09-02-2019, 10:35 AM
சத்யனின் பார்வை இடுப்பில் இருந்த அருவாளிடம் போனதும் அவள் சிறு சிரிப்புடன் “ கல்லு சீவிக்கிட்டு இருந்தேன் அப்படியே வந்துட்டேன்” என்றாள்
சத்யன் பார்வையைத் திருப்பிக்கொண்டு “ பாட்டி வெளிய போயிருக்கு, என்னா வேனும்” என்றான்
“ சாப்பாடுக்கு எலக்கட்டு வாங்க வந்தேன், நீங்கதா எடுத்து குடுத்துட்டு காசு வாங்கிக்கங்களேன்” என்று அந்தப் பெண் ரூபாயை நீட்ட ,
சத்யன் உள்ளே போய் இலைக் கட்டை எடுத்துவந்து கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டான்,
இலைக்கட்டோடு திரும்பியவள் மறுபடியும் திரும்பி “ நீங்க யாரு அம்மாச்சிக்கு ஒறவா?” என்று சத்யனைப் பார்த்து கேட்க
அவளின் கொச்சை தமிழை ரசித்தபடி “ நா அவங்க பேரன் சென்னையில் இருந்து வந்திருக்கேன்” என்றான் சத்யன்
ஒரு கணம் அவனை நிதானமாக ஏறிட்டவள், தன் கன்னத்தில் கைவைத்து “ பட்டணத்துல என் பேரன் கோட்டு சூட்டோட தான் இருப்பான், கப்பல் போல பெரிய கார்ல தான் வருவான், கழுத்துல கையில எல்லாம் வெரலு தண்டி சங்கிலிப் போட்டுருப்பான் என் பேரன்னு கெழவி பீத்திக்குமே அந்த பேரனா நீங்க” என்று அவனுடைய தற்போதைய தோற்றத்தை ஒப்பிட்டு நக்கலாக பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்
சத்யனுக்கு அவள் வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வர சற்று நேரம் பிடித்தது, ஏதோ மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது, அந்த பையன் சொன்னது உண்மைதான் இவளுக்கு யார் மான்சி என்று பெயர் வைத்தார்கள் என்று நினைத்தான் சத்யன்
அடுத்த இரண்டு நாட்களும் சத்யனுக்கு வயலில் சுற்றவே சரியாக இருந்தது, அவன் பார்த்தவரையில் அங்கே வேலை செய்யும் பெண்களில் மான்சி ரொம்ப முக்கியமானவள் என்றும், அத்தோடு எல்லாருமே அவளுக்கு கொஞ்சம் பயந்துதான் நடந்துகொண்டனர், அவளும் அவளுடைய அம்மா தங்கை என மூன்று பேருமே சூளையில் வேலை செய்தனர், அவளின் சொந்தக்காரர்கள் சிலரோடு அங்கேயே குடிசைப் போட்டு தங்கியிருந்தாள்
அன்று காலை எழுந்ததுமே சத்யன் அவளைத்தேடித்தான் போனான், குடிசைக்கு வெளியே அடுப்பு மூட்டி சமையல் செய்துகொண்டு இருந்தவள், இவனைப் பார்த்ததும் அருகில் வந்து “ என்னா விஷயம் சார்” என்றாள்
சத்யன் பெரிதும் தயங்கிப் பிறகு ஒரு முடிவோடு “ மேஸ்திரி கிட்ட சொல்லி எனக்கும் ஏதாவது ஒரு வேலை வாங்கிக் குடேன், வீட்டுல சும்மா உட்கார்ந்து பொழுத ஓட்டறது கஷ்டமா இருக்கு” என்றான்
அவனை விழிவிரிய ஆச்சர்யமாக பார்த்தவள் “ ஒனக்கு என்னா வேலை தெரியும் சாரு, இதெல்லாம் பழக்கம் இல்லாம செய்யமுடியாது” என்று மான்சி மறுக்க
சத்யன் முகத்தில் கவலையுடன் “ கத்து குடுத்தா நான் சீக்கிரமா கத்துக்குவேன் ப்ளீஸ்” என்றான்
அவனையே யோசனையுடன் பார்த்தவள் “ சரி மேஸ்திரி வரட்டும் சொல்லி ஏற்பாடு பண்றேன், நீ போய் சாப்பிட்டு வா” என்றாள்
சத்யன் சந்தோஷத்துடன் தலையசைத்து விட்டு வீட்டுக்கு போனான்,,
போகும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் மான்சி, படித்து விட்டேன் என்று வீட்டில் சும்மா இருக்காமல் உழைத்து சாப்பிடனும்னு எத்தனை பேர் நெனைப்பாங்க,, உண்மையாவே இந்தாளு பெரியமனுஷன் தான்,, என்று எண்ணியபடியே சமையலை கவனிக்க போனாள்
சத்யன் குளித்து சாப்பிட்டுவிட்டு மனுவை பாட்டியிடம் ஒப்படைத்து “ பாட்டி சூளையில வேலை கேட்டுருக்கேன்,, சும்மா வீட்டுல இருக்குறதுக்கு அங்கயாவது போய் வேலைசெய்யலாம்னு போறேன் பாட்டி “ என்று கூறிவிட்டு ஒரு துண்டு எடுத்து தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினான்,
பேரனை மடியில் அமர்த்திக்கொண்டு “ ஏவே சத்தி குளிச்சுட்டு டிப்டாப்பாக போக இதென்ன ஆபிஸ் உத்யோகமா, இந்த வேலைக்கெல்லாம் பல்லை தேய்ச்சுபுட்டு ஒரு வாய் கஞ்சிய ஊத்திட்டு அழுக்குத்துணியோட போகனும், பொழுதுசாய வந்து அழுப்புத் தீர குளிக்கனும், நீ என்னமோ கலெக்டரு வேலைக்குப் போறவன் மாதிரி போற” என்று பாட்டி கிண்டல் செய்தார்
சத்யன் குனிந்து தனது உடைகளை பார்த்தான், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் இருந்தான், அட ஆமாம் இதோட போய் எப்புடி மண்ணு வேலை செய்யமுடியும், என்று தன்னைத்தானே நொந்துகொண்டான் சத்யன்,,
சூளையில் வேலை செய்யும் அணைவரும் கலர்கலராய் டவுசர் தான் போட்டிருந்தார்கள், ‘ நம்மிடம் டவுசரே இல்லையே,, என்ன செய்வது என்று யோசனையோடு பாட்டியைப் பார்த்தான்,
“ இத அவுத்துட்டு பழைய கைலியும் சட்டையும் போட்டுகிட்டு போ” என்று பாட்டி சொன்னதும் சத்யன் மறுபடியும் உள்ளே போய் வாறு உடை மாற்றிக்கொண்டு வேலைக்குப் போனான்
அங்கே எல்லோரும் வந்து அவரவர் வேலையை செய்ய, சத்யன் மான்சியின் அருகே போய் நின்றான், குத்தங்காலிட்டு அமர்ந்து கல்லை சீவிக்கொண்டிருந்தவள் அதை வைத்துவிட்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்,
அவனை ஏறஇறங்க பார்த்தவள் “ மேஸ்திரி கிட்ட சொல்லிட்டேன், ஒனக்கு என்னா வேலை தெரியுமோ அதைச்செய்ய சொன்னாரு, ஒனக்கு என்னா வேலை தெரியும்யா?” என்று மான்சி கேட்க
எதுவும் தெரியாது என்பதன் அறிகுறியாக சத்யன் தலையை குனிந்து கொண்டான்
அவனை அப்படி பார்க்க அவளுக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை, “ சரி என் கூட ஒக்காந்து நான் என்ன செய்றேன்னு பாரு, அதுபோலவே செய்” என்று கூறிவிட்டு தன் வேலையில் மும்முரமானாள்