மான்சி கதைகள் by sathiyan
#10
வயலின் மறுபக்கத்தில் ஆற்று மனல் பரப்பி அதன்மேல் பிசைந்த மண்ணை பெண்கள் தட்டுகளில் சுமந்து வந்து கொட்ட , இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் அந்த மண்ணை தட்டி பரப்பி அதில் செங்கலின் மர அச்சை வைத்து அழுத்தி எடுக்க மற்றொரு ஆள் அந்த பச்சை செங்கல்லில் sss என்ற முத்திரையை பதித்துக்கொண்டு இருந்தான்,

அப்போது அங்கே வந்த ஒரு பெண் தனது இடுப்பில் இருந்த அருவாளை எடுத்து பச்சை செங்கலை கையில் எடுத்து நாற்புறமும் இருந்த மண் பிசிறுகளை லாவகமாக செதுக்கினாள்,

சத்யன் ஆச்சரியமாக அவளையே பார்த்தான், அந்த பெண்னின் தோற்றத்தையும் உடையையும் வைத்து வயதை நிர்ணயிக்க முடியவில்லை, ஆண்கள் அணியும் முழுக்கை சட்டையணிந்து அதை முட்டி வரை மடித்து விட்டிருந்தாள், எடுப்பான மார்புகளை வெளியேத் தெரியா வண்ணம் உள்ளே இறுக்கிக் கட்டியிருந்தாள், பூப்போட்ட கருநீல சீட்டி பாவாடையை மடித்து ஆண்கள் கைலி கட்டுவது போல் கட்டியிருந்தாள், முழங்காலுக்கு கீழே எந்தத் துணியும் மறைக்காமல், நெளுநெளுவென்று இருந்தது கால்கள்,

வெயிலில் அவள் உழைத்த உழைப்பின் அடையாளமாக தலைமுடியில் கத்தை கத்தையாக செம்பட்டை ஏறியிருந்தது, மொத்தக் கூந்தலையும் கொண்டையாக அள்ளி முடிந்திருந்தாள் சிவப்பா அல்லது மாநிறமா என்று கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு மாதிரி செம்பழுப்பு நிறத்தில் இருந்தாள், மற்றபடி நெற்றியில் பொட்டுக்கூட இல்லாமல் நிர்மலமான முகத்துடன் இருந்தாள்,


அசால்டாக பச்சை செங்கலை அருவாளால் சீவியவள் திடீரென்று எரிச்சலுடன் கையில் இருந்த மண்ணை கையால் நசுக்கி எரிந்துவிட்டு “ ஓய் மேஸ்திரி மாமோய், இன்னாய்யா மண் இது கையில ப்பீ மாதிரி ஒட்டுது, செங்கலுக்கு மண்ணு சும்மா பொச பொசன்னு இருக்கவேனாம், இது பிசுபிசுன்னு பீயாட்டம் ஒட்டுது, இத எப்புடி சீவ முடியும், இது என்னிக்கு காஞ்சு என்னிக்கு சூளையில அடுக்குறது, இப்புடி இருந்தா அடுத்த தைக்குத்தான் மேஸ்திரி நீ சூளையை பத்தவைக்க முடியும்” என்று நக்கலாக பேசினாள்

அவளருகே வந்த மேஸ்திரி “ என்னா புள்ள பண்றது நா வர்றதுக்கு முன்னால ராவோட ராவா மண்ணடிச்சுட்டானுங்க, இப்போ போய் பேசி என்ன செய்றது?” என்று சலிப்போடு மேஸ்திரி சொல்ல

“ இன்னு கொஞ்சம் மண்ணுல தண்ணி விடு மேஸ்திரி சரியா வரும்” என்று அந்த முழுக்கைச் சட்டைப் பெண் சொன்னதும், மேஸ்திரி சரியென்று தலையாட்டிக்கொண்டு போனார்

தரையில் அமர்ந்து பச்சை கல்லில் அச்சு குத்திக்கொண்டு இருந்தவன் “ பாவம் மேஸு பொண்டாட்டிக்கு கூட ஒழுங்கா தண்ணி விட்டுருக்க மாட்டாரு, இங்க வந்து எவ எவளோ சொல்றதுக்கெல்லாம் தண்ணீ உடுறாருப்பா” என்று பக்கத்தில் இருந்தவனிடம் நக்கலாக சொல்ல

கல்லை சீவிக்கொண்டு இருந்த அந்த பெண் கையில் இருந்த கல்லை எரிந்து விட்டு ஆவேசமாக அவனை நெருங்கி “ ஏலேய் என்ன நக்கலாவே, இழுத்து வச்சு ஒட்ட அறுத்துட்டு ஒம்ம பொண்டாட்டிக்கு ஒன்னுமில்லாம பண்ணிப்புடுவேன் ஆமா, யாருகிட்ட பேசுறேன்னு நெஞ்சுல நெனைப்புல வச்சுக்கிட்டு பேசு, ங்கொம்மா இல்லேன்னா செங்கலை சீவுற மாதிரி சீவிப் புடுவேன் சீவி ” என்று ஆத்திரமாக கத்த

“ ஏய் எங்க சீவுடி பார்க்கலாம்,, பேரைப் பாரு பேரை மான்சியாம் மான்சி, வெளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் மாதிரி ” என்று அந்த அரை டவுசர் எழுந்து நெஞ்சை நிமிர்த்தினான்

“ ஏலேய் சூலக் கருப்பா, என் பேரை மாத்துரும் கொறை சொல்லாத அது பத்ரகாளியோட பேரு, அப்புறம் நான் பத்ரகாளியா மாறவேண்டியிருக்கும்லே” என்று அந்த பெண் கையில் அருவாளை பிடித்தபடி காளியாகவே மாறினாள்

மேஸ்திரி மறுபடியும் ஓடி வந்தார் “ ஏன்டா சும்மா வாயை வச்சுகிட்டு இருக்கமாட்டியலா, அந்த புள்ள கொணம் தெரிஞ்சு ஏன் அவகிட்ட வம்பு பண்றீங்க” என்று இரு தரப்பையும் சமாதானம் செய்ய,

அவருக்குப் பின்னால் இருந்து, “ ஓய் மேஸ்திரி இங்க இன்னும் கொஞ்சம் தண்ணி உடு, மண்ணுக்கு தண்ணி பத்தலை” என்று யாரோ ஒரு பெண் குரல் கொடுக்க

கூப்பிட்ட பெண்ணின் குரலில் வார்த்தையில் இருந்த இரட்டை அர்த்தத்தை கேட்டு இப்போது அந்த சண்டைக்காரிக்கே சிரிப்பு வந்துவிட, “ போ மேஸ்திரி போ “ என்று ஜெயம் பட கதாநாயகி மாதிரி கையை நீட்ட மேஸ்திரி ஓடினார்

மறுபடியும் அவரவர் வேலையை தொடர, இதையெல்லாம் ஒரு மரநிழலில் நின்று கவனித்த சத்யனுக்கு அந்த பெண்ணைப் பார்க்க, திகைப்பாக இருந்தது என்னா பேச்சு பேசுறா ஆம்பிளை மாதிரி, ம்ம் ரொம்ப தைரியமானவ போலருக்கு என்று நினைத்தப்படி வீட்டுக்கு திரும்பினான்

அன்று மாலை பாட்டி வெளியே போயிருக்க, சத்யன் தட்டில் சாப்பாட்டை போட்டு மனுவுக்கு ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டான், கையை கழுவிவிட்டு மகனுடன் கூடத்தில் வந்து அமர்ந்தான்

“ அம்மாச்சி இருக்கியலா ” என்று வெளியே குரல் கேட்க,

சத்யன் மனுவை கீழே விட்டுவிட்டு எழுந்து கதவை திறந்தவன் திகைத்துப் போனான், அதே பத்ரகாளி தான் வந்திருந்தாள், நல்லவேளையாக பாவாடையை கால் மறைக்கும்படி இறக்கி விட்டிருந்தாள் ஆனால் இடுப்பில் இருந்த அருவாள் அப்படியே இருந்தது,
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 2 Guest(s)