08-02-2020, 09:02 PM
மாலை ஆறு மணி. சந்துரு தன் அம்மா வீட்டுக்குப் போய் விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் லிபிகா உட்கார்ந்திருந்தாள். அதே நேரம் நிருதியும் சுவாதியுடன் வந்து கொண்டிருந்தான். வழியில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.. !!
"எங்கப்பா.. ரெண்டு பேரும் ஜாலியா போயிட்டு வர மாதிரி இருக்கு?" என்று நிருதியைக் கேட்டான் சந்ரு.
சட்டென பொய் சொன்னான் நிருதி.
"கடைத் தெருவுக்கு வந்தோம். ஆமா நீங்க ரெண்டு பேரும் எங்க போயிட்டு வரீங்க?"
"எங்கம்மாவை பாக்க போனோம். இப்ப திரும்பி வீட்டுக்கு போறோம்"
"சிஸ்டர் இன்னும் சீரியஸாத்தான் இருக்காங்க போலருக்கு" என்று லிபிகாவைப் பார்த்து சிரித்தபடி கேட்டான் நிருதி.
லிபிகா உடனே சிரித்தாள்.
"இவங்க யாரு?"
"என் பக்கத்து வீட்டு பொண்ணு"
"நல்லாருக்காங்க.."
''அப்படிங்கறீங்க.?"
சுவாதி அவன் முதுகில் குத்தினாள். லிபிகா.. "ஜோடி பொருத்தம் நல்லாருக்கு"
சந்துரு "ஏய்.. உன் வாய வெச்சிட்டு சும்மாருடி" என்றான்.
"ஆனால் அவள் அதை மதிக்கவே இல்லை.
"அவங்க பேரு?"
"சுவாதி"
"ஹாய் சுவாதி"
"ஹாய்.. உங்க பேரு?" சுவாதி கேட்டாள்.
"லிபிகா.."
"நீங்களும் அழகாருக்கீங்க"
"தேங்க்ஸ். இந்த மனுஷன் காதுல நல்லா விழுற மாதிரி சொல்லுங்க. என்னை மதிக்கறதே இல்ல.."
சந்துரு "ஏய்.. வாய மூடுடி"
"பாத்திங்களா? இப்படித்தான். எப்ப பாரு திட்டிட்டேதான் இருப்பாரு. ஒரு கொழந்தை பெத்துட்டா எல்லா புருஷனுகளுக்கும் பொண்டாட்டி மேல இருக்குற இன்ட்ரஸ்ட்டே போயிடுது"
"ஏய்.. ரோட்ல போறப்ப இப்படி பேசி மானத்தை வாங்காதடி சனியனே."
"பாத்திங்களா.. ரோட்லயே எப்படி பேசுறார்னு? அழகாருந்து என்ன பண்றது? இதான் பொண்டாட்டிகளுக்கு கெடைக்குற மரியாதை"
சுவாதியும், நிருதியும் லிபிகா பேசியதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தனர். சந்துரு மட்டும் கடுப்பாகியிருந்தான்.
சிறிது நேரத்தில் இரண்டு பைக்குகளும் பிரியும் இடம் வந்தது. பைக்கை ஓரமாக நிறுத்தினான் சந்துரு.
"ப்ரீயா நிரு?"
"ஏன் நண்பா?"
"மீட் பண்ணலாம்னுதான்"
"நான் ப்ரீதான்.. ஆனா சிஸ்டர்.."
"அவ கெடக்கா. வீட்ல கொண்டு போய் தள்ளினா வேலை முடிஞ்சுது"
"காலை ஒடைச்சிருவேன். ஜாக்கிரதை" என்றாள் லிபிகா.
"சும்மாருடி. சுவாதியை வீட்ல விட்டுட்டு வரியா நிரு?"
"ஓகே. வரேன்"
"நான் கால் பண்றேன்"
"சரி.."
லிபிகா.. "நான் ஒண்ணு கேக்கவா?" என்று நிருதியைக் கேட்டாள்.
"கேளுங்க சிஸ்டர்"
"சுவாதி கோவிச்சுக்குவாங்களோனு தோணுது?"
"பரவால கேளுங்க"
"லவ் பண்றீங்களா?"
"சே.. என்னங்க நீங்க..."
சுவாதி வெட்கப் படுவதை கவனித்தாள் லிபிகா.
"ஓகே.. புரிஞ்சு போச்சு. சரி.. போங்க"
"ஓகேங்க.. நான் மத்த விபரம்லாம் அப்பறம் சொல்றேன்"
"இன்னொண்ணு"
"என்ன?"
"நீங்க ரெண்டு பேரும் எதுக்கு மீட் பண்ண போறீங்கனு சுவாதிக்கு தெரியுமா?"
"அது தெரியாது. ஆனா... அதனால நோ ப்ராப்ளம்.."
"என்னை மாதிரிதானா?"
"ஐயோ.. ப்யூச்சர்ல எப்படினு தெரியலங்க."
"சரி.. சரி.. ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லாருக்கு. வாழ்த்துக்கள். அப்பறம்.. உங்க பிரெண்டுக்கு ஒரு சங்கு குடுத்திங்கனா போதும். ரொம்ப போச்சுனா வீட்ல வந்து அவரு பண்ற அலம்பற தாங்க முடியாது" என்று சிரித்தபடி சொன்னாள்.
சந்துரு "விட்டா இவ ரோடுனு கூட பாக்காம நாள் பூரா பேசிட்டே இருப்பா..ஓகே நிரு. பத்து நிமிசத்துல நான் உனக்கு கால் பண்றேன்"
"ஓகே.."
நால்வரும் தலையாட்டி விடைபெற்று இரண்டு வழிகளில் பிரிந்தனர். சற்று நகர்ந்ததும் நிருதியைக் கேட்டாள் சுவாதி.
"இப்ப ரெண்டு பேரும் எங்க போறீங்க?"
"சும்மா... பேச.."
''இல்லையே.. அவங்க சொன்னதை வெச்சு பாத்தா.. சரக்கடிக்க போற மாதிரி இல்ல இருக்கு?"
"ம்ம்.. ஆமா"
"அவங்க இவ்ளோ ஜாலியா பேசறாங்க.. சரக்கடிச்சா விட்றுவாங்களா?"
"நம்மாளு அம்புட்டு நல்லவன்பா.. குடிச்சாலும் சைலண்ட்டா போயிறுவான். சின்ன பிரச்சினை கூட வராது"
"அப்ப நீ..?"
"என்னைத்தான் உனக்கே தெரியுமே?"
"எனக்கு தெரியாது"
"நாங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். அப்பிராணிக."
"பாக்கறேன். ஏதாவது வம்பு வந்துச்சு.. தொலைச்சிருவேன் உன்னை"
"நாம லவ் பண்றோம்னு ஈஸியா கண்டு புடிச்சிட்டாங்க போலருக்கு"
"ஆமா.. எப்படி?"
"அவங்களும் லவ் மேரேஜ்தான்."
"கள்ளம் கபடமில்லாம சிரிச்சு பேசறாங்க. அவங்களை மொத டைம் பாக்கற மாதிரியே இல்ல?"
"இதென்ன பேச்சு. நீ அவங்க வீட்டுக்கு போயி பாரு.. சிரிச்சிட்டே இருக்கலாம். என்ன ஒண்ணுன்னா.. கொஞ்சம் ஞாபக மறதி. எதையும் புரிஞ்சுக்க கொஞ்சம் லேட்டாகும். ரெண்டு ரெண்டு வாட்டி சொல்லணும். அதுக்கெல்லாம் நம்ம நண்பன்தான் கரெக்ட்.. எதையும் ஒரே வார்த்தைல புரிய வெச்சிருவான்"
"நல்ல ஜோடி போல?"
"விட்டுக் குடுத்து போனா எல்லாருமே நல்ல ஜோடிதான். இப்ப பாரு. இவன் தண்ணியடிக்கறானு அவங்க சண்டையெல்லாம் போட மாட்டாங்க. வேணும்னா வீட்லயே வாங்கிட்டு வந்து குடினுதான் சொல்லுவாங்க"
"அப்போ என்னையும் அப்படி இருக்க சொல்றியா?"
"தப்பில்லேனு தோணுது"
"கொன்றுவேன். கல்யாணத்துக்கப்புறம் குடிக்கவே கூடாது"
"அடிப்பாவி.. இப்பவேவா.. ஹூம்.. !!
சுவாதி வீட்டின் முன் இறங்கி பை சொல்லிப் போனாள். அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக வந்ததை இரண்டு வீட்டிலும் யாரும் பார்க்கவில்லை. நிருதி தன் வீட்டுக்குள் போய் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.. !!