Romance "அவள்" ஒரு தொடர் கதை ... :
#6
பாகம் மூன்று : கோபம் 

"நீ அவனைக் காதலிக்கிறியா?" விரிவுரை முடித்து வந்துகொண்டிருந்தவளைக் கூட்டிச்சென்று கேட்டபோது முதலில் எதுவுமே புரியவில்ல அவளுக்கு. அருகில் நின்ற உஷாவைப் பார்த்தாள். 
"நீ தானே சொன்னாய் கேள் எண்டு.." இப்போது புரிந்துவிட்டது. 

"அதுக்கு இப்படித்தான் சொல்லி வைச்சிருக்கிறியா? நான் இதையா கேக்கச் சொன்னான்?"

"அதுக்கு இதுதானே அர்த்தம்." ரஞ்சன் இடைமறித்தான்.


அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதற்காய் மீண்டும் தப்பு மேல தப்பு செய்கிறாய் என்று உள்மனம் எச்சரித்தது. தூரத்தில் அவன் வழக்கம் போல தமிழ் மரத்தின்கீழே இருந்துகொண்டு எதுவுமே நடவாதது போல கடலை போட்டுக்கொண்டிருந்தான். உண்மையிலேயே இவனுக்கு சம்பந்தம் இல்லையா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறானா


அவர் என்ன சொன்னார்..?" எச்சிலை விழுங்கிக்கொண்டு கேட்டாள்.
"இஞ்சபார்.. அவர்.. மரியாதை.. ஆ..?" என்ற ரஞ்சனின் நக்கலை ரசிக்கும் நிலையில் அவள் இப்போது இல்லை.
"இல்லை அதுவந்து.. என்னால இது முடியாது.. ஆனா எனக்கு அது யார் எண்டு தெரியணும். அவ்வளவுதான். " ஒருமாதிரி சொல்லி முடித்துவிட்டாள்.
"தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறாய்? கட்டிவைத்து உதைக்கப் போகிறாயா?", திடுக்கிட்டாள்.

சில தினங்களுக்கு முன்புதான் அவர்கள் கல்லூரியில் முதலாவது batch trip கூட்டிக்கொண்டு போயிருந்தனர். கந்தானை மலை, வெறும் காடு. கல்லு முள்ளெல்லாம் தாண்டிப் போனா கடைசில ஒரு குட்டி மலை.. அங்கால dead-end .   இதுக்குப் போய் இவ்ளோதூரம் மாங்கு மாங்குன்னு நடந்து வந்ததை நினைக்க எரிச்சலாய் வந்தது அவளுக்கு. நேரம் வேறை இருட்டிப் போயிருந்தது. காடு என்பதால் சீக்கிரமே இருட்டிவிடும். முந்தி மடுவுல இருக்கேக்க கூட இப்படித்தான். பள்ளிக்கூடம் பண்டிவிரிச்சானில இருந்தது. இடையில இப்படியொரு அடர்ந்த காடு, அதைத் தாண்டித்தான் தினமும் போய் வாறது. அங்கை யானைகள் நிறைய இருந்ததால இருட்டிறதுக்கு முதலே வீடு போய்ச் சேர்ந்திடவேண்டும் எண்ட பதற்றத்தில வேகமா சைக்கிளை மிதிப்பம். 

அப்படித்தான் ஒருநாள், பள்ளிக்கூடம் முடிச்சு பக்கத்திலேயே ஒரு டீச்சர் வீட்டை டியூஷன்ம் முடிச்சுக் கொண்டுவர மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. கூட வந்த தோழி வேற, வழியிலிருந்த யானை லத்தியக் காட்டிப் பயமுறுத்திக்கொண்டு வந்தாள். வேகமாய் மிதிக்கலாம் எண்டு சீட்ல இருந்து எழுந்தபோது, சடாரென ஒரு மோட்டர்சைக்கிள்  குறுக்கால் வந்து வழிமறித்தது. திடீரென பிரேக் போட்டதால் சமநிலை தவறி விழப் போனவளைத் தாவி, சைக்கிள் handleஐ இறுகப் பிடித்து காப்பாற்றியது ஒரு ஆணின் கரம்.  மனதுக்குள் எழுந்த பயத்தை மறைத்தபடி யாரென்று பார்த்தாள். இவனா? மாநிறம், அப்பாவித்தனமான முகம். ஒரே பள்ளிக்கூடம் தான். அவள் பத்தாவது படித்துக்கொண்டிருந்தாள். அவன் உயர்தரமோ சாதாரணதரமோ தெரியாது. நல்லவன் எண்டு நினைச்சுக் கொண்டிருந்தோமே? எதுக்காக இந்த நேரத்தில் வந்து வில்லன் போல் வழி மறிக்கிறான்?
Like Reply


Messages In This Thread
RE: "அவள்" ஒரு தொடர் கதை ... : - by johnypowas - 09-02-2019, 08:45 PM



Users browsing this thread: 1 Guest(s)