09-02-2019, 06:35 PM
ரோஷன் சென்றதும் நான் நவீனுக்கு கடமைக்காக சாப்பாடு போட்டு விட்டு நான் சாப்பிடாமல் படுத்தேன். காலையில் நவீன் வேலைக்கு கிளம்பியதும் நான் அம்மாவுக்கு போன் செய்து கொஞ்ச நேரம் பொதுவாக பேசிவிட்டு பிறகு அம்மா நானும் நவீனும் வேறே வீட்டிற்கு குடி போகலாம்னு இருக்கோம் இந்த வீடு எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றதும் அம்மா ஏன்மா நித்யா இப்போதான் குடி போனீங்க கொஞ்ச நாள் முன்னே பேசும் போது கூட அக்கம்பக்கம் இருப்பவர்கள் ரொம்ப நட்போடு பழகுவதாக சொன்னே என்ன ஆச்சு என்றாள் . நான் எப்படி சொல்ல முடியும் என்ன ஆச்சுனு இல்லமா இங்கே இருந்து சிட்டிக்கு போகணும்னா ரொம்ப கஷ்டமா இருக்கு பைக்ல போனா கூட ரொம்ப அலைச்சலா இருக்கு என்றதும் அம்மா அது இல்ல நித்யா இந்த வீடு லீஸ் முடிய இன்னும் ரெண்டு வருடம் இருக்கே என்று சொல்ல நான் உங்களுக்கு எப்படி தெரியும் என்று சற்று அதிர்ந்து. அம்மா நித்யா லீஸ் பணம் அப்பா தானே குடுத்தார் உனக்கு சொல்லவில்லையா மாப்பிள்ளை என்றதும் எப்படி இல்லை என்று சொல்லுவதுன்னு சொன்னார் ஆனா அவர் நண்பர் வீடு அதனாலே பணத்தை திருப்பி வாங்கலாம்னு நவீன் சொன்னார் என்று சொல்லி வைத்தேன். ஆக மொத்தும் நான் பேசின காரணம் நிறைவேறாது என்று புரிந்து கொண்டேன். கண்டிப்பா இனிமே எங்க வீட்டிலே வீடு காரணம் சொல்லி பணம் வாங்க முடியாது என்பது தெளிவாகியது