17-02-2020, 11:52 PM
(17-02-2020, 08:33 PM)Vidhya Wrote: நான் அதிகம் அஞ்சல் செய்ததில்லை, ஆனால் சில கதைகளை தொடர்ந்து படிப்பதுண்டு. உங்கள் கதையும் அதில் ஒன்று. என்னை போன்று பலர், சுமார் 98.00 சதவிகிதம் பேர், கருத்துகள் சொல்வதில்லை. உங்களை காயப்படுத்துவதும் இல்லை. நாங்கள் எதிர்பார்ப்பது எங்களுக்கு உங்களிடம் இருந்து கிடைக்கிறது. நாங்கள் கருத்து சொல்வில்லை என்றாலும், உங்கள் உழைப்பை உதாசீனப்படுத்துவது இல்லை. உங்கள் படைப்பிற்க்கு நாங்கள் விமர்சகர்கள் அல்ல வெறும் ரசிகர்கள் மட்டுமே.
உங்கள் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றிகள். நெகிழ்கிறேன். மிகவும் மகிழ்ச்சி.
உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் அனைவரிடமும், கதையை சடாரென்று முடித்துவிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவு, மிகப்பெரியது.
விமர்சனங்களை நான் எதிர்கொள்ளாமல் இல்லை. முன்பிருந்தே நான் பதில் அளித்துக்கொண்டுதான் வந்திருக்கிறேன். நேர்மையான விமர்சனங்களை எதிர்கொள்ளலாம். ஆனால் சமீப காலமாக பல பின்னூட்டங்கள் - அவை விமர்சனம் அல்ல. வெறுப்பும், இழிவான வார்த்தைகளும்தான். இவற்றுக்கு பெயர் criticism அல்லவே அல்ல.
இதற்கு ஏன் இங்கே உயிரைக்கொடுத்து எழுதவேண்டும் என்று முடித்துவிட்டேன்.
கடைசி பதிவுகளை நீக்கியதற்கு காரணம் - அந்தக் காட்சிகளை நீடித்துக்கொண்டே போக எனக்கும் ஆசைதான். சுவாரஷ்யமான இருந்திருக்கும். ஆனால் அவற்றிற்கு இன்னும் நிறைய நாட்கள் எழுதவேண்டும். இன்னும் முப்பது பக்கங்களாவது போகும். அவ்வளவு எழுதுவதற்கு தற்போதைய மனநிலை ஒத்துக்கொள்ளவில்லை. இன்றோடு முடித்துக்கொள்வதற்காகவே கதையை மாற்றினேன். அதற்காகவே கடைசி சில பதிவுகளை நீக்கினேன். மற்றபடி, கதை முன்பிருந்தபடியே போயிருந்தாலும் அதை அழகாக முடிக்கும் திறமை எனக்கு உண்டு. இவர்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்றுதான் விட்டுவிட்டேன்.
நெகட்டிவ் கமெண்ட்டுகளை கண்டுகொள்ளவேண்டாம் என்று பலரும் சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய எதிர்காலத்தில் கண்டிப்பாக இந்த அறிவுரையை என் மனதில் நிறுத்திக்கொள்கிறேன்.
ஒருநாள், சாவகாசமாக, கதையை ஆதரித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும், பெயரிட்டு, நன்றி சொல்கிறேன்.