09-02-2019, 10:14 AM
"ப்ரியா..!!" என்று கத்தினார்.
"உங்களை போய்.. இத்தனை நாளா நல்லவர்னு நெனச்சுட்டனே டாடி.. ச்சீய்..!! இவ்வளவு கேவலமானவரா நீங்க..??"
"ப்ரியா.. எ..என்னம்மா சொல்ற நீ..?"
"நேத்து அசோக் உங்களைப் பத்தி சொன்னப்போ கூட நான் நம்பலை டாடி.. ஆனா.. இப்போ நீங்க ரெண்டு பேரும் பேசுனதை கேட்டப்புறந்தான்.. உங்க சுயரூபம் தெரியுது..!!"
"நா..நாங்க பேசுனதை கேட்டியா..?" சுந்தரமூர்த்தி இப்போது நிஜமாகவே மிரண்டார்.
"ஆமாம்.. உள்ள நீங்க பேசுனதுலாம்.. வெளியே நான் உக்காந்து கேட்டுத்தான் இருந்தேன்..!! ஆரம்பத்துல உங்கமேல கோவம் வந்தாலும்.. அப்புறம் நீங்க அசோக்கை மாப்ளைன்னு சொன்னப்போ.. அட்லீஸ்ட் என் மேலயாவது உங்களுக்கு ப்ரியம் இருக்கேன்னு நெனச்சு சந்தோஷப் பட்டேன்..!! ஆனா.. அசோக்கை என்கிட்டே இருந்து பிரிக்கணும்னு.. இப்டி ஒரு கேவலமான ப்ளான் பண்ணுனீங்க பாத்தீங்களா.. நீங்க என்மேல வச்சிருக்குற பிரியமும் உண்மை இல்லைன்னு ஆயிடுச்சு டாடி..!! நம்ம அப்பா-மக உறவு.. இந்த செகண்டே செத்துப் போச்சு..!! வா அசோக்.. போலாம்..!!" ப்ரியா ஆத்திரத்துடன் தீர்க்கமாக சொன்னாள்.
நடப்பதை எல்லாம் நம்ப முடியாமல், அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் சுந்தரமூர்த்தி பார்த்துக் கொண்டிருக்க, நான் புன்னகையுடன் டேபிள் மீதிருந்த என் செல்போனை எடுத்தேன். சற்று முன் ப்ரியாவுக்கு செய்த காலை.. இப்போது அவரிடம் ஒருமுறை காட்டிவிட்டு கட் செய்தேன். உள்ளே பேசியதை வெளியே ப்ரியா எப்படி கேட்டாள் என்பது புரிந்து போனதும், அவர் சோர்ந்து போய் பொத்தென்று சேரில் அமர்ந்தார். ஆட்டத்தில் என்னிடம் தோற்றுப் போய் பரிதாபமாக பார்த்த அவரிடம், நான் அமைதியான குரலில் சொன்னேன்.
"உங்ககிட்ட இருந்த ஒரே உண்மையான சொத்தையும்.. என்கிட்டே நீங்க இழந்துட்டீங்க மிஸ்டர் சுந்தரமூர்த்தி..!!"
சொல்லிவிட்டு நான் ப்ரியாவின் தோளில் கை போட்டேன். உரிமையாக அவளை என்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டேன். இருவரும் திரும்பி நடந்தோம். முன்பு ஒருமுறை வாழ்க்கையை தொலைத்தவனாய்.. நொந்து போய்.. எந்தக்கதவை திறந்து கொண்டு வெளியேறினேனோ.. எந்தக்கதவை திறந்து கொண்டு என் தேவதை முதன் முறையாய் என் வாழ்க்கையில் நுழைந்தாளோ.. அந்த தேவதையுடன் அதே கதவை திறந்து கொண்டு.. ஒரு இனிய, புதிய வாழ்க்கையை நோக்கி நான் வெளியேறினேன்.
(முற்றும்)

![[Image: image025.jpg]](https://2.bp.blogspot.com/-lwO97VqQe-A/UFXwE__6dAI/AAAAAAAAMbA/boud7VHLCc0/s1600/image025.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)