மான்சி கதைகள் by sathiyan
#16
அவள் தோளில் இருந்த தலையை நகர்த்தாமல், ஒருகையால் அவள் கைகளை பற்றி மறுகையால் அவளின் தோளைச் சுற்றிவளைத்து “ மான்சி நான் என்னைப்பற்றிய உண்மையெல்லாம் சொல்லிர்றேன், அதுக்கப்புறம் என்னை வேண்டாம்னு மட்டும் சொல்லிராதே,, மனுவோட அம்மா செத்துப்போகலை, இன்னும் உயிரோடதான் இருக்கா, ஆனா புழுவைத்த அழுகிய பிணமாக இருக்கா” என்று சத்யன் சொன்னதும், மான்சியின் உடலில் சட்டென்று ஒரு விரைப்பு ஏற்ப்பட அவனைவிட்டு ஒதுங்க முயன்றாள்

ஆனால் சத்யன் விடவில்லை, அவளைச் சுற்றிய கையை மேலும் இறுக்கி தன்னோடு அவளைச் சேர்த்துக்கொண்டான், “ மான்சி நான் சொல்றதையெல்லாம் கேட்டுட்டு, அதுக்கப்புறமா நீ என்ன எதுவேன பண்ணு, மான்சி நீ வறுமையால கஷ்டப்பட்ட, நான் அதிகமான பணத்தால் கஷ்டப்பட்டேன், ஆமா மான்சி பண்ம், அந்த பணம் என் வாழ்க்கையில் அரங்கேற்றிய கேவலத்தை எல்லாம் சொன்னா நீ என்னை ஒரு மனுஷனாக் கூட மதிக்கமாட்ட” என்று ஆரம்பித்து கல்யாணம் என்ற பெயரில் தன் வாழ்க்கையில் நடந்த கேவலத்தை சொன்னான், மனைவி என்ற பெயரில் தனக்கு வாய்த்த காமப்பேயைப் பற்றிச் சொன்னான், அங்கு தான் பட்ட அவமானங்களை கலங்கிய கண்களுடன் கூறினான், இறுதியாக அந்த பணக்கார வீட்டில் தன் கண்ணெதிரே நடந்த விபச்சாரத்தைப் பற்றிச்சொன்னான், தன் மனைவி வேசியான கதையை வரிவிடாமல் சொன்னான், நயாபைசா கூட இல்லாமல் அந்த வீட்டைவிட்டு வெளியே வந்ததும் திலகம் உதவியதையும் சொல்லி அவன் முடிக்கும்போது, அவன் மான்சியின் கைகளைப் பற்றியிருந்தது போய் மான்சி அவன் கைகளைப் பற்றியிருந்தாள்

பற்றியிருந்த கையை விடாமல் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு “ அய்யோ இதுக்குமேல எதையும் சொல்லாதேயேன் என்னால காதுகொடுத்துக் கேட்கமுடியல, வேனாம்பா எல்லாத்தையும் மறந்துட்டு, ஒரு நல்லப் பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிகிட்டு நிம்மதியா இரு” என்று மான்சி மெல்லிய கதறலோடு சொல்ல


சத்யன் வெடுக்கென்று தன் கையை உருவிக்கொண்டு “ ஏய் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்க நான் ஏன் உன்கிட்ட வந்து என் கதையை சொல்லனும், இதோபார் மான்சி, எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருந்தாலும் நான் ஒருநாள் கூட என் பொண்டாட்டியா இருந்தவளை நேசிக்கலை, நேசிக்கும்படி அவளும் நடந்துக்கலை, ஆனா உன் பார்த்த நாளில் இருந்து உன்னை விரும்புறேன், உயிரா விரும்புறேன் மான்சி, அதைச் சொல்ல இத்தனை நாளா எனக்கு பயமாவும் தயக்கமாவும் இருந்துச்சு, இப்போ உன்னை கிணத்துல குளிக்கும்போது பார்த்தப்ப ஏதோ எனக்கு சொந்தமானவளை பார்க்குறமாதிரி ஒரு பீலிங், அய்யோ என் மனசுல குற்றவுணர்வே வரலை, அந்த நிமிஷமே முடிவு பண்ணிட்டேன் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு சீக்கிரமே உன்கூட சேர்ந்து வாழனும்னு, நான் பணத்துக்கு ஆசைப்பட்டு அவ கழுத்துல தாலிக்கட்டலை, நம்ம மகன் நல்லாருக்கனும்னு ஆசைப்பட்ட ஒரு தாயோட ஆசையை நிறைவேத்த தான் அவளை கல்யாணம் பண்ணேன், ஆனா அவளை கல்யாணம் பண்ணதாலேயே என் அம்மாவோட உயிர் போச்சு மான்சி, இப்ப சொல்லு மான்சி என்னை பத்தி கேவலமான நெனைப்பு எதுவும் இப்போ வரலையே, எனக்குத் தெரியும் மான்சி நீயும் என்னை விரும்புறேன்னு ” என்று சத்யன் கேட்க

அவ்வளவு நேரமாக தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தவள், திடீரென ஓவென்று சத்தம் போட்டு அழுதாள், அவன் கையை எடுத்து தன் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் “ நா ஒனக்கு வேனாம் சத்தி, நீ நல்லாருக்கனும் , என் வாழ்க்கை முடிஞ்சுபோச்சு, இனிமே கல்யாணம் பண்ணி புருஷன் புள்ளைகளோட வாழனும்னு எனக்கு ஆசையில்லை சத்தி, என்னை விட்டுடு” என்று கூறிவிட்டு மான்சி எழுந்து அங்கிருந்து ஓட யத்தனிக்க...

சத்யன் அவளை எட்டிப் பிடித்து “ எங்க என் மூஞ்சியப் பாத்து சொல்லு? , உனக்கு என்கூட வாழ ஆசையில்லேன்னு?, மனுவுக்கு அம்மாவா இருக்கனும்னு உனக்கு தோணலை?” என்று சத்யன் கேட்க

“ இல்ல சத்தி ஓனக்கு தகுதியான ஆள் நான் கெடையாது, என்னைவிடு நான் போறேன்” என்று சொல்லி சத்யனை உதறிவிட்டு திரும்பினாள்

அவள் அக்குளில் கைவிட்டு அழுத்தமாய் பற்றி தன்பக்கம் திருப்பிய சத்யன் “ ஏன் தகுதியில்லை, நீ ஏற்கனவே கல்யாணம் ஆன விதைவையா?” என்று கேட்டான்

“ இல்ல இல்ல எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை” என்று கண்ணீருடன் பலமாக தலையசைத்தாள் மான்சி

“ அப்போ யாராவது உன்னை ஏமாத்தி கற்பழிச்சுட்டாங்களா? ” சத்யன் விடாமல் கேட்டான்

பட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி விழிகளில் அனல் பறக்க “ என்மேல எவனும் கைவைக்க முடியாது” என்றாள் ஆவேசமாக ..
சத்யன் பட்டென்று அவளைத் திருப்பி தன் நெஞ்சில் மோதி “ ஏன் தொடமுடியாது, இதோ நான் தொட்டுட்டேனே” என்று கேலியாக சொன்னவன், அவள் முகத்தில் இருந்த ரௌத்திரத்தை பார்த்து “ இதோபார் மான்சி இது ரெண்டுமே உன் வாழ்க்கையில் நடந்திருந்தாலும் நீதான் எனக்கு வேனும், உன்னைத்தவிர வேற யாருக்கும் என் மனசுல இடமில்லை, என் வாழ்க்கையில் வந்த முதல் காதல் இதுதான், இந்த காதல் தோற்க நான் விடமாட்டேன், இப்போ நீ வீட்டுக்குப் போ நாளைக்கு சூளைக்கு நெருப்பு வச்சதும் உன்னோட பதிலைச் சொல்லு” என்று கூறிவிட்டு அவளை விடுவிக்க மான்சி ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தாள்

சத்யன் சிறிதுநேரம் அங்கேயே இருந்துவிட்டு வீட்டுக்குள் வந்தான், போனதும் மகனை தூக்கிக்கொண்டு அரிசியில் கல் பொறுக்கிக்கொண்டு இருந்த பாட்டியின் அருகே அமர்ந்தான்,

“ என்ன சத்தி அந்தப் புள்ள அழுதுக்கிட்டே ஓடுது, அவகிட்ட என்னா கேட்ட” என்று பாட்டி இயல்பாய் கேட்க

ஒரு நிமிடம் மூச்சை இழுத்துப்பிடித்து விட்ட சத்யன் “ அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் பாட்டி அதை அவகிட்ட சொன்னேன், அதுக்கு அழுதுகிட்டு ஓடுற, எல்லா நாளைக்கு சமாதானமாயிருவா” என்று பாட்டிக்கு சொல்வதுபோல் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான் சத்யன்

முறத்தில் இருந்த அரிசியை புடைத்த வாறே “ ம்ஹும் நல்லப்புள்ள தான் ஆனா அவளோட சம்மதம் இல்லாம எதனாச்சும் பண்ணிப்புடாதலே அப்புறம் வில்லங்கமா போயிடும்” என்று பாட்டி சொல்ல

பாட்டி எதைச்சொல்றாங்க என்று சத்யனுக்குப் புரியவில்லை, “ என்னப் பாட்டி என்னை இவ்வளவு கேவலமா நெனைச்சுட்ட, அப்படி நான் எதுவும் பண்ணமாட்டேன்” என்று சத்யன் விசனத்துடன் சொல்ல..

“ நான் உன்னைய சொல்லலலே, அந்த மூதியோட கொணத்தை சொன்னேன், அவகிட்ட பேசிப்பாரு ஒனக்கே புரியும்” என்று சொல்லிவிட்டு பாட்டி வேலையில் ஆழ்ந்தார்


இன்னமும் மான்சி தனக்கு ஒரு புரியாத புதிராகவே இருப்பதுபோல் சத்யனுக்கு தோன்றியது, என்னை திருமணம் செய்ய அவளுக்கு என்னதான் தடையோ தெரியலையே, என்று மனம் நொந்து அன்றைய பொழுதை போக்கினான்

மறுநாள் எழுந்து காலையில் பல்லை விளக்கிவிட்டு நேராக மான்சி குடிசைக்குத்தான் போனான், மான்சியின் அம்மா மட்டுமே இருந்தாள், இவனைப் பார்த்ததுமே “ தம்பி மான்சியும் புவனேஸ்வரியும் டவுனுக்கு போயிருக்காளுக, சாயங்காலமா தான் வருவேன்னு சொன்னாளுக ” என்று சத்யனுக்கு பிடிக்காத தகவலை சொல்ல சத்யன் அரைமனதாக தன் வீட்டுக்கு வந்தான்

அன்று மாலைவரை சத்யனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை, தனது புதுக் காதலியைப் பார்க்க ஏங்கும் டீனேஜ் பையன் நிலையில் இருந்தான், வீட்டுக்கும் வாசலுக்கும் நூறுமுறை நடந்தான், பாட்டிக்கு புரிய மனதோடு சிரித்துக்கொண்டார்,, சத்யன் முதன்முறையாக கண்ணாடியில் தன் அழகை பார்த்து மான்சிக்கு இந்த முகம் பொறுத்தமா என்று எடைப் போட்டான், அவள் துலக்கி வைத்த செப்புப் சிலையைப் போல ஒரு கலையான அழகு, என்று அவன் மனம் அவளுக்காக பரிந்து வந்தது

வயலுக்கு வரும் மண் ரோட்டில் மகனுடன் வெகுநேரம் காத்திருந்தான், மான்சியும் அவள் தங்கையும் வரவில்லை, மனு அழ ஆரம்பிக்க சத்யன் சலிப்போடு எழுந்து வீட்டுக்குப் போனான்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 2 Guest(s)