மான்சி கதைகள் by sathiyan
#17
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 3

அன்று மாலை சூளைக்கு பூஜைகள் செய்து நெருப்பு மூட்டினார்கள், முதலில் மெதுவாக ஆரம்பித்து பிறகு நெருப்பு தனது ஆக்ரோஷத்தை காட்டி ஜுவாலையை கக்கியது, சத்யன் கனத்த இதயத்தோடு தூரத்தில் எரியும் சூளையைப் பார்த்தான்,, இருள் கவிழ ஆரம்பிக்க சூளை நெருப்பு தனது வெளிச்சத்தால் அந்த இடத்தை ஆக்கிரமித்தது,

எல்லோரும் போய்விட்டார்கள், சத்யன் மார்புக்கு குறுக்கே கைக்கட்டிக் கொண்டு எரியும் தீயை வேடிக்கைப் பார்த்தான், அப்போது நெருப்பின் வெளிச்சத்தில் ஒரு உருவம் வந்து வரப்பில் உட்கார்ந்து சூளையை வேடிக்கைப் பார்த்தது, பார்த்தவுடனே புரிந்தது அது மான்சி தான் என்று, சத்யன் உடனே வயலை நோக்கி ஓடினான்

நேராக மான்சி அமர்ந்திருந்த வரப்பில் அவள் பக்கத்தில் அமர்ந்தான், மான்சி அவனை திரும்பி பார்த்தாள், பிறகு திரும்பி எரியும் நெருப்பை பார்த்தாள்.

“ எங்கப்போயிருந்த, காலையிலிருந்து தவிச்சுப் போய்ட்டேன், இன்னும் சாப்பிடக்கூட இல்லை, ஒருவார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்” என்று சத்யன் குறை கூறும் குரலில் கூறினான்


அவனைப் பார்க்காமலேயே “ பெரியவ குழந்தை பெத்துருக்காளே அவளைப் பாக்க போயிருந்தேன்’” என்றாள் ஒரு மாதிரி வெற்றுக்குரலில்
அவள் குரல் சத்யன் மனதை துணுக்குறச் செய்தது, அதைக்காட்டிக் கொள்ளாமல்

“ ஓ குழந்தை நல்லாருக்கா, என்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கலாம்” என்றான் மறுபடியும்

“ குழந்தை நல்லாருக்கு” என்றவள் நெருப்பையே உற்றுப்பார்த்துக் கொண்டு இருந்தாள்

அவள் ஒரு வார்த்தையில் பேசுவது சத்யனுக்கு எரிச்சலாக வந்தது, ஆனாலும் எதற்காகவும் பின்வாங்க அவன் தயாராக இல்லை “ எப்ப மான்சி கல்யாணத்தை வச்சுக்கலாம், எங்க பண்ணிக்கலாம், நம்ம வீட்டுலயே பண்ணிக்குவோமா? இல்ல ஏதாவது கோயில்ல வச்சு கல்யாணம் பண்ணிக்கலாமா? உன்னோட இஷ்டம்தான்” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்

அப்பவும் மான்சி அவனைப் பார்க்கவில்லை, “ எனக்கு இந்த சூளைகளுக்கு நெருப்பு வச்சா அதை இப்புடி ராவெல்லாம் ஒக்காந்து பார்க்கப் புடிக்கும் சத்தி , ஏன்னா என்னோட நெஞ்சுல எரியுற நெருப்பு மாதிரி அதுவும் ஒரு பக்கம் அவிஞ்சு போனாக்கூட மறுபக்கம் பத்திக்கிட்டு எரியும் சத்தி, நெருப்பு இல்லையேன்னு நெனைச்சு யாரும் கைவைக்க முடியாது, உள்ளுக்குள்ள கனகனன்னு கங்கு இருந்துக்கிட்டே இருக்கும், அதுபோலத்தான் என் நெஞ்சும் அதுக்குள்ள எரியுற நெருப்பு எப்பவுமே அணையாது சத்தி, நான் ஒனக்கு பயன்படமாட்டேன், நீ இனிமேல் கல்யாணத்தைப் பத்தி பேசாதே, இந்த சூளையோட நான் ஊருக்குப் போறேன், கோயில்பட்டி ரோட்டுல போன் வயரு பதிக்க பள்ளம் எடுக்குற காண்ட்ராக்ட் எங்க ஓனர் எடுத்துருக்காங்க, கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு வேலை இருக்கும், அதனால நாங்க அங்க போகறோம், நீ உன் வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்க சத்தி” என்று மான்சி கூறினாள்,

அவள் குரலில் இருந்த அளவுகடந்த வெறுமை சத்யனை கலங்க வைத்தது, அடுத்து என்ன பேசவேண்டும் என்றுகூட சத்யனுக்கு புரியவில்லை, வயிறும் நெஞ்சும் தவித்து துடித்தது, அவள் தன்னைவிட்டு போகிறாள் என்றதுமே அவனுக்கு உலகின் நிகழ்வுகள் அத்தனையும் வெறுத்தது,

ஏதாவது பேசியே ஆகவேண்டும் என்ற நினைப்பு வர “ மான்சி என்னைவிட்டு போறியா? நீ இல்லாம என்னால இருக்கமுடியாது மான்சி, இவ்வளவு நாளா ஒரு தாய் மாதிரி என்னைப் பார்த்துக்கிட்ட, இப்போ பாதில உதறிட்டு போனா எப்படி மான்சி, எனக்கு நீ இல்லாம வாழ முடியாது மான்சி” என்று நெஞ்சில் நினைத்ததை வாயால் உளறி கண்ணில் வழிய முயன்ற கண்ணீரை உள்ளே இழுத்தபடி சத்யன் பேச

ஒரு கணம் திரும்பி அவனுடைய கலங்கிய கண்களை பார்த்தாள் பிறகு மறுபடியும் நெருப்பைப் பார்த்தபடி “ என்னைப் பத்தி ஒனக்கு என்னா தெரியும் சத்தி, நான் நாலு வருஷத்துக்கு முன்னாடி எங்கே இருந்தேன்னு தெரியுமா? நான் எல்லாத்தையும் என் வாயால சொல்லனும்னு ஆசைப்படுறியாவே, அப்ப நா சொல்றதைக் கேட்டுக்க, நா ஒரு கொலை செய்துட்டு ஆறு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்துருக்கேன், என்னோட பதினேழாவது வயசுல கொலப் பண்ணிட்டு ஒரு வருஷம் சிறுமிகள் காப்பகத்துலயும், மீதி அஞ்சு வருஷம் மதுரை ஜெயில்லயும் இருந்தேன் சத்தி, இப்ப சொல்லு இந்த கொலைகாரி ஒனக்கு பொஞ்சாதியா ஒம்ம மகனுக்கு அம்மாவா வரனுமா?” என்று ஒரு பயங்கரத்தை சாவதானமாக சொல்லிவிட்டு மான்சி வரப்பில் இருந்து குதித்து இறங்கி நெருப்பின் அருகே போய் கைக்கட்டி நின்று வேடிக்கைப் பார்த்தாள்

சத்யன் இதை ஒரு சதவிகிதம் கூட எதிர்பார்க்கவில்லை, என் மான்சியா கொலைகாரி, என்று மனம் குமுறினாலும், காரணமின்றி அவள் அதைச்செய்திருக்க மாட்டாள் என்று தன்னை சமாதானம் செய்துகொண்டு அவனும் வரப்பிலிருந்து இறங்கி மான்சி அருகே போனான்

“ மான்சி எனக்கு இன்னும் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லு எதுக்காக யாரை கொலைப் பண்ண?” என்று சத்யன் நெஞ்சில் பதட்டமும் குரலில் நிதானமுமாக கேட்டான்

சிறிதுநேரம் அவளிடம் எந்த பதிலும் இல்லை, அந்த நெருப்பின் வெளிச்சத்தில் அவள் முகமும் நெருப்பைப் போல ஜொலித்தது, உண்மையாகவே காளியைப் போல் ரௌத்திரமாக இருந்தது அவள் முகம், சட்டென்று திரும்பி அவனை நேராகப் பார்த்து “ ஒம்மக் கிட்ட ஒருநாள்,, எங்கண்ணன் என் கையில கெடச்சா அவனுக்கு என் கையாலதான் சாவுன்னு சொன்னேனே அது பொய், அவன் எங்க தேடுனாலும் கெடைக்க மாட்டான், ஏன்னா நான் கொன்னது எங்கண்ணனைத் தான், அவன் தலையைத்தான் அருவாமனையால ஒரே சீவா சீவிட்டேன் சத்தி , கழுத்து அறுபட்டு செத்துட்டான், ஆனா அவனை துண்டுதுண்டா அரியாம ஒரே வெட்ட வெட்டிட்டோமேன்னு நா வெசனப்படாத நாளே இல்ல சத்தி,” என்று மான்சி ஆக்ரோஷமாக சொல்லி முடித்தபோது சத்யனுக்கு தலைசுற்றுவது போல் இருக்க அப்படியே தரையில் அமர்ந்துகொண்டான் 


சத்யன் மடிந்து அமர்ந்ததைக் கூட பார்க்காமல் மான்சி அவள் குடிசையை நோக்கி நடந்தாள்,, சத்யன் திகைப்பில் அப்படியே அமர்ந்திருந்தான், சிறிதுநேரம் கழித்து சத்யன் சுதாரித்துக்கொண்டு எழுந்து சுற்றிலும் மான்சியை தேடினான், அவள் அங்கே இல்லை என்றதும் குடிசைக்குத்தான் போயிருப்பாள் என்ற முடிவுடன் குடிசையை நோக்கி வேகமாக போனான்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 1 Guest(s)