மான்சி கதைகள் by sathiyan
#9
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 2

சுருக்குப்பையில் இருந்த வெற்றிலையை எடுத்து பாக்கு சேர்த்து இடித்துக்கொண்டு “ நீ நிரந்தரமா இங்கயே இருக்குறதுன்னு முடிவுபண்ணிட்டயா சத்தி,, ஏன் கேட்க்குறேன்னா, சொகுசா வளர்ந்த உடம்பு இந்த வில்லேசு காத்துக்கு ஒத்துக்கனும், அப்புறம் காலப்போக்குல ஆயிரம்தான் இருந்தாலும் தாலிகட்டுன பொஞ்சாதி ஆச்சேன்னு நெஞ்சு அடிச்சுக்கும் சத்தி, அதனால்தான் கேட்குறேன்” என்று பாட்டி மனிதவாழ்வின் நிதர்சனத்தை சத்யனுக்கு சொன்னார்

சத்யன் அமைதியாக இருந்தான், பின்னர் ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து பாட்டியைப் பார்த்து “ பாட்டி நான் கட்டிய மறாவது நாளே அந்த தாலி கழட்டி துணியெல்லாம் மாட்டுற கொக்கில மாட்டிட்டா, இன்னிக்கு வரைக்கும் அது மெருகு குலையாம அங்கயேதான் இருக்கு, இப்போ என்னோட நிலைமை என்னன்னு புரியுதா பாட்டி” என்று பாட்டிக்கு புரியும்படி சொன்னான் சத்யன்

பாட்டி வேகமாக எழுந்து வீட்டுக்கு வெளியே இருந்த குப்பையில் வெற்றிலை எச்சியை புளிச்சென்று துப்பிவிட்டு வந்து அமர்ந்து “ சரி இதுக்கு மேல அதைப்பத்தி பேச வேனாம்லே, நீ டவுன்ல ஏதாவது கணக்கு வேலை கெடைக்குதான்னு பாரு, நானும் இங்கே நாலுபேரு கிட்ட சொல்லி வேலை கெடைக்குமான்னு பாக்குறேன், அது வரைக்கும் எங்கயும் போகாத வீட்டுலயே இரு சத்தி” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் போய் ஒரு தைத்த இலைக்கட்டை எடுத்துக்கொண்டு வந்தார்


“ சத்தி நீ கதவை சாத்திக்கிட்டு புள்ளைய பார்த்துகிட்டு இங்கனயே இரு சத்தி நா டவுனுக்கு போய் எலக்கட்டை வித்துட்டு சின்னவனுக்கு நாலு துணி வாங்கிட்டு வர்றேன்” என்றவர் அவன் பதிலை எதிர்பார்க்காமல் விடுவிடுவென நடந்தார் பாட்டி

போகும் பாட்டியையே பார்த்தான் சத்யன், ‘’ மனுவுக்கு என்ன துணியெடுக்கத் தெரியும் பாட்டிக்கு,, என்று சத்யன் யோசித்தபடி உள்ளே போனான், ஏன்டா சத்யா கல்யாணம் பண்ற வரைக்கும் இவங்க எடுத்து குடுத்த துணியைத் தானே நீ போட்டுக்கிட்ட, இப்போ உன் மகனுக்கு எடுக்க பாட்டிக்கு தெரியாதா ,, என்று அவன் மனம் பழசை ஞாபகப்படுத்த, சத்யன் சிரித்தபடி அரசாங்கம் கொடுத்த சிறிய டிவியை ஆன்செய்து விட்டு தரையில் அமர்ந்து டிவி பார்த்தான்

சத்யனுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கிராமத்து வாழ்க்கை என்பதால் எந்த சிரமும் இருக்கவில்லை, ஆனால் மனுவை சமாளிப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது, ஆட்டுக்குட்டி, கோழிக்குஞ்சு, நாய்க்குட்டி, என்று எதைப் பார்த்தாலும் அதன் பின்னாடி ஓடினான், அவன் பின்னாடி பாட்டியும் ஓடுவார்

சத்யன் மூன்று நாட்களாக டவுனுக்கு போய் ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடினான், அலைச்சல் தான் மிஞ்சியது, ஏதாவது சொந்தமாக தொழில் ஆரம்பிக்க கையில் பணமும் இல்லை, எந்த தொழிலும் சத்யனுக்கு தெரியாது, சுற்றுவட்டாரங்களில் இருந்த சில பெரிய கம்பெனிகளுக்கு எழுதி போட்டிருந்தான், எந்த கம்பெனியும் இன்டர்வியூ கார்டு அனுப்பவில்லை,

சத்யனின் திறமைக்கு சென்னைக்குப் போனால் பல இலக்கங்களுடன் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் தான், ஆனால் சத்யனுக்கு சென்னை என்ற பெயரே கசந்தது, பட்டினியில் செத்தாலும் சென்னைக்கு போவதில்லை என்ற முடிவில் இருந்தான்

அவன் அப்பா பெயரில் பாட்டிக்கு வந்த மிலிட்டரி பென்ஷன் பணம் சில ஆயிரங்களையும் பாட்டியின் உழைப்பில் வந்த பணம் எல்லாவற்றையும் சிறுகச்சிறுக சேர்த்து நான்கு லட்சம் வரை வங்கியில் வைத்திருப்பதாகவும் அதை எடுத்து ஏதாவது தொழில் செய்யுமாறு பாட்டி கூறினார்

சத்யனுக்கு அந்த பணத்தை எடுத்து செலவு செய்ய விருப்பம் இல்லை, இவ்வளவு நாட்களாக சேர்த்த பணத்தை தொழில் தெரியாமல் எதிலாவது போட்டுவிட்டு இழப்பதைவிட எங்காவது கூலி வேலை செய்யலாம் என்ற முடிவுக்கு சத்யன் வந்திருந்தான், அதனால் பாட்டியிடம் “ பார்க்கலாம் பாட்டி “ என்று மட்டும் சொன்னான்


நாட்கள் வாரங்களாக சத்யன் பாட்டியுடன் அமர்ந்து இலை தைக்க கற்றுக்கொண்டான், நுனுக்கமாக இலையை கத்தரித்து அதை ஈர்க்கு குச்சியால் இணைப்பது ஒரு தனிக்கலை போல் இருந்தது

பாட்டி இலையை தைத்துக்கொண்டு “ மழை சீசன் முடிஞ்சு போச்சு சத்தி இன்னும் ரெண்டொரு நாள்ல சூளை போடுற ஆளுங்க சாமானுங்களோட வந்து எறங்குவாங்க, நம்ம மோட்டுவயல்ல தான் கொட்டாப் போட்டு தங்குவாங்க, அத்தோட அடுத்த மழைக்காலம் வரைக்கும் இங்கதான் இருப்பாக, மண்ணு பெசைஞ்சு பச்சக் கல்லு அறுக்குறவங்க மட்டும் குடும்பத்தோட இங்கயே தங்குவாங்க, மத்த கூலியாளுக எல்லாரையும் உள்ளூர்லயே கூப்பிட்டுக்குவான் மேஸ்திரி, நாளைக்கு அவன்கிட்ட ரெண்டாயிரம் ஏத்தி கேக்கனும், நீயும் கூட இருவே” என்று பாட்டி பேசிக்கொண்டு இருக்க, சத்யன் எல்லாவற்றையும் கவனமாக கேட்டான்

அவனும் இதுவரை செங்கல் சூளைப் போட்டு பார்த்ததில்லை, ஆர்வத்துடன் மறுநாள் காலை எழுந்து மகனை தூக்கிக்கொண்டு வயலுக்குப் போனான்,

வயலில் ஏற்கனவே டிராக்டர்கள் மூலம் எடுத்து வந்து மண் மலைபோல் கொட்டப்பட்டிருக்க, அந்த மண் மேட்டின் நடுவே பள்ளம் எடுத்து அதில் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பிக்கொண்டு இருந்தார்கள், தண்ணீர் சேர்ந்ததும் மண்ணை குழைத்து பெரிய இரும்பு தட்டுகளில் அள்ளி வேறிடத்தில் கொட்ட அந்த சேற்றை நான்கைந்து பெண்கள் முழங்கலுக்கு மேலே துணியை மடித்து தொடைக்கு நடுவே கட்டிக்கொண்டு ஒரே தாளகதியில் சேற்றை மெதித்து மண்ணை குழைத்தார்கள்

சத்யனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, நாலு ரூபாய் செங்கலுக்குப் பின்னால் இத்தனைபேரின் உழைப்பு இருக்கிறதா என்று நினைத்தான்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 3 Guest(s)