screw driver ஸ்டோரீஸ்
#97
"அன்னைக்கு.. முத்தம்ன்றது அன்பை பரிமாறிக்கிற விஷயம்னு சொன்னேல..? நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு.. என் முத்தத்துல உனக்கு தெரிஞ்சதா அசோக்..?? ம்ம்ம்..??"

"ம்ம்..!!"

"இனிமே.. நீ இல்லாம நான் இல்லேன்னு.. புரிஞ்சதா..?"

"ம்ம்..!!"

"இப்போ சொல்லு.. நீ என்னவோ சொல்லனும்னு சொன்னியே..? இப்போ சொல்லு..!!"

இனி என்னத்த சொல்வது..?? அதுதான் ஒரேடியாக அடித்து சாய்த்து விட்டாளே..?? முத்தம் என்னும் அமிர்தம் புகட்டி, காதல் கடலில் படு ஆழமாய் என்னை மூழ்கடித்து விட்டாளே..?? பாவி..!!!! அவளுடைய முகத்தை ஆசையாக பார்த்தபடி, உதட்டில் மெல்லிய புன்னகையுடன்,

"ஐ லவ் யூ..!!!!" என்றுதான் என்னால் சொல்லமுடிந்தது.

[Image: image016.jpg]

அப்புறம் வந்த ஒரு நான்கைந்து மாதங்கள் மிகவும் சந்தோஷமாக பறந்தன. நானும் ப்ரியாவும் காதல் பள்ளியில் புதிய மாணவர்களாய், தினமும் அலுக்காமல் காதல் பாடம் கற்றுக் கொண்டோம். ஃபேக்டரி வேலை ஒருபுறம் சென்று கொண்டிருக்க, ப்ரியாவுடனான காதல் வேலை இன்னொருபுறம். இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தமான வேலைகள்.

ஃபேக்டரியில் ஒரே மாதத்தில் புரடக்ஷன் ஆரம்பமானது. நிறைய அலைந்து திரிந்து மார்க்கெட்டிங் செய்ய வேண்டி இருந்தது. ப்ரியா வார நாட்களில் கல்லூரி முடிந்ததுமே, ஃபேக்டரிக்கு ஓடி வந்துவிடுவாள். எஜமானி மாதிரி அங்கிருப்பவர்களை அவள் வேலை வாங்குவதை ரசிப்பது, எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். சண்டே பகல் முழுக்க இருவரும் ஒன்றாக சென்னை சுற்றுவோம்.

எங்கள் விஷயம் அண்ணனுக்கு கூடிய சீக்கிரமே தெரிந்து போனது. அவனுக்கும் சந்தோஷந்தான். ஆனால் ப்ரியாவின் அப்பாவிடம் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருக்க சொன்னான். பழிவாங்கும் எண்ணத்துடன்தான் ப்ரியாவிடம் பழக ஆரம்பித்தேன் என்ற உண்மையை மட்டும் அவளிடம் சொல்ல வேண்டாம் என்று அட்வைஸ் செய்தான்.

ப்ரியாவுடனான காதல் எனக்கு கொள்ளை கொள்ளையாய் சந்தோஷத்தை கொட்டிக் கொடுத்திருந்தாலும், மனதின் ஓரமாய் ஒரு உறுத்தல் ஒட்டிக் கொண்டே வந்தது. 'ஆரம்பத்தில் அவளை பழி வாங்கும் நோக்கத்தில்தான் பழக ஆரம்பித்தேன் என்று உண்மை அவளுக்கு தெரிந்துவிடுமோ..? தெரிந்தால் எப்படி துடித்துப் போவாளோ..?' என்ற உறுத்தல்தான் அது..!! எப்படியும் ஒருநாள் அவளுடைய அப்பாவுக்கு எங்கள் காதல் விஷயம் தெரிய வரும்போது, அந்த விவகாரம் வெடிக்கும். அதை எப்படி சமாளிப்பது என்ற கவலை ஒவ்வொரு வினாடியும் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

ஆனாலும், அவளுடைய அப்பாவை சமாளிக்க நான் நம்பிய ஒரே ஆயுதம் என்ன தெரியுமா..? ப்ரியாவுக்கு என் மீதான காதல்..!! அவள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை..!! அவளுடைய அப்பாவே என்னைப் பற்றி தப்பாக சொன்னாலும், அவள் அதை அவ்வளவு எளிதாக நம்பி விட மாட்டாள் என்று தோன்றியது. அந்த அளவுக்கு என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தாள். அவளுடைய நம்பிக்கை எந்த மாதிரியானது என்று தெரிந்து கொள்ள, அந்த சம்பவத்தை நான் உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும்.

அன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் நான் என் அப்பார்ட்மென்ட்சை அடைந்தேன். வெளியிலேயே ப்ரியாவின் கார் நின்றுகொண்டிருந்தது. நான் பைக்கை பார்க் செய்துவிட்டு, படியேறி மேலே சென்றேன். லாக் செய்யப்பட்டிருந்த எங்கள் ஃப்ளாட்டுக்கு வெளியே ப்ரியா காத்திருந்தாள். என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்து போய், அழகாக புன்னகைத்தாள்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 09-02-2019, 10:09 AM



Users browsing this thread: