screw driver ஸ்டோரீஸ்
"ஓ.. என் போட்டோ வேற பாத்துட்டாரா..?"

"ஆமாம்.. ஏன்..??"

"ஒண்ணுல்ல.. ம்ம்ம்ம்... பாத்துட்டு என்ன சொன்னாரு..?"

"ஒன்னும் சொல்லலை.. 'ஒருநாள் கூட்டிட்டு வாம்மா.. பேசணும்'னு சொன்னாரு.. நாளைக்கு வர்றியா.. என் டாடியை பாத்து பேச..?" அவள் கேட்டதும் நான் பட்டென மறுத்தேன்.

"இ..இல்ல ப்ரியா.. நாளைக்கு வேணாம்.. நாளான்னிக்கு வர்றேன்..!!"

"ஏன்.. நாளைக்கு என்ன..?"

"நான் கொஞ்சம் ப்ரிப்பேர் பண்ணனும்..!!"

"ஹாஹா.. இன்டர்வ்யூவுக்கா போற.. ப்ரிப்பேர் பண்றதுக்கு..? பயப்படாத.. என் டாடி ரொம்பலாம் கொஸ்டின் கேக்க மாட்டாரு..!!"

"அதுக்கில்ல.. பர்ஸ்ட் டைம் மீட் பண்ண போறோம்ல..? அவருக்கு என்னை புடிக்கனும்ல..? அவர்கிட்ட எப்படி பேசணும்னு.. நான் கொஞ்சம் யோசிக்கணும்..!!"

"அதெல்லாம் அவருக்கு உன்னை புடிக்கும்..!! என் டாடி இதுவரை என் ஆசைக்கு குறுக்க நின்னதே இல்லை தெரியுமா..? உன்னை ஜஸ்ட் பாத்து பேசிட்டு.. நம்ம லவ்வுக்கு ஓகே சொல்லிடுவாரு..!!"

"ம்ம்.. பாக்கலாம்..!!" நான் மூளைக்குள் ஏகப்பட்ட சிந்தனைகளுடன் அமைதியாக சொன்னேன்.

அடுத்த நாளுக்கு அடுத்த நாள்..!!

நான் சுந்தர மூர்த்தியின் ஆபீசில்.. அவருடைய ரூமில்.. அவருக்கு எதிரே அமர்ந்திருந்தேன். அவர் வழக்கம் போல பல் நொண்டிக் கொண்டிருந்தார். ப்ரியா ரூமுக்கு வெளிய காத்துக் கொண்டிருந்தாள். நானும் அவரும் கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. அமைதியாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். பின்பு அவர் பேச ஆரம்பித்தார். எடுத்ததுமே..

"பிசினஸ் எப்படி போயிட்டு இருக்கு தம்பி..?" என்றார்.

"பரவால்ல.. நல்லா போகுது.."

"லைசன்ஸ் எப்படி வாங்குனீங்க..?"

"அது எதுக்கு உங்களுக்கு..?" நான் பட்டென்று சொல்ல, அவர் சிரித்தார்.

"ஹாஹா.. இன்னும் என்மேல கோவம் போகலை போல இருக்கு..? ம்ம்ம்ம்... அந்த கோவத்துலதான் என் பொண்ணை லவ் பண்றீங்களோ..? அவளை வச்சு என்னை பழி வாங்குற மாதிரி ஐடியாவா..?"

"உண்மையை சொன்னா.. அந்த ஐடியாவோடதான் ப்ரியாவோட பழக ஆரம்பிச்சேன்.. ஆனா.. இப்போ என் மனசு பூரா அவதான் இருக்குறா..!! வேற எதுவுமே இல்லை.. உங்க மேல எனக்கிருந்த கோவம் உட்பட..!!"

"ஹ்ஹ்ஹஹா.. அப்போ உங்க மனசுல.. என் பொண்ணை தவிர வேற எதுவுமே இல்லை..?"

"ஆமாம்..!!"

"என் பொண்ணோட சேர்ந்து வர்ற என் சொத்து..??"

"உங்ககிட்ட இருக்குற உண்மையான சொத்தா நான் நெனைக்கிறது உங்க பொண்ணு மட்டுந்தான்.. அவ மட்டும் போதும் எனக்கு..!!"

நான் உறுதியாகவும், சீரியசாகவும் சொல்ல, அவர் புன்னகைத்தார். அப்புறம் டேபிளில் இருந்த பேனாவை எடுத்து, தலையை குனிந்து.. எதிலோ.. என்னவோ.. எழுதினார். எழுதிக்கொண்டே என்னிடம் கேட்டார்.

"என்மேல இருக்குற கோவத்தை என் பொண்ணு மேல காட்டாம.. அவளை சந்தோஷமா வச்சுக்குவீங்கனு நம்பலாமா..?"

"தாராளமா நம்பலாம்..!!" அவர் இப்போது தலையை நிமிர்த்தினார். கையில் வைத்திருந்ததை என்னிடம் நீட்டினார்.

"என்னது இது..??" நான் கேட்டேன்.

"உங்களுக்குத்தான்.. வாங்கிக்குங்க..!!" நான் அதை வாங்கிப் பார்த்தேன். இருபது லட்ச ரூபாய்க்கான செக் அது..!! நான் புரியாமல் அவர் முகத்தை ஏறிட்டு கேட்டேன்.

"எதுக்கு இந்த செக்..?"

"உங்க பணந்தான்.. நான் உங்களை ஏமாத்தி புடுங்குன பணம்..!!"

"அது பத்து லட்சந்தான..?"

"ஆமாம்..!! ஆனா.. நான் ஏமாத்துனதால.. உங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம்லாம் ஆயிருக்குமே..? அதான் நஷ்ட ஈடு சேர்த்து எழுதிருக்கேன்..!! பழசு எதையும் மனசுல வச்சுக்காதீங்க.. என் பொண்ணை நல்லா வச்சுக்கோங்க..!! அம்மா இல்லாத பொண்ணு.. ரொம்ப செல்லமா வளர்த்துட்டேன்.. அவளுக்கு ஏதாவது ஒன்னுனா.. என்னால தாங்கிக்க முடியாது..!!"

அவர் மிகவும் சாந்தமான குரலில் சொல்ல சொல்ல, நான் இப்போது அவரை ஆச்சரியமாக பார்த்தேன். 'என்னடா இது.. நான் ஒன்று நினைத்து வந்தால்.. இங்கு வேறொன்று நடக்கிறது..?' உண்மையிலேயே நான் நினைத்த அளவிற்கு இவர் மோசமானவர் இல்லையோ...? அல்லது.. நான் நினைத்தைவிட ப்ரியா மீது அதிகமாக பாசம் வைத்திருக்கிறாரோ..? நான் திகைத்துப் போய் அப்படியே அமர்ந்திருக்க, அவர்தான் புன்னகையுடன் சொன்னார்.

"என்ன தம்பி.. கைலையே வச்சு பாத்துக்கிட்டு இருக்கீங்க.. பாக்கெட்ல வைங்க..!! அது உங்க பணம்..!!" நான் அந்த செக்கை என் பாக்கெட்டில் வைத்தேன். புன்னகையுடன்,

"தேங்க்ஸ் ஸார்..!!" என்றேன்.

"இன்னும் எதுக்கு ஸார்ன்லாம் சொல்றீங்க..? மாமான்னே கூப்பிடுங்க மாப்ளை..!!"

"ம்ம்.. ஓகே.."

"இருங்க.. ப்ரியாவை வர சொல்றேன்.. அவ வேற டென்ஷன்ல உக்காந்திருப்பா..!!"

சொல்லிக்கொண்டே அவர் இன்டர்காம் எடுத்து பட்டன் அழுத்தினார். அடுத்த முனையில் ரிசீவரை எடுக்கும் முன்பே என்னிடம்,

"உங்க வீட்டுல பேசிட்டு சொல்லுங்க மாப்ளை.. எல்லாருமா பேசி.. கூடிய சீக்கிரமே நல்லா நாள் குறிச்சிடலாம்..!!" என்றவர் இன்டர்காமில்,

"ஏய்.. ப்ரியாவை உள்ள அனுப்பு..!!" என உத்தரவிட்டார்.

அவர் உத்தரவிட்ட சில வினாடிகளிலேயே கதவை திறந்து கொண்டு ப்ரியா உள்ளே நுழைந்தாள். நான் திரும்பி அவளை பார்த்து புன்னகைத்தேன். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் உள்ளே நுழைந்த மகளிடம் சுந்தரமூர்த்தி சொன்னார்.

"வாம்மா ப்ரியா.. வந்து.. நீ லவ் பண்ற ஆளோட லட்சணத்தை பாரு..!!"

அவருடைய வார்த்தைகள் கர்ண கொடூரமாய் என் காதில் வந்து விழ, நான் பக்கென்று அதிர்ந்து போய் திரும்பினேன். அவர் முகத்தில் ஒருவித குரூர புன்னகையுடன் என்னை முறைக்க, நான் அவரை நம்ப முடியாமல் பார்த்தேன்.

"ஸா..ஸார்.. எ..என்ன சொல்றீங்க நீங்க..?" என்றபடி சேரில் இருந்து எழுந்தேன்.

"என்னடா நடிக்கிற..? நீ எப்டிப்பட்ட ஆளுன்னு என் பொண்ணுக்கு ப்ரூவ் பண்ணத்தான்.. இந்த நாடகமே..!!" என்றவர் தன் மகளிடம் திரும்பி,

"ப்ரியா.. நீ நெனைக்கிற மாதிரி இவன் ஒன்னும் உன்னை உண்மையா லவ் பண்ணலை..!! உன்கிட்ட இருக்குற பணம் மேலதான் இவனுக்கு ஆசை..!!"

"என்ன டாடி சொல்றீங்க..?"

"அவன் பாக்கெட்டை செக் பண்ணும்மா..!! உனக்கு எல்லாம் புரியும்..!!"

சுந்தரமூர்த்தியின் தந்திரத்தில் நான் திகைத்துப் போய் அசையாமல் நிற்க, ப்ரியா என் பாக்கெட்டில் கைவிட்டு அந்த செக்கை எடுத்தாள். பிரித்துப் பார்த்தாள்.

"உன்னை மறக்குறதுக்கு.. எங்கிட்ட பேரம் பேசுறான்மா..!! அம்பது லட்சம் கேட்டான்.. கடைசில இருபது லட்சத்துக்கு ஒத்துக்கிட்டான்..!! எந்த மாதிரி ஆளை நீ லவ் பண்ணிருக்குற பாரு..!! சரி விடு.. அந்த செக்கை அவன் மூஞ்சில விட்டெறி.. அவன் கூட கொஞ்ச நாள் நீ பழகுன பாவத்துக்கு.. அந்தப் பணத்தோட அவன் போய் தொலையட்டும்..!!"

அவர் நல்லபிள்ளை மாதிரி சொல்லிமுடிக்க, ப்ரியா தலையை குனிந்தவாறு, அந்த செக்கையே சிலவினாடிகள் அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் பட்டென ஆத்திரம் வந்தவளாக, அந்த செக்கை 'சரக்.. சரக்.. சரக்..' என கிழித்தாள். இரண்டாக.. நான்காக.. எட்டாக..!!!! கிழித்த காகித துகள்களை, படக்கென்று தன் அப்பாவின் முகத்தில் விட்டெறிந்தாள். அவர் அதிர்ந்து போனார்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 09-02-2019, 10:14 AM



Users browsing this thread: 3 Guest(s)