மான்சி கதைகள் by sathiyan
#13
வீட்டுக்கு வந்து கைகழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தான்,, அவன் கைகள் அதற்க்குள் மென்மையைத் தொலைத்து சொரசொரப்பாக மாறியிருந்தது,, அரைநாள் வேலைக்கே என் கைகள் இப்படி ஆயிருச்சே, மான்சி வருஷக்கணக்கா இதே வேலையை செய்றாளே அவ கைகள் எப்படி இருக்கும் என்று நினைத்தபடி சத்யன் சாப்பிட்டான்

சாப்பிட்டு முடித்ததும் சிறிதுநேரம் மனுவை கொஞ்சிவிட்டு எழுந்து சூளைக்கு போனான், ஒரு ஓரமாக கிடந்த பாறையில் அமர்ந்து மான்சி அப்போதுதான் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள், சத்யன் அவள் பக்கத்தில் கிடந்த கல்லில் அமர்ந்தான்,

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ நீ அதுக்குள்ள சாப்பிட்டயா” என்று கேட்டுவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காது மறுபடியும் தூக்குசட்டியில் இருந்த சோற்றை அள்ளி தன் வாயில் அடைத்தாள்

அவள் சாப்பிடுவது தண்ணி சோறு என்று தெரிந்தது, “ ஏன் மான்சி கொழம்பு வைக்கலையா?” என்று அக்கறையாக கேட்டான் சத்யன்

வாயில் இருந்த சோற்றை விழுங்கிவிட்டு, தூக்குசட்டியில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு “ அதையேன் கேட்குற, காலையில நீ வந்து போனதுக்கு அப்பறம் உன்னையே நெனைச்சுக்கிட்டு இருந்தேனா, அடுப்புல இருந்த பருப்பு தீஞ்சு போச்சு, அப்புறம் எங்கருந்து கொழம்பு வைக்கறது எடுத்து கொட்டிட்டு சோத்துல தண்ணிய ஊத்தி வச்சேன்” என்று மான்சி சொல்ல

தன்னைப்பற்றி அவள் நினைத்தாள் என்றதும் சத்யனின் ஆவல் அதிகமாக, என்ன நினைத்தாள் என்று கேட்க எண்ணினான், ஆனால் ஏதாவது துடுக்காக பேசிவிடுவாளோ என்று பயந்து வாயை மூடிக்கொண்டான்,

மான்சி சாப்பிட்டு முடித்துவிட்டு துக்கையும் கையையும் கழுவிவிட்டு சத்யன் அருகில் வந்து உட்கார்ந்தாள்,, “ யப்பா மாசிலயே இப்படி வெயில் கொழுத்ததுதே இன்னும் சித்திரையில் என்னப் பண்ணுமோ தெரியலை, இந்த வெயில் எல்லாம் உன்னால தாங்க முடியாது சீக்கிரமா ஏதாவது வேலையை தேடிக்க” என்று சொன்னவாறு தலையில் இருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக்கொன்டள்

சத்யன் சரியென்று தலையசைத்து விட்டு அமைதியாக இருந்தான்,, சிறிதுநேரம் கழித்து “ உனக்கு என்ன வயசு ஆகுது மான்சி” என்றான்

எதுக்கு கேட்குற என்பதுபோல் மான்சி அவனை நேராய் பார்க்க ..

“ இல்ல உன் தங்கச்சிக்கே கல்யாணம் ஆகி குழந்தை இருக்குன்னு சொன்னியே அதான் உனக்கு என்ன வயசு ஆகுதுன்னு கேட்டேன்” என்றான் சமாதானமாக..

அவனுடைய இறங்கலான பேச்சு அவளை ஏதோ செய்ய “ ம்ம் வர்ற வைகாசி வந்தா இருபத்தேழு வயசு ஆரம்பிக்குது” என்றாள் மெல்லிய குரலில்


சத்யனுக்கு வியப்பாக இருந்தது வெறும் சட்டை பாவாடையில் அவள் வயது மறைந்துவிட்டது என்று நினைத்தான், அவள் என்ன என்பதுபோல் பார்க்க “ இல்ல நீ ஏன் இந்த மாதிரி டிரஸ் போடுற, சீலையெல்லாம் கட்டமாட்டியா?” என்று சத்யன் தயக்கமாக கேட்க

“ ம்ஹூம் இந்த வேலைக்கெல்லாம் இந்தமாதிரி உடுப்புதான் சரி, சீலை எல்லாம் சரியா வராது, அதோட சீலை கட்டிக்கிட்டு வேலை செய்றவளை எல்லாம் பார்த்தியா, அவளுக வேலை மும்முரத்துல ஒரு பக்கம் தொறந்து கெடக்குறது கூட தெரியாம வேலை செய்வாளுக, நம்ம பயளுக வாயை தொறந்துகிட்டு அதை வேடிக்கை பாப்பானுக தேவையா இது, அதான் நான் இதைத்தவிர வேற எந்த உடுப்பும் போடமாட்டேன், எப்பவாச்சும் கோயிலுக்கு போன சீலை கட்டுவேன், ஆனா கோயிலுக்கு போக எனக்கு பிடிக்காது” என்று நீண்ட விளக்கமாய் மான்சி சொல்லிவிட்டு எழுந்து சூளை அருகே போனாள்

சத்யனுக்கு இந்த செய்தியும் வியப்பாகத்தான் இருந்தது, தெய்வத்தை பிடிக்காத பெண்ணா? இவளுக்குள் இன்னும் என்னவெல்லாம் அதிசயம் இருக்கோ என்று எண்ணியபடி அவள் பின்னால் போனான்

மாலை வேலையின் போது அவள் அம்மாவையும், தங்கையையும் சத்யனுக்கு காட்டினாள், அம்மா ஏதோ நோய்வாய்ப்பட்டவள் போல நோஞ்சானாக இருந்தாள், தங்கை மான்சியை விட குள்ளமாக சற்று அகலமாக இருந்தாள், “ அவ எங்கப்பனை மாதிரி” என்று மான்சி விளக்கம் சொன்னாள்

அன்று வேலை முடிந்தபோது, சத்யன் ஐம்பது கல்தான் அறுத்திருந்தான், மான்சி இருநூறு கல் அறுத்து நாநூறு ரூபாய் கூலி வாங்க, சத்யன் நூறுரூபாய் வாங்கினான் ,

அவனை பார்த்த மான்சி “ இன்னும் காசு வேனுமா, இந்தா நூறுரூவா வச்சுக்க” என்று அவன் கையில் தினிக்க, சத்யன் மறுத்துவிட்டான்

“ பணத்துக்கு கஷ்டம் இல்லை மான்சி, வீட்டுல சும்மா இருக்க பிடிக்காமதான் வேலைக்கு வந்தேன், நீ போ சீக்கிரமா கொழம்பு வச்சு சாப்பிடு” என்று அக்கரையுடன் சொல்லிவிட்டு சத்யன் போக ,, மான்சி அவனையே பார்த்தாள் யாருமே அவள் வயிற்றைப் பற்றி கவலைப்பட்டது இல்லை, ஒரு கணம் மனம் தடுமாறினாலும் உடனே தோளை சிலுப்பிக்கொண்டு குடிசையை நோக்கி நடந்தாள்

சத்யன் வெந்நீரில் குளித்து சாப்பிட்டுவிட்டு வெளியே கிடந்த நாடா கட்டிலில் மகனை மார்பில் போட்டுக்கொண்டு படுத்தான், கைகள் மகனை தடவிக்கொடுத்தாலும் மனம் மான்சியைப் பற்றி எண்ணியது ‘ குழம்பு வச்சு சாப்பிட்டுருப்பாளா? பாவம் காலையிலயே தண்ணி சோறு சாப்பிட்டாளே,, அப்படி என்னதான் என்னைப்பற்றி நெனைச்சுருப்பா?’ என்றெல்லாம் சத்யன் நினைத்துக்கொண்டு படுத்தப்படி தலையைத் திருப்பி மான்சியின் குடிசையை பார்த்தான்

வயலில் இருந்த பம்புசெட்டில் இருந்து வயர் கனெக்சன் எடுத்து ஒரேயொரு பல்பு போடப்பட்டு இருந்தது, அந்த சொர்ப்ப வெளிச்சத்தில் வெளியே வந்து யாரோ கைகழுவுவது தெரிந்தது, சத்யன் உற்றுப்பார்த்தான், அவன் கண்ணும் மனமும் மான்சி தான் என்று அடையாளம் கண்டது

‘ ஓ சாப்பிட்டா போலருக்கு’ என்று எண்ணியபடி இன்னும் உற்று பார்க்க மான்சி கையில் இருந்த தட்டை கீழே வைத்துவிட்டு சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பாவாடையை சுருட்டியபடி பட்டென்று தரையில் குத்தங்காலிட்டு அமர “ ச்சீ அடிப்பாவி” என்று வாய்விட்டு சொன்னவன் சிறு புன்னகையுடன் திரும்பிக்கொண்டான்

சத்யன் மித்ராவையும் அவள் செய்த துரோகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முயன்றான், மான்சி ஞாபகங்கள் அதற்கு பெரிதும் உதவியது, அவளின் ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்கு அதிசயம் என்றால் அவளின் ஒவ்வொரு செயலும் ஆச்சர்யமாக இருந்தது, அதிகமாக அவளை கவனிக்க ஆரம்பித்தான்

அதன் பிறகு வந்த நாட்களில் இருவரும் நிறைய பேசினார்கள், மான்சி அதிகமாக மனுவைப் பற்றி பேசுவாள், இல்லையென்றால் தங்கையின் கல்யாணத்துக்கு இன்னும் எவ்வளவு பணம் சேர்க்கவேண்டும் என்று சத்யனிடம் கணக்கு சொல்வாள், தன் அம்மாவின் செய்யவேண்டிய வைத்தியம் பற்றி சொல்வாள்,, சத்யன் அவள் பேசுவதை எல்லாம் கவனமாக கேட்ப்பான், தனக்கு தெரிந்த யோசனைகளை கூறுவான்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 1 Guest(s)