17-02-2020, 11:29 PM
(17-02-2020, 09:09 PM)Dubai Seenu Wrote: அன்றிலிருந்து நிஷாவுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டதுபோல் இருந்தது. கண்ணன் அவளிடம் அன்பு மழை பொழிந்தார். ஆனால் அவளால் அதை அனுபவிக்க முடியவில்லை. ஏன் எனக்கு துரோகம் பண்ணீங்க கண்ணன்??? என்று அவர் சட்டையைப் பிடித்துக் கேட்கவேண்டும்போல் இருந்தது. ஆனால் கேட்கமுடியவில்லை. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பெட்டியைத் தூக்கிக்கொண்டு பிறந்தவீட்டுக்குப் போகமுடியவில்லை. விவாகரத்து பண்ணப்போகிறேன் என்று அவரிடம் கத்தமுடியவில்லை.
ஆண்களின் சுயநலம் அவளை சுட்டது. அதில் கருகினாள்.
பார்வதி, சந்திரன், சீனு சகிதம், அகல்யாவைப் பெண் பார்க்க, கண்ணனோடு சேர்ந்து காவ்யாவின் வீட்டுக்குப் போனாள். காவ்யாவைப் பார்த்ததுமே அவளையுமறியாமல் அவள்மேல் ஒரு பரிதாபம் வந்தது. எந்த அலங்காரமுமில்லாத அவளது முகத்திலிருந்த பொறுப்புணர்வும், குடும்பத்தைக் கட்டிக் காக்கும் கடமை உணர்வும், அன்புக்காக ஏங்கும் விழிகளுமாய்... இருந்தாள். அகல்யா, நிஷா நினைத்ததைவிட அழகாக இருந்தாள். தயங்கி தயங்கி...பேசினாள். எல்லோருக்கும் அகல்யாவைப் பிடித்துவிட்டது.
சீனு - அகல்யா நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்தது. காவ்யா வீட்டில் ஏழ்மை என்பதால் கல்யாணத்துக்கு சில மாதங்கள் டைம் கேட்டிருந்தார்கள். கண்ணன் கொடுக்க முன்வந்த பண உதவியை மறுத்தாள்.
நிச்சயதார்த்தம் முடிந்து சில வாரங்களில், நிஷாவுக்கு லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகள் முடிந்திருந்தன.
நிஷா, ஏர்போர்ட் கிளம்புவதற்கு முன்பு, பார்வதியிடமும், சந்திரனிடமும் விடைபெற்றாள். கல்யாணத்துக்கு இருக்காம கிளம்புறியேம்மா என்று பார்வதி கண்கலங்கினாள். .
சீனுவை, தனியாக அவன் அறையில் சந்தித்தாள்.
மத்த பொண்ணுங்களோட சகவாசம் வச்சிக்கக் கூடாது. அகல்யாவோட சந்தோஷமா குடும்பம் நடத்தணும் சரியா?
நிஷா... ஐ மிஸ் யூ நிஷா.... - சீனு முதன் முறையாக அழுதான்.
நிஷா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் உதடோடு உதடு பொருத்தி, கட்டிலில் அவனோடு விழுந்து புரளவேண்டும் என்று அவள் மனமும் உடலும் துடித்தன. கண்ணனிடம் செய்த சத்தியமோ, சீனுவின் திருமண வாழ்க்கை மேல் உள்ள அக்கறையோ, அவளது இயல்பான குணமோ... ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.
அவனது கண்ணத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்து, கண்ணீரோடு விடைபெற்றாள்.
கண்ணனுக்கு, மோகன் மற்றும் ராஜ்ஜின் பாராட்டு முதன் முதலில் கிடைத்தது. டிபார்ட்மெண்ட்டே அவரைக் கொண்டாடினார்கள். காவ்யா மட்டுமே அழுதுகொண்டிருந்தாள். லண்டன் கிளம்பும் அன்று, காவ்யாவும் அகல்யாவும் சீனுவும் ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தனர். ஒருபுறம் சீனுவும் அகல்யாவும் நிஷாவும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க... மறுபுறம் கண்ணனும் காவ்யாவும் நின்றுகொண்டிருந்தனர்.
என்ன மன்னிச்சிடு காவ்யா...
நீங்க எனக்கு நல்லதுதானே கண்ணன் செய்திருக்கீங்க. ஏன் மன்னிப்பு கேட்குறீங்க. இது உங்கள் வாழ்க்கை. நீங்க சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிற முதல் ஆளா நானிருப்பேன். போயிட்டு சீக்கிரமா நல்ல நியூஸ் சொல்லுங்க.
கல்யாண வேலை எல்லாம் நீதான் இழுத்துப் போட்டுச் செஞ்சிட்டிருக்கியா?
வேற வழி? கொஞ்சம் லோன் போட்டிருக்கேன். எவ்ரிதிங்க் வில் பி ஆல்ரைட். ஆனா... அகல்யாவோட லவ் பெயிலியர் பத்தி... அவ எனக்காகத்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்குறதைப் பத்தி... சொல்லவேணாம்னு கண்டிப்பா சொல்லிட்டீங்களே ஏன் கண்ணன்? பின்னாடி ஏதாவது பிரச்சனை வராதா?
நீங்க எதுவும் சொல்லவேண்டாம். நல்லபடியா கல்யாணம் முடியட்டும். அப்படியே ஏதாவது பிரச்சனை வந்தா, நிஷா சமாளிச்சுப்பா.
கண்ணனும் நிஷாவும் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தார்கள். கைகாட்டி விடைபெற்றார்கள்.
சீனுவின் மனதில் நிஷாவின் பிரிவு இடியாய் இறங்கியது. வேதனையோடு, கனத்த இதயத்தோடு, விமான நிலையத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். அவன் சகஜ நிலைக்கு வர பல நாட்கள் ஆயின.
சீனு - அகல்யா திருமணம் விமரிசையாக நடந்த அதே நாளில் -
நிஷா தான் கர்ப்பமாகியிருக்கும் செய்தியை.... புதுமணத் தம்பதிகளுக்குச் சொன்னாள்.
குழந்தை பிறக்கப்போகும் மகிழ்ச்சியில்... நிஷாவின் மனதெல்லாம் பிறக்கப்போகும் குழந்தை மேலும், எப்படிஎல்லாம் வளர்க்கவேண்டும் என்பதிலும், தனது புதுவாழ்க்கை மீதும் இருக்க... சீனு அவள் மனதிலிருந்து மறைந்து மறைந்து அவளது வாழ்க்கையின் ஓரத்தில் ஒரு சிறு புள்ளியானான்.
( முற்றும் )
என்ன இவ்வளவு அவசரமாக முடிந்து விட்டது காாா்ரி வீீீண மலர் எபிசோட் மற்றும்