மான்சி கதைகள் by sathiyan
#23
மான்சி அதுவுமே சொல்லவில்லை, அவன் கையைப்பிடித்துக்கொண்டு வயலில் நடந்து வரப்பில் ஏறினாள், நிலவு சூரியனிடமிருந்து அதிகப்படியான ஓளியை பெற்று பகல்போல் காய்ந்தது, மான்சி வரப்பில் அமர்ந்து சத்யனை அமரச்சொல்லி கையைப்பிடித்து இழுத்தாள்

சத்யன் மறுவார்த்தையின்றி அவள் பக்கத்தில் அமர்ந்தான், மான்சி நிலவின் ஓளியில் சத்யனின் முகத்தைப் பார்த்தாள், அவன் முகத்தில் தாயின் அன்புக்காக ஏங்கும் குழந்தையின் ஏக்கம் தெரிந்தது, அதேபோல் காதலியின் தழுவலுக்காக தாபத்துடன் காத்திருக்கும் காதலனின் நிலையும் தெரிந்தது,

மான்சி என்ன நினைத்தாளோ சத்யனின் தோளைப்பிடித்து தன் மடியில் அவன் தலையை சாய்த்தாள், அவன் தலையை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்தாள், அவளுக்கு கண்கள் கலங்கியது, அவன் தலைமுடியை கோதிவிட்டாள், பிறகு அவன் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டாள்,

சத்யனுக்கும் அழுகை வந்தது, மூச்சை அடக்கி அழுகையை கட்டுப்படுத்தி கண்களை மூடிக்கொண்டான்,

“ சத்தி எனக்கும் எல்லா ஆசையும் இருக்கு சத்தி, நான் ஒன்னும் மரக்கட்டை இல்ல, என் மொகத தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி அவுக ரெண்டு பேத்தையும் வீட்டுக்குள்ள படுக்க வச்சுட்டு வெளியத் திண்ணையிலே வந்து படுத்து, உள்ள கேட்குற சத்தம் பொறுக்காம காத பொத்திக்கிட்டு கூனிக்குறுகி படுத்து கண்ணீர் விட்டுருக்கேன் சத்தி, எத்தனையோ நாள் என்னை கட்டுப்படுத்த உப்பில்லாத சோறு தின்னு, பச்சைத்தண்ணிய தலையில ஊத்திக்கிட்டு படுத்துருக்கேன்,

" ஆனா ஒன்னப் பாத்ததுக்கு பொறவுதான் எனக்கு வாழனும்னு ஆசையே வந்துச்சு, உன்கூடவே இருக்கனும்னு தா சூளையில வேற எந்த வேலைக்கும் அனுப்பாம என்கூட வச்சுகிட்டேன், கிணத்துல குளிக்கும்போது நீ பாத்தப்ப மேல வந்து ஒன்ன பளார் பளார்னு நாலு அறைவிடனும்னு தா நெனைச்சேன், ஆனா நீ தப்பு பண்ணிட்டோம்னு ஓடாம தைரியமா கையை கட்டிக்கிட்டு ஒக்காந்திருந்த பாரு அந்த நிமிஷம் முடிவு பண்ணேன் சத்தி இந்த சென்மத்திலே எனக்கு புருஷன்னா அது நீதான்னு,

" இருந்தாலும் மனசுக்குள்ள பயம் ஒரு கொலைகாரி ஒனக்கு பொண்டாட்டியா வர எனக்கே சம்மதமில்ல, அதனாலதான் சத்தி ஒனக்கு நான் வேனாம் வேனாம்னு சொன்னேன், ஆனா அந்த வார்த்தையை நானஸ்ரே என்னை வெறுத்துதான் சொன்னேன், மத்தபடி எனக்கு ஓமேல பயங்கர ஆசை பாசம் நேசம் எல்லா இருக்கு சத்தி, ஒன்ன வேற யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டேன் சத்தி, எனக்கு ஒன்னப் பாத்துக்கிட்டே இருக்கனும் ஒன்ன தொட்டுக்கிட்டே இருக்கனும், நீயும் என்னத்தவிர வேற யாரையும் வேற யாரையும் திரும்பிக்கூடப் பாக்கக்கூடாது, என்கூடவே பேசனும், என்கூடவே இருக்கனும்,

" இதுவரைக்கும் எங்கம்மா கூட என்ன துணியில்லாம பாத்தது இல்ல, ஆனா என்னோட பாதி ஒடம்ப பாத்த ஒனக்கு மட்டும் முழுசா எல்லாத்தையும் சொந்தமாக்கி, நீ சொன்னதையெல்லாம் கேட்டு ஒனக்கு அடிமையா ஒன் காலடியில கெடக்கனும் சத்தி, இந்தமாதிரி ஏகப்பட்ட ஆசை சத்தி, கல்யாணத்தை நீ நாளைக்கே வைக்கனும்னு நான் ரொம்ப ஆசப்பட்டேன், அதேமாதிரி வச்சிட்ட, ஆனா இந்த ஒரு ராவு ஒன்ன பாக்காம எப்புடி இருக்கப்போறேன்னு தெரியலை சத்தி, இப்பக்கூட அம்மாச்சி ஏதாவது சொல்லுமோன்னுதான் கோவமா பேசுனேன் சத்தி” என்று மான்சி மூச்சுவிட நேரம் ஒதுக்காது முதன்முறையாக படபடவென்று தன் மனதில் இருந்தவற்றை கொட்டினாள்,


சத்யன் தன் கண்ணீர் அவளுக்குத் தெரியா வண்ணம் அவள் மடியில் கண்ணீரை துடைத்துவிட்டு, நிமிர்ந்து அவள் முகம்பார்த்து காதலாய் புன்னகையுடன் “ திருடி இவ்வளவு ஆசைய மனசுல வச்சுக்கிட்டு என்கிட்ட ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி ஆக்ட் பண்ணிருக்க, இருடி உனக்கு நாளைக்கு இருக்கு வேடிக்கை” என்று வேடிக்கையாகப் பேசி அவள் இடுப்பில் கிள்ளினான்,

சத்யனின் சந்தோஷத்தை அளவிட வார்த்தைகளே கிடையாது, மான்சியும் தன்னை இவ்வளவு விரும்புகிறாள் என்ற செய்தி அவனை இவ்வுலகில் புதிதாக ஜனனமெடுக்க வைத்தது, அவளுடன் புதிதாய் வாழ்ந்து மடியவேண்டும் என்று எண்ணினான்

இன்னமும் மான்சி அவனை மடியைவிட்டு விலக்கவில்லை, அவள் விரல்கள் அவன் முடிகளில் அலைந்தது, இரவும் நிலவும் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்ப்படுத்தியிருந்தாலும், இருவரும் இன்னும் நெருங்க பயந்ததுபோல அப்படியே இருந்தனர், அவள் மடியில் கிடந்த சத்யனுக்கு அவளின் வாசம் புதிதாக இருந்தது, சிறு இடைவெளிக்கூட இல்லாத முழுக்கைச் சட்டை அவனுக்கு பெரும் தடையாக இருந்தது, என்ன செய்வது என்று தெரியாமல் மெதுவாக சட்டையின் நடு பட்டனில் கைவைத்து திருகினான்


அவன் பட்டனில் கைவைத்தது மான்சிக்கு தெரிய அவள் உடலில் சட்டென்று ஒரு விரைப்பு வந்தது, மடியில் படுத்திருந்த சத்யன் அவள் சட்டை பட்டனில் இருந்து உடனே கைகை விலக்கிக்கொண்டான்

அதன்பிறகு இருவரிடத்திலும் தேவையில்லாமல் ஒரு அமைதி, மான்சிதான் அந்த அமைதியை கலைத்து மெதுவாக குனிந்து அவன் காதருகில் “ சத்தி உனக்கு வேற எதாச்சும் வேனுமா?” என்றாள்

சத்யனுக்கு என்னன்னவோ கேட்க ஆசைதான் ஆனால் அவளது விருப்பம் என்னவோ “ உனக்கு மான்சி” என்றான்.

“ ம்ஹூம் எனக்கு எதுவும் வேனாம், எனக்கு மொதல்ல உன் கையால என் கழுத்துல தாலி வேனும் அப்பறம்தான் எல்லாம் வேனும்” என்று பட்டென்று பதில் சொன்னாள் மான்சி

சத்யன் அமைதியாகி மோகத்தை அடக்கி மானத்தை முன்னிருத்தி எழுந்தான், அவளையும் கைகொடுத்து எழுப்பி நிறுத்தி, அவள் எலும்பெல்லாம் நொருங்கும்படி இறுக்கி அணைத்தான், மான்சிக்கு உடல் வலித்தது ஆனால் மனம் சுகித்தது,, என் காதலன் கண்ணியவான் என்று கர்வத்துடன் நினைத்தாள்,

அணைத்த அதே வேகத்தில் அவளை விடுவித்த சத்யன், “ நீ கிளம்பு மான்சி, நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்திருச்சு ரெடியா இரு, நான் தென்காசி போய்ட்டு நேரா கோயிலுக்கு வர்றேன், மனுவையும் குளிக்க வச்சு ரெடி பண்ணிரு, வேற என்னன்ன செய்யனும்னு பாட்டிக்கிட்ட கேட்டு தயார் பண்ணிடு ” என்று தனது உத்தரவுகளை சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காது விடுவிடுவென நடந்தான்

மான்சி மனதில் கிளர்ச்சியும் உதட்டில் புன்னகையுமாக போகும் தன் காதலனையேப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு தனது குடிசையை நோக்கி போனாள்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 6 Guest(s)