screw driver ஸ்டோரீஸ்
#95
அப்புறம் வந்த ஒருவாரம் பரபரவென பறந்தது. டென்னிஸ் பால் ப்ரொடக்ஷனுக்கு தேவையான எல்லா வேலைகளையும் துரிதகதியில் பார்க்க ஆரம்பித்தேன். ப்ளான்ட்டை சுத்தம் செய்வது.. புதிய எந்திரங்களை எரக்ட் செய்வது.. லேபர்கள் தேர்ந்தெடுப்பது.. கஸ்டமர்களாக வரவிருப்பவர்களுக்கு கால் செய்து பேசுவது.. கம்பெனிக்கு லெட்டர்பேட் அடிப்பது முதற்கொண்டு.. எல்லா வேலைகளையும் நானே கீழ்மட்டத்திற்கு இறங்கி செய்தேன். அண்ணன் அவ்வப்போது வந்து உதவி செய்தாலும், நான் தினமும் தூங்க இரவு இரண்டு மணிக்கு மேல் ஆனது.

அவ்வளவு வேலையிலும் அவ்வப்போது ப்ரியாவின் நினைவு என்னை வாட்டாமலில்லை. அவளுடைய வெண்ணிற சிரிப்பு.. செந்நிற வெட்கம்.. செல்லமான கோபம்.. மின்னலான பார்வை.. கருங்கூந்தல் வாசம்.. கைவிரல் மென்மை.. துப்பட்டாவின் தீண்டல்.. எல்லாம் வந்து என் மனதை அவ்வப்போது சுருக் சுருக்கென குத்தி சென்றன. ப்ரியாவை மறப்பது அவ்வளவு எளிதாக இருக்காது போல தோன்றியது. இனி அவளை பார்க்கவே போவதில்லை என எண்ணும்போது, இதயத்தின் ஓரமாக லேசாக வலித்தது.

பரபரப்பான அந்த ஒருவாரம் முடிந்தபோது ஒருநாள்....!!!! நான் அன்று காலையில் கொஞ்சம் லேட்டாகவே எழுந்தேன். அண்ணன் அதிகாலையிலேயே எழுந்து ஆபீஸ் சென்றிருந்தான். நான் எழுந்து குளித்துவிட்டு, காபி போட்டு எடுத்துக் கொண்டு, பால்கனிக்கு வந்தேன். காபியை உறிஞ்சிக்கொண்டே எதேச்சையாக பார்வையை கீழே வீசியவன், அதிர்ந்து போனேன். ப்ரியா அங்கே நின்றுகொண்டிருந்தாள். மேலிருந்து பார்த்ததில் அவளுடைய தலை மட்டுந்தான் தெரிந்தது. முகம் கூட சரியாக தெரியவில்லை. அவளும் என்னை கவனிக்கவில்லை. கீழ் ஃப்ளாட் பெண்மணியிடம் எதோ கேட்டுக் கொண்டிருந்தாள்.

"இங்க அசோக்குனு.."

"ஃப்ளாட் நம்பர்..?"

"ஃப்ளாட் நம்பர் தெரியாது.. இந்தப்பக்கந்தான் ஒரு அப்பார்ட்மண்ட்ஸ்ல இருக்குறதா சொன்னாரு.."

"இந்தப்பக்கம் நெறைய அப்பார்ட்மண்ட்ஸ் இருக்குதேம்மா.. இந்த அப்பார்ட்மண்ட்ஸ்தான்னு நல்லா தெரியுமா..?"

"ம்ஹூம்.."

"என்ன பொண்ணும்மா நீ..? இப்டி அட்ரஸ் தெரியாம.. அப்பார்ட்மண்ட்ஸ் அப்பார்ட்மண்ட்ஸா அலையுறியே.. ஆள் எப்டி இருப்பாரு..?"

"ஹைட்டா இருப்பாரு.. மாநிறம்.."

"ம்க்கும்.. இங்க எல்லா பசங்களும் அப்டித்தான் இருக்கானுக.."

"யமஹா பைக் வச்சிருப்பாரு..."

"பார்க்கிங் கீழே இருக்குது.. அங்க போய் பாரு.. அந்த வண்டி நிக்குதான்னு.."

"ஓகேங்க.. தேங்க்ஸ்.."

மேலே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு அழுகை வரும்போல் இருந்தது. எனக்காக ஒருவாரம் தெருத்தெருவாக அலைந்திருக்கிறாள் என்று நினைக்கையில் இதயத்தை யாரோ பிசைவது மாதிரி வலித்தது. இதோ.. இப்போது கூட அவளது புன்னகை முகம் கொஞ்சமும் மாறாமல்.. சந்தோஷமும், நம்பிக்கையுமாக பார்க்கிங் ஏரியா நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாள். இன்னும் அவளை அலைந்து திரிய விடவேண்டுமா..?

"ப்ரியா.."

நான் அடக்கமுடியாமல் அழைத்துவிட்டேன். ப்ரியா பட்டென திரும்பி மேலே பார்த்தாள். என்னை பார்த்ததும் திகைத்துப் போனவளாய், ஒருகணம் அப்படியே உறைந்து போய் நின்றாள். அவளுடைய முகத்தில் தெரிந்தது சந்தோஷமா.. நிம்மதியா.. கோபமா.. ஆச்சரியமா.. அழுகையா.. அல்லது எல்லாம் கலந்த கலவையா..? எனக்கு தெரியவில்லை. செயலற்றுப் போனவளாய் நின்றிருந்தவளிடம்,

"மேல வா..!!" என்றேன் மெல்லிய குரலில்.

[Image: image014.jpg]
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 09-02-2019, 10:07 AM



Users browsing this thread: 9 Guest(s)