் ஆபிஸ் விட்டு வெளியே இருந்த டீ கடையில் தம் வாங்கி இழுத்தனர்.


யாரிடமாவது தன் பிரச்சனையை கூறினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது கார்த்திக்கிற்கு. சந்துருவிடம் கூறினால் என்ன. சொல்லலாமா யோசித்தான். வேண்டாம் இவன் ஒரு ஓட்டை வாயன். எல்லாரிடமும் உளறிவிடுவான். முதல்ல ராஜியுடன் ஈவினிங் இருக்க வேண்டும். அம்மா கால் செய்தாலும் அவளுடன் நான் இருப்பது போல் காட்டி கொண்டால் அவங்களுக்கும் சந்தேகம் வராது. ஆனா அவளை எப்படி கூட்டி வருவது.


நாமாக போய் அவளிடம் கேட்டால் நம்ம மரியாதை என்ன ஆவது. வேற வழி இல்லை கூப்பிடுவோம். பீச் பார்க்னு நேரத்தை கடத்திவிட்டு அவளை ரூமிற்கு அனுப்பிவிட்டு நாம ரூமுக்கு போய்ட வேண்டியது தான். அம்மா கேட்டாலும் வெளிய வந்துருக்கோம்னு சொல்லிடலாம். நல்லா ஐடியா முதல்ல இவனை கலட்டி விடனும்.


ஆபிஸ் சென்ற உடன் ராஜியை அழைத்தான். அவள் ரூமிற்கு வந்து சொல்லுங்க சார் என்றாள்.


உக்காரு என்று எதிரே இருந்த சேரை காட்டினான்.


“ அது வந்து. அது.... “ திணறினான்.


“ என்ன கார்த்திக் ஐ லவ் யூ தான. டக்குன்னு சொல்லுங்க “


“ மயிறு. “


“ என்ன. ஹலோ. “


“ உன்ன ஆபிஸ் விஷயமா கூப்பிட்டா ஐ லவ் யூ தானன்னு சொல்ற. “


‘ ஆபிஸ் விஷயம் பேச ஏன் இவ்ளோ தயங்குறீங்க சார். “


“ ஒன்னும் இல்ல நீ போ. நான் அரவிந்த் கிட்ட பேசிக்கிறேன். “


“ ஓகே சார். வரேன். “ சொல்லி விட்டு அவள் திரும்பி பார்க்காமல் செல்ல அவள் கதவு அருகே செல்லும் போது “ ஒரு நிமிஷம் “ என்றான்.


“ சொல்லுங்க சார்.”


“ ஈவினிங் வெளிய எங்கையாச்சும் போகலாமா.”


“ சார் ஆபிஸ்ல எல்லாரும் போறோமா. போகலாம் சார். எனக்கு ஓகே. மற்றதை அரவிந்த் கிட்ட சொல்லிடுங்க. “


பழிக்கு பழி வாங்குறாலே. முதல்லையே இவகிட்ட சொல்லிருக்கலாம். பரவா இல்ல. கெத்தை விட்டுடாத கார்த்தி.


“ நாம ரெண்டு பேரு மட்டும் போகலாம். வேற யாரும் வேண்டாம். “


“ மயிறு.” வாய்க்குள் முனகினாள்.

“ ஏய் என்னடி சொன்ன. இப்போ என்ன முனகின. சொல்லுடி “


“ இல்ல சார் நான் வரலை சார். சாரி “


( முதல்லையே சொல்லிருந்தா நான் வந்திருப்பேன். கெத்து காட்றியா. இப்போ கெஞ்சு. நல்லா கெஞ்சு. )


“ என்ன ஓவரா பண்ற. நீ வரலன்ன அம்மா கிட்ட சொல்லிடுவேன்.”


“ என்ன சார் ஸ்கூல் குழந்தைங்க மாதிரி அம்மாகிட்ட சொல்லிடுவேன். மிஸ் கிட்ட சொல்லிடுவேன்னு. நீங்க ஏன் என்ன கூப்டுரீங்க. சொல்லுங்க. “


கார்த்தி நல்லா கலாய்க்கிரா. நேரம்டா உனக்கு. வந்து தொலையேன்டி.


“ அது. எதுக்கோ கூப்பிடுறேன். வரியா இல்லையா. “


“ நான் யாரு சார் ஏன் என்ன கூபிடுறீங்க. நான் உங்களுக்கு கீழ வேலை பார்க்குறேன். அதுக்காக நீங்க எங்க கூப்ட்டாலும் நான் வரணுமா. “


“ ஏய் நீ என் பொ................” நிறுத்தினான்.

( அதை சொல்லுடா அழகா.இதை தான் உன் வாயால கேட்கனும்னு நான் ஆசை பட்டேன். சொல்லு. சொல்லு கார்த்திக் சொல்லு ப்ளீஸ் ப்ளீஸ். வந்துடுச்சு. சொல்லு. )


“ என்ன என்ன சொன்னீங்க. பொ..... “


“ இல்ல நீ ஒரு பொண்ணு. எங்க அம்மா உனக்கு அத்தை அந்த முறைல சொன்னேன். ப்ச். அதை விடு. நீ வருவியா மாட்டியா. “

“ ம்ம்ம்ம்ம்ம்ம். “ தலையை ஆடிக்கொண்டே அவனை மேலும் கீழும் பார்த்தாள்.


கார்த்திக் அவள் அப்படி பார்ப்பது ஒரு மாதிரியாக தோன்றியது.
(சைட் அடிக்கிறாலோ. ம்ம்ம்ம் வச்ச கண் வாங்காம பார்க்குறா. இவளுக்கு மட்டும் எங்க இருந்து லவ் பீலிங் ஊற்றேடுக்குனு தெரியல. பதில சொல்றாளா. பாரு. அய்யோ யோசிக்கிறாலே அடுத்து ப்ளான் பண்றாளோ. கார்த்திக் சீக்கிரம் அனுப்பி விடு. அனுப்புடா பதிலை கேட்டு அனுப்பு )


“ சொல்லு என்ன சொல்ற. “


“ யோசிக்கிறேன். நீங்க நெக்ஸ்ட் டைம் கூப்டுங்க நான் வரேன். “


“ ஏன் இப்போ என்ன. “


“ இந்த டைம் நீங்க கூப்பிட்ட தோரணை எனக்கு பிடிக்கல சார் “


“ இங்க பாரு 5 மணிக்கு கால் பண்ணுவேன். நீ கண்டிப்பா வர. நான் வெயிட் பண்ணுவேன். இப்போ நீ போகலாம். “


“ 5 மணிக்கு நீங்க என்ன எப்படி கூப்பிடுரீங்கலோ அதை பொறுத்து தான் நான் முடிவு பண்ணுவேன் மாமா. வரேன் மாமா. “ அவள் சென்று விட கார்த்திக் பெரு மூச்சு விட்டான்.
[+] 5 users Like bsbala92's post
Like Reply


Messages In This Thread
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 24-06-2019, 11:46 PM
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 28-06-2019, 08:38 PM
RE: மெய்நிகர் பூவே - by bsbala92 - 18-02-2020, 08:28 PM



Users browsing this thread: 15 Guest(s)