மான்சி கதைகள் by sathiyan
#15
“ ம்ம், இரு துணியை காயப்போட்டுட்டு வர்றேன்” என்றவள் தோளில் கிடந்த ஈரத் துணிகளை வரப்பில் காயவைத்துவிட்டு கிணற்றின் ஓரமாக வைத்திருந்த மாற்று உடையை எடுத்துக்கொண்டு சுற்றிலும் பார்த்துவிட்டு சத்யனைப் பார்த்து ஒரு முறை முறைக்க, சத்யன் பட்டென்று மரத்தின் பக்கமாக திரும்பிக் கொண்டான்,

மான்சி உடை மாற்றிக்கொண்டு கட்டியிருந்த பாவாடையையும் காய வைத்துவிட்டு சத்யன் அருகில் வந்தாள், “ வா போகலாம்” என்று கூறிவிட்டு முன்னால் நடக்க சத்யன் பின்னால் நடந்தான்,

அவள் இருக்கும் குடிசையருகே போனவள் குனிந்து உள்ளே போய், தட்டில் சோற்றைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள், பக்கத்தில் இருந்த மேட்டில் அமர , சத்யன் வந்து அவளுக்கு பக்கத்தில் அமர்ந்துகொண்டான், மான்சி சோற்றை குழம்போடு சேர்த்து பிசைந்து ஒரு கவளம் உருட்டி வாயில் போட்டுக்கொண்டு " குளிச்சதும் பயங்கர பசி" என்றபடி அடுத்த கவளத்தை எடுத்து வாயருகே கொண்டு போனவள் வாயில் போடாமல் அதை அப்படியே சத்யனிடம் நீட்டினாள்,

" ம்ஹூம் நான் இப்பத்தான் சாப்பிட்டேன்,, நீ சாப்பிடு" என்று சத்யன் மறுக்க,, மான்சி அதை தன் வாயில் போட்டுக்கொண்டாள்,, அவள் வேகவேகமாக சாப்பிடுவதையே பார்த்த சத்யன் தட்டில் முக்கால்வாசி காலியானதும், சோற்றுக்காக கையை நீட்டினான், மான்சி அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, சோற்றை உருட்டி அவன் கையில் வைக்க சத்யன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே சாப்பிட்டான்

மான்சி எவ்வளவு பெரிய பேரழகி என்று சத்யன் கண்டுகொண்டான், அவள் கண்கள் அவளைவிட்டு நகரவில்லை, அவள் உருட்டித் தரும் சோற்றை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே அவளையும் சேர்த்து விழுங்கினான்

சாப்பிட்டு முடித்து கைகழுவிவிட்டு வந்தவர்கள் மறுபடியும் அதே இடத்தில் வந்து அமர்ந்தார்கள், " என்னை எதுக்கு பார்க்க வந்த" என்று மான்சி கேட்டாள்..

" இல்ல எல்லாரும் சினிமாவுக்கு போறாங்களோ நாமலும் போகலாமான்னு கேட்க வந்தேன்" என்றான் சத்யன்

" எனக்கு சினிமா பார்த்து பழக்கமில்லை, பிடிக்கவும் பிடிக்காது" என்று பட்டென்று பதில் சொன்னாள்

அதன்பின் அங்கே ஒரு பலத்த மௌனம் நிலவ, சட்டென்று அங்கிருந்து எழுந்த மான்சி " வீட்டுல மனு தனியா இருப்பான்ல, வா வீட்டுக்கு போகலாம்" என்று சத்யன் வீடு நோக்கி நடந்தாள் , சத்யனும் அவள் பின்னால் போனான்


மான்சி வேகமாக சத்யனின் வீட்டுக்குள் போய் மனுவைத் தூக்கி அணைத்துக்கொண்டு தோட்டத்துப் பக்கமாக போக, சத்யன் அவள் பின்னோடு போனான், பாட்டி இருவரையும் வித்தியாசமாக பார்த்தார்,

தோட்டத்துக்குப் போன மான்சி அங்கிருந்த ஒரு மேட்டில் அமர்ந்தாள், சத்யன் அவளுக்கு அருகே அமர்ந்தான், எப்போதுமே சிறு இடைவெளிவிட்டு அமரும் சத்யன் அன்று மான்சியை உரசிக்கொண்டு அமர்ந்தான், அவன் மனதில் கள்ளம் இல்லை, போதும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்று எண்ணினான்
இன்று அவளுடன் எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும், என்று எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான், அவளுக்கு தன்மீது கோபமில்லை என்றதும் சத்யனின் துணிச்சல் அதிகமானது,

இவன் உரசிக்கொண்டு அமர்ந்ததும் மான்சி சட்டென்று நகர்ந்து அமர, சத்யன் விடவில்லை அவனும் நகர்ந்தான், மான்சி அவனைத் திரும்பிப்பார்த்து முறைக்க, சத்யன் சளைக்காமல் சிறு புன்னகையுடன் அந்த முறைப்பை தாங்கினான், அவனுடைய துணிச்சல் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது,
மான்சியின் கையில் இருந்த மனுவை வாங்கி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு “ மனுச் செல்லம் நீங்க பாட்டிக்கிட்ட போய் இருங்க நானும் மான்சியம்மாவும் இப்போ வர்றோம்” என்று சொல்லி குழந்தையை கீழே விட..

“ சரிப்பா “ என்று மழலையில் சொல்லிவிட்டு மான்சியைப் பார்த்தான் மனு
மான்சியும் அவனை தூக்கி கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டதும் குழந்தை சந்தோஷமாக பாட்டியைப் பார்க்க ஓடியது,

குழந்தை போனதும் அங்கே துரும்பு விழுந்தாலும் அலறும் அளவுக்கு பலத்த அமைதி நிலவியது, சத்யன் மான்சியின் இரண்டு கையையும் எட்டிப் பற்றினான், மான்சி விடுவித்துக் கொள்ள முயன்றாலும் சத்யன் விடவில்லை , “ மான்சி இனிமேல் மறைக்க எதுவுமில்லை, நான் உன்னை விரும்புறேன், இனி ஒருநாள் கூட நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது, அதனால உனக்குத் தெரியாத என்னைப்பற்றிய விஷயங்களை சொல்றதுன்னு முடிவுப் பண்ணிட்டேன்” என்றான்

மான்சி எதுவுமே சொல்லவில்லை, அமைதியாக எதிரில் இருந்த கொய்யா மரத்து குருவிகளை வெறித்துக்கொண்டு இருந்தாள், சத்யனிடம் இருந்த கைகளை எடுத்துக்கொள்ளவும் இல்லை, அவள் முகம் இருக்கமாகவும், கண்கள் கலங்கியும் இருந்தது,

சத்யன் அவள் கைகளை விரித்துப்பார்த்தான், உழைத்து உரமேறி காய்த்துப்போன கைகள், நகங்கள் உடைந்து சிதைந்து போயிருந்தது, சத்யன் தன் விரலால் அவள் கைகளை வருடினான், பிறகு குனிந்து அந்த கைகளில் முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்து மான்சியின் முகத்தைப் பார்த்தான்


அவள் விழிமூடியிருக்க விழியோரத்தில் கண்ணீர் கோடாய் வழிந்தது, சத்யன் அவள் கண்ணீரை துடைத்தான், “ மான்சி நீ அழக்கூடாது, என் மான்சி எப்பவுமே பத்ரகாளி மாதிரி வீரமா நி்க்கனும், கோழைபோல் கண்ணீர் விடக்கூடாது, இதெல்லாம் ஒரு பொண்ணோட வாழ்க்கையில் இயல்பா நடக்கவேண்டியது தான், என்ன உனக்கு கொஞ்சம் லேட் ஆயிருச்சு அவ்வளவுதான், சரி நானும் உன்கிட்ட வந்து சேரனும்னு விதியிருக்கு அதை மாற்ற முடியுமா மான்சி” என்று கூறிவிட்டு அவளை இன்னும் நெருங்கி அமர்ந்து அவள் தோளில் தன் தலையை சாய்த்தான்

இத்தனை நாளாய் மான்சி பேச சத்யன் கேட்ப்பான், இன்று சத்யன் பேச மான்சி அமைதி காத்தாள், சத்யனுக்கு தன் மனதில் இருப்பவையெல்லாம் கொட்டவேண்டும், மான்சியுடன் சீக்கிரமே சேர்ந்து வாழவேண்டும், அவளுடன் இணைந்து ஒரு இனிமையான தாம்பத்தியத்தை அனுபவிக்க வேண்டும், இவை எல்லாமே வெகுசீக்கிரத்தில் நடக்கவேண்டும், அதைத்தவிர வேறு எதைப்பற்றியும் சத்யன் சிந்திக்கவில்லை
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 3 Guest(s)