10-02-2019, 10:54 AM
மான்சியின் அம்மாவும் தங்கையும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் , அப்போ மான்சி உள்ளேதான் இருப்பாள் என்ற வெளியில் இருந்தவர்களிடம் அனுமதி கேட்காமலேயே சட்டென்று தலைத்தாழ்த்தி குடிசைக்குள் நுழைந்தான், அவனுக்கு இருந்த மனநிலையில் மான்சியைத் தவிர வேறு எதுவும் அவன் கண்ணுக்கு தெரியவில்லை, அவள் எதைச்செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று சத்யனின் மனம் வாதிட்டது, இந்த கொலைக்கும் ஏதாவது காரணம் இருக்கும் என்று ஆணித்தரமாக சொன்னது அவன் மனம்
குடிசைக்குள் மான்சி ஒரு மூலையாக கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள், சத்யன் அவளின் காலருகே போய் நின்றான், மான்சி நிமிர்ந்து அவனைப்பார்த்தாள்,
“ வா மான்சி வீட்டுக்குப் போகலாம், அங்கப் போய் பேசலாம்” என்று அவளை கைநீட்டி அழைத்தான், தாய்வீட்டுக்கு வந்த பொண்டாட்டியை புருஷன் கூப்பிடுவது போல் உரிமையாக கூப்பிட்டான் சத்யன்
உனக்கு இன்னுமா நான் சொன்னது புரியலை என்பதுபோல் மான்சி ஒரு விரக்தியான வெற்றுப் பார்வை பார்க்க, அவனும் அவளை கூர்மையாகப் பார்த்தான்,
பிறகு அவள் தோள்களைப் பற்றி அவளை எழுப்பி அவளைத் தனக்கு நேராக நிறுத்தி “ மான்சி என்னோட கணிப்பில் நீ வலுவான காரணமின்றி இதைச் செய்திருக்க மாட்டே, ஏன் செய்தேன்னு நான் கேட்கவே மாட்டேன், அப்படியே செய்திருந்தாலும் நீ என் காதலி உயிராய் நேசிக்கும் உன்னை இந்த மாதிரி அல்ப காரணங்களுக்காக விட்டு விலகினா, அப்புறம் என் நேசம் பொய்யாயிடும் மான்சி, நீ ஒருநாள் சொன்னப் பாரு , என்னய்யா நீ சின்னக்குழந்தை மாதிரி இருக்கேன்னு, ஆமா மான்சி நான் சின்னக் குழந்தைதான், இத்தனை நாளா எனக்கு என்ன வேனும்னு தேர்ந்தெடுக்க தெரியாத குழந்தையா இருந்தேன், எனக்கு நல்லதையும் கெட்டதையும் பேதம் பிரிச்சு பார்க்க தெரியாது மான்சி, அம்மா, பாட்டி இவங்களோட ஆசையை நிரைவேத்த அவளை கல்யாணம் பண்ணேன், முதலாளியோட ஆசைப்படி அவரோட பொண்ணுக்கு ஒரு சமூக அடையாளமாவும் அவரோட கம்பெனிக்கு ஒரு சம்பளமில்லாத வேலைக்காரனாகவும் இருந்தேன், பொண்டாட்டியா வாச்சவ ஆசைப்படி எல்லாத்தையும் செய்தேன், இத்தனை நாளா எனக்குன்னு நான் எதையுமே ஆசைப்பட்டது இல்லை, முதன்முதலா உன்மேல ஆசைப்பட்டுருக்கேன், நீதான் எல்லாமுமாக கையேந்தி நிக்கிறேன் மான்சி தயவுசெஞ்சு என்கூட வந்துடு, என்னைவிட்டு எங்கேயும் போகாதே மான்சி” என்று சத்யன் தன் மனசை திறந்து முழுமையாக கொட்டினான், உணர்ச்சி வேகத்தில் அவளைப் பற்றியிருந்த கைகள் நடுங்கியது
மான்சி அவன் பிடியில் இருந்து விலகாமல் அவனையே பார்த்தாள்,, பின்னர் “ ஏன் சத்தி என்னை ஒனக்கு அவ்ளோ புடிக்குமா, அப்புடி என்ன சத்தி ஒனக்கு நான் பண்ணேன், ஒன்னுமே செய்யலையே, என் மேல ஏன் இவ்வளவு ஆசை வச்சுருக்க சத்தி, இதுக்கெல்லாம் நான் தகுதியானவ இல்ல சத்தி ” என்று கண்ணீருடன் கூறிய மான்சி அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்தாள்,
அவளின் முதல் தொடுகை இது,, இடமும் சூழ்நிலையும் சரியில்லை என்றாலும்கூட சத்யன் அவளை அணைத்த அந்த நிமிடங்களை தனது வாழ்க்கை ஏட்டின் முதல் அத்தியாயத்தில் பதித்தான்,
தன் நெஞ்சில் கிடந்து குலுங்கி அழுதவளை வளைத்து அணைத்து,, “வேண்டாம் மான்சி நீ இனிமேல் அழக்கூடாது அழுத காலமெல்லாம் போதும், எங்கெங்கோ சுத்தி திரிஞ்ச நாம இப்போதான் சரியான இடத்துக்கு வந்திருக்கோம், இனிமேல் எங்கயுமே போகவேண்டாம், வா வீட்டுக்கு போகலாம் அங்க வந்து என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு பாட்டிக்கிட்ட சொல்லிட்டு வந்துடு மான்சி, அப்புறம் நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்” என்ற சத்யன் அவளை அணைத்தவாறே திரும்ப..
அங்கே குடிசையின் வாசலில் மான்சியின் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தார்கள், மான்சியின் அம்மா சத்யனைப் பார்த்து கண்ணீருடன் கைகூப்பினாள், மான்சியின் தங்கை உணர்ச்சிப் பெருக்கில் ஆனந்த கண்ணீர் விட்டாள்,
சத்யன் அவர்கள் இருவரையும் பார்த்து சிறுப் புன்னகையுடன் ஒப்புதலாய் தலையசைத்தான், மான்சி நிமிரவேயில்லை, அவர்கள் இருவரும் சத்யன் மான்சிக்கு ஒதுங்கி வழிவிட்டார்கள்
சத்யன் மான்சியுடன் வெளியே வந்து அவளை அணைத்தபடி வயலில் நடந்து, வரப்பில் ஏறினான், அந்த வரப்பில் ஒரு ஆள்தான் நடக்கமுடியும், சத்யன் முன்னே போய் நின்று பின்னால் இருந்த மான்சியின் கையை இழுத்து தன் கழுத்தோடு பிடித்து அவளை தன் முதுகில் தூக்க, மான்சி கால்களை உதறினாள்,
“ ஸ் மான்சி கொஞ்சநேரம்தான் வீட்டுக்கிட்ட போனதும் இறக்கி விட்டுடுறேன் ” என்று சத்யன் மெல்லிய குரலில் கூற
முரட்டுத்தனமாக கைகால்களை உதறிய மான்சி, “என்னை கீழ வுடு சத்தி” என்ற கோபமாக மான்சி கத்தினாள், அவள் கைகால்களை உதறியதால் சத்யனால் அந்த சிறிய வரப்பில் நடக்கமுடியவில்லை, கீழே விழுவதுபோல் இருக்க சட்டென்று மான்சியை இறக்கிவிட்டான்
இறங்கியவள் அதே இடத்தில் வரப்பில் உட்கார்ந்துகொண்டாள், சத்யனுக்கு எரிச்சலாக இருந்தது, தூரத்தில் எரிந்த சூளையின் நெருப்புக் கூட தன் ஆக்ரோஷத்தை சற்று குறைத்துவிட்டது, ஆனால் மான்சியின் உள்ளக் கொதிப்பு மட்டும் இன்னும் அடங்கவேயில்லையே என்று ஏக்கமாக நினைத்தான்