மான்சி கதைகள் by sathiyan
#12
சத்யன் அவளருகே அமர்ந்தான், கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு அவளைப்போலவே குத்தங்காலிட்டு அமர்ந்தால் உள்ளே இருக்கும் ஜட்டி வரை தெரிந்தது, சத்யன் சங்கடமாக எழுந்துவிட்டான்,

மான்சி நிமிர்ந்து அவனைப் பார்த்து “ என்னாயா எந்திரிச்சிட்ட?” என்று கேட்க,, சத்யன் சங்கடமாக பார்த்தான்

மான்சி அவன் பார்வையிலேயே அவனது சங்கடத்தை புரிந்துகொண்டு “ கைலியை தொடைக்கு நடுவுல விட்டு பின்னாடி சொருகிட்டு வேலையைப் பாரு, கோமணம் கட்டுற மாதிரி, கீப்பாசு கட்டனும்” என்று கூறிவிட்டு மீண்டும் தனது வேலையை தொடர்ந்தாள்

சத்யன் பக்கத்தில் இருந்தவனை பார்த்து அதேபோல் கட்டிக்கொண்டு மான்சி அருகில் அமர்ந்து பக்கத்தில் இருந்த செங்கல் அச்சை எடுத்த மண்ணில் பதித்து கோணலாக இரண்டு கல்லை உருவாக்கினான், மான்சி தன் வேலையை போட்டுவிட்டு எப்படி கல் அச்சிடுவது என்று அவனுக்கு கற்றுக்கொடுத்தாள், முதலில் தடுமாறினாலும் பிறகு சத்யன் சரியாக கற்றுக்கொண்டான், ஆனால் மெதுவாக செய்தான்,

“ இதப்பாருய்யா இன்னும் வெரசா அறுக்கனும், இன்னிக்குப் பூராவும் நூறு கல்லு அறுத்தா எருநூறு ரூவா கூலி, நா ஒருநாளைக்கு எரநூறு கல்லு அறுப்பேன், ஆம்பளைக் கூட என்கூட போட்டிப் போட முடியாது” என்று பேசிக்கொண்டே வேலை செய்தாள்

அருகில் இருந்த ஒரு சிலர் இவர்களை கவனித்தாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை .

“ நேத்து நைட்டு தா ஒம்ம மவனை பார்த்தேன் அம்மாச்சி வச்சிகிட்டு இருந்துச்சு, என்னா சமத்து புள்ளய்யா ஒம் மவன், மொதல்ல என் கிட்ட வரல, அப்புறமா யோசிச்சு தா வந்துச்சு, ஆனா பயபுள்ள நல்லா ஒட்டிக்கிச்சு, ஆனாலும் இந்த புள்ளைய விட்டுட்டு உன் பொண்டாட்டி செத்துப்போனது அநியாயம்லே” என்று மான்சி சொன்னதும் சத்யன் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான்

“ என்னா பாக்குறவே, அம்மாச்சி தான் நைட்டு சொல்லுச்சு, கேட்டதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா தா இருந்துச்சு, விடு அவளுக்கு விதி அம்புட்டுத்தான் போய் சேந்துட்டா, எங்கப்பாரு கூட எங்களை விட்டுட்டு போய்ட்டாரு, எல்லாரும் அழுதாக ஆனா நா மட்டும் அழுவவே இல்லையே, ஏன் அழுவனும், அந்த கழுத மூலி குடிச்சு குடிச்சு கொடலு வெந்து செத்தான், இருக்குவர நாங்க நாலு பேரும் கஷ்டப்பட்டு கொண்டு வந்த காசை குடிச்சான், அதனால அவன் செத்ததும் அப்பாட இனிமே காசு சேக்கலாம்னு ஒரு நிம்மதி தான் எனக்கு வந்துச்சு, இப்போ எங்கப்பன் செத்து இந்த ஏழு வருஷத்துல காசை சேர்த்து ஊருல இருந்த மக்கிப்போன கூரை வீட்டை இடிச்சுட்டு சீமை ஓடு போட்டு வீட்டை கட்டினேன், ஒரேஒரு ரூமுன்னாலும் எங்களுக்குன்னு ஒரு வீடு இருக்கு, எனக்கு அடுத்த தங்கச்சிய ஒரு நல்லவனா பார்த்து மூனு பவுனு போட்டு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கட்டிக் குடுத்தேன், இப்போ அது ஒரு புள்ளைய பெத்துருச்சு, இன்னும் ஒரு தங்கச்சி இருக்கா, அவளையும் கட்டிக் கொடுத்துட்டா அப்பறம் நானும் என் ஆத்தாலும் தா, எங்க ஊர்லயே ஏதாவது வேலை செஞ்சு பொழச்சுக்குவோம், இப்புடி ஊர் ஊரா அலையவேண்டியது இல்லை, நீயே சொல்லு எங்கப்பன் உசுரோட இருந்திருந்தா இதுல ஒன்னுகூட நடக்காது” என்று மான்சி வேலையில் கவனத்தை வைத்துக்கொண்டே தன் சுயசரிதையை சொல்ல

அவள் கதையை கேட்டு சத்யனின் மனம் கசிந்துருகியது “ அப்ப உனக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லையா மான்சி” என்று கேட்டான்
சத்யனை வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்த மான்சியின் கண்களில் அனல் பறந்தது, 



சத்யன் பயந்து போனான், அப்படியென்ன தவறா கேட்டுட்டோம்னு இவ்வளவு கோவப்படுறா, என்று நினைத்தான், அதன்பிறகு எதுவும் கேட்காமல் அமைதியாக தனது வேலையை தொடர்ந்தான்

சிறிதுநேரம் கழித்து அவளாகவே “ எனக்கு ஒரு அண்ணன் இருக்கான், ஆனா அந்த தறுதலை இப்போ எங்கருக்குன்னு எங்களுக்கு தெரியாது, நாங்க நாலு பொட்டச்சியும் கஷ்டப்பட்டு அவனை படிக்கவச்சோம் இப்போ அது எங்கருக்குன்னு எங்களுக்கே தெரியாது, ஆனா அவன் என்னிக்கு வந்தாலும் அவனுக்கு சாவு என் கையாலதான்” என்று மான்சி ஒரு மாதிரியான குரலில் கூறினாள்,

அவள் குரலில் இருந்தது கோபமா? குரோதமா? என்று சத்யனால் இனம் கானமுடியவில்லை, அவள் தனது அண்ணனால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று மட்டும் அவனுக்கு புரிந்தது

மான்சி பேசி முடிக்கவும் மதிய உணவுக்காக எல்லோரும் அமரவும் சரியாக இருந்தது

“ சரி நீ போய் சாப்பிட்டு வா ” என்று கூறிவிட்டு அவள் எழுந்திருக்க

“ நீ சாப்பிடலையா? மான்சி ” என்று சத்யன் கேட்க,, அவனை திரும்பி ஆச்சர்யமாக பார்த்தாள் மான்சி

“ என்ன அப்படி பார்க்கிற?”

“ இல்ல என் பேரை சொல்லி யாருமே கூப்பிட மாட்டாங்க,, நீதான் நல்லா அழகா கூப்புடுற” என்றாள்

“ ஏன் கூப்பிட மாட்டாங்க,, மான்சி ரொம்ப அழகான பேரு” என்றான் சத்யன்

“ ம்ம் நல்லப் பேருதான், எங்க தாத்தா வச்சாராம், எங்களுக்கு கொல சாமி பத்ரகாளியாம், அதனால் என்பேரு மான்சி தேவி, பெரிய தங்கச்சி பேரு முத்துமாரி, சின்னவ பேரு புவனேஸ்வரி” என்று பெயருக்கான விளக்கத்தை சொல்லிவிட்டு போனாள்

சத்யன் அவளையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, தன் வீட்டை நோக்கிப் போனான், அவன் வாழ்க்கையில் இப்படியொரு பெண்ணை அவன் சந்தித்ததில்லை, உழைப்பின் உதாரணமாக உயர்ந்து நின்ற மான்சி அவன் மனதிலும் உயர்ந்துவிட்டாள், ஒரு ஆண் தன் குடும்பத்துக்கு செய்யவேண்டிய கடமையை ஒரு பெண்ணாக இருந்து அவள் செய்வது சத்யனுக்கே பெருமையாக இருந்தது, கள்ளமில்லாமல் தன்னைப்பற்றிய விஷயங்களை பார்த்து இரண்டே நாட்கள் ஆன தன்னிடம் அவள் பகிர்ந்துகொண்டது சத்யனுக்கு வியப்பாக இருந்தது, இவளைப்போல் தன்னால் வெளிப்படையாக பேசமுடியவில்லை ஏன்? என்ற கேள்வி சத்யன் மனதில் எழுந்தது,, வேறென்ன சுயகௌரவம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற சுயநலம்தான்,, என்று அவன் மனம் அவனுக்கு பதில் சொன்னது
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 1 Guest(s)