screw driver ஸ்டோரீஸ்
#94
அடையாறில் இருக்கும் ஒரு உயர்தர உணவகத்தில் எனக்கு ட்ரீட் கொடுத்தாள். ஓவர் கவனிப்பாக இருந்தது. 'இது நல்லாருக்கும்.. இது போட்டுக்கோ..!! எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ட்ரை பண்ணி பாக்குறியா..? நல்லா வச்சு சாப்பிடு.. இரு நானே போடுறேன்..!!' எனக்கு சிரிப்பாக வந்தது..!! என்னைப் பற்றி அவளுக்கு தெரியாத நிறைய விஷயங்களை, ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டாள். அவள் பற்றி நான் ஏற்கனவே அறிந்த விஷயங்களை (‘என் டாடி பேரு சுந்தரமூர்த்தி..!!’) அவள் சொல்ல, நான் அசுவாரசியமாக கேட்டுக் கொண்டேன். ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்பும்போது, 'நாளைக்கு எப்போ வருவ..?' என்று கண்களில் பல்பு எரிய கேட்டாள். மறக்காமல் என் மொபைல் நம்பர் கேட்டு வாங்கிக் கொண்டாள்.

அப்புறம் வந்த இரண்டு மாதங்களில் நானும் ப்ரியாவும் மிகவும் நெருங்கிப் போனோம். அதிகாலையில் எழுந்ததுமே எனக்கு கால் பண்ணி பேசிவிடுவாள். மாலையில் நான் வரும் வரை க்ளப்பில் எனக்காக காத்திருப்பாள். இருவரும் டென்னிஸ் ஆடுவோம். தினமும் என்னுடன் டென்னிஸ் ஆடுகிறாளோ இல்லையோ.. பேசுவாள் பேசுவாள்.. அவ்வளவு பேசுவாள்..!! இப்போதெல்லாம் இரவில் அவளது தோழிகளுடன் ஊர் சுற்றுவதில்லை. எல்லோரையும் கழற்றி விட்டுவிட்டு, என்னுடன்தான் சுற்றுகிறாள்.

ப்ரியா என்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டாள் என்று என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. அவளுடைய கண்களே காட்டிக் கொடுத்துவிடும். அவளது கண்களில் காதல் பட்டாம்பூச்சிகள் பறந்ததை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. 'ஐ லவ் யூ..!!' என்று என்னிடம் இதுவரை வாய் விட்டு சொல்லாவிட்டாலும், அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், அவளுடைய காதலை எனக்கு சூசகமாக சொல்ல முற்படுவாள்.

[Image: image012.jpg]

ப்ரியா என்னிடம் எளிதில் வீழ்ந்துவிட்டாள் என்பது ஆரம்பத்தில் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் நாளாக நாளாக.. அவளுடன் பழக பழக.. அந்த சந்தோஷம் காணாமல் போனது. ஒருவித குற்ற உணர்ச்சி மனதை அரிக்க ஆரம்பித்தது. ப்ரியா நான் நினைத்தமாதிரி திமிர் பிடித்தவள் அல்ல..!! மலர் மாதிரி மென்மையானவளாக இருந்தாள்..!! என்னுடைய உண்மையான நோக்கம் தெரியாமல், வெகுளித்தனமாய் என் மீது அன்பு செலுத்த ஆரம்பித்திருந்தாள். குழந்தை மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, அவள் என்னை கூர்மையாக பார்க்கும் போது, எனக்கு உள்ளுக்குள் என்னவோ செய்யும். 'அப்பன் செய்த தவறுக்கு இவள் என்ன செய்வாள் பாவம்..?' என என் மனசாட்சி அடிக்கடி அலற ஆரம்பித்திருந்தது. இந்த மாதிரியான ஒரு குழப்பத்தில் நான் இருக்கும்போதுதான், ஒருநாள் ப்ரியா என்னை முழுமையாக அடித்து வீழ்த்தினாள்.

ஆப்பிள் நறுக்கும்போது, தெரியாமல் கத்தி என் கையில் பட்டுவிட்டது. அடுத்தநாளே ப்ரியா வேண்டும் என்றே அவளுடைய கையை நறுக்கிக்கொண்டு வந்து நின்றபோது, நான் சுத்தமாக அதிர்ந்து போனேன். ஆத்திரத்தில் அவளை பார்த்து கத்தினேன்.

"நீ என்ன லூசா..? நான் தெரியாம கட் பண்ணிக்கிட்டதுக்கு.. நீ எதுக்கு வேணுன்னே கட் பண்ணிக்கிட்ட..?"

"ச்…ச்சும்மா.. கட் பண்ணிக்கிட்டா எப்டி இருக்குன்னு பாக்கலாம்னு.." அவள் குழைந்து கொண்டே குறும்பான குரலில் சொன்னாள்.

"கொஞ்சம் கூட அறிவே இல்லையா உனக்கு..?"

"எதுக்கு இப்போ கத்துற..? மருந்து போட்டா ரெண்டு நாள்ல சரியாயிடும்.."

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..!! சோர்ந்து போனேன்..!! என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாள் இவள்..? நான் என்ன நினைத்து இவள் பின்னால் சுற்ற ஆரம்பித்தேன்.. இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்..? தலையை பிடித்துக் கொண்டேன்..!!

"எ..எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு ப்ரியா.. நா..நாளைக்கு பாக்கலாம்..!!"

சொல்லிவிட்டு நான் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல், திரும்பி நடந்தேன். ஹெல்மட்டை எடுத்து தலையில் கவிழ்த்துக்கொண்டு, ஆக்சிலரேட்டரை ஆத்திரமாக முறுக்கினேன். என் கண்கள் என்னையும் அறியாமல் கலங்க ஆரம்பித்திருந்தன. சாலையை பார்த்து வண்டியை செலுத்துவது மிக கடினமாக இருந்தது.

எனது மனம் இப்போது எக்கச்சக்க குழப்பத்தில் மூழ்கியிருந்தது. நான் பழிவாங்குவதற்காக வந்த ப்ரியாவுக்காக, என் இதயம் பதறுவது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ச்சே...!! எவ்வளவு நல்ல பெண் இவள்..? இவளுடைய அப்பா அயோக்கியன் என்பதற்காக இவளுடைய வாழ்க்கையில் விளையாடுகிறேனே..? எவ்வளவு கண்மூடித்தனமான அன்பு வைத்திருக்கிறாள் என் மீது..? நான் நடத்தியது எல்லாம் நாடகம் என்று தெரிந்தால், எப்படி துடித்துப் போவாள்..? நான் செய்வது தவறு என்று என் புத்திக்கு பளிச்சென உறைத்தது.

நொந்துபோனவனாய் வீட்டுக்குள் நுழைந்தவனை, அண்ணன் உற்சாகமாய் ஓடி வந்து கட்டிக் கொண்டான். அவன் முகம் எல்லாம் அப்படி ஒரு சந்தோஷம்..!! 'என்னடா..?' என்று நான் புரியாமல் விழிக்க, அவன் அந்த கவரை என் கையில் திணித்தான். பிரித்து பார்க்க சொன்னான். நான் பிரித்தேன்.

"நீ ப்ளான்ட் ஆரம்பிக்க அப்ரூவல் கெடைச்சிடுச்சுடா அசோக்.. நீ ஆசைப்பட்ட மாதிரி.. உன்னோட ட்ரீம் கம்பெனி..!! என்ன.. முன்னமாதிரி பெரிய லெவல்ல பண்ணமுடியாது.. பரவால்ல.. சின்னதா ஆரம்பி.. கூடிய சீக்கிரம் பெரிய ஆளா ஆகப் போற..!!"

அவ்வளவுதான்..!!! அண்ணனின் உற்சாகம் இப்போது பலமடங்கு என்னை வந்து தொற்றிக் கொண்டது. ப்ரியாவை சுத்தமாக மறந்து போனேன். 'ஹேய்...!!!!!!!!!!!!!!!!' என்று சந்தோஷமாக கத்தியவாறு அண்ணனை அணைத்துக் கொண்டேன். அவன் உடனே அதை செலிபரேட் செய்தாக வேண்டும் என்றான். அப்புறம் என்ன..? அடுத்த அரை மணி நேரத்தில் நாங்கள் அந்த பாரில் இருந்தோம்.

அன்று கொஞ்சம் உயர்தர மதுவகைகளை ஆர்டர் செய்தோம். அடுத்து என்ன செய்வது.. எப்படி எல்லாம் தொழில் எல்லையை விரிவாக்குவது.. எந்தமாதிரி அணுகுமுறைகளை கடைபிடிப்பது.. என்று விவாதித்தவாறே, ஆர்டர் செய்த ஆல்கஹாலை உள்ளே தள்ளினோம். மூன்றாவது ரவுண்டு முடிந்த வேளையில்தான் அண்ணன் திடீரென கேட்டான்.

"அ..அந்த சுந்தரமூர்த்தி பொண்ணு என்னடா ஆனா..?"

அவன் குழறலான குரலில் அலட்சியமாய் கேட்க, எனக்கு ஏறிய போதை எல்லாம் குப்பென்று இறங்கிப் போனது மாதிரி இருந்தது. மனதுக்குள் கொஞ்ச நேரம் காணாமல் போயிருந்த ப்ரியா, இப்போது நெஞ்செல்லாம் நிரம்பி அடைத்துக் கொண்டாள். சிரித்தாள்..!! எனக்கு வலித்தது..!! நான் சற்றே சோகமான குரலில் அண்ணனிடம் சொன்னேன்.

"அவ.. என்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னு நெனைக்கிறேண்டா..!!"

"வாவ்...!!!!!!!!! என்னடா இவ்ளோ சா..சாதாரணமா சொல்ற..?"

"இன்னைக்குத்தான் கன்ஃபார்ம் ஆச்சு..!!"

"அப்போ... இ..இன்னைக்கு உனக்கு 'லக்கி டே'ன்னு சொல்லு.." உற்சாகமாக சொன்னவன், என் முகம் களையிழந்து போயிருப்பதை பார்த்ததும்,

"எ..என்னடா.. என்னாச்சு.. ஏன் ஒரு மாதிரி ஆயிட்ட..?" என்றான்.

"அவ ரொம்ப பாவம்டா..!! நாம நெனச்ச மாதிரி இல்லை.. ரொம்ப நல்ல பொண்ணா இருக்குறா..!!"

"ஓஹோ..??"

"ப்ச்..!! தப்பு பண்ணிட்டேன்டா.. அவ அப்பன் பண்ணுன தப்புக்கு.. இவகூட நான் விளையாண்டிருக்க கூடாது.. ச்சே..!!!!!"

"ஹேய்.. என்னடா.. இப்டி ஃபீல் பண்ற..?"

"பின்ன..? நேத்து நான் தெரியாம கையை கட் பண்ணிக்கிட்டேன்ல..? இன்னைக்கு அவ வேணும்னே கையை கட் பண்ணிட்டு வந்து நிக்கிறாடா..!!"

நான் சொல்ல, இப்போது அண்ணனும் பலமாக அதிர்ந்தான். அப்புறம் கொஞ்ச நேரம் நாங்கள் எதுவுமே பேசவில்லை. நான் மீதமிருந்த விஸ்கியை அள்ளி தொண்டைக்குள் ஊற்ற, அவன் அமைதியாக புகைவிட்டபடி அமர்ந்திருந்தான். எதையோ தீவிரமாக யோசித்தான். பின்பு தொண்டையை கனைத்தவாறு மெல்லிய குரலில் சொன்னான்.

"அசோக்.. நான் ஒன்னு சொல்லவா..?"

"என்ன..?"

"இந்த பழிவாங்குற வெளையாட்டுலாம் போதும்.. நான் ஆரம்பத்துலையே சொன்னேன்.. நீதான் கேக்கலை..!! பரவால்ல.. இது இன்னும் சீரியஸ் ஆறதுக்கு முன்னாடி.. எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிடு..!!"

"ம்ம்ம்.."

"நீ நெனச்ச மாதிரி.. பிசினஸ் ஆரம்பிக்கப் போற.. உன்னோட ட்ரீம் இப்போ உன் உள்ளங்கைல..!! இன்னும் எதுக்கு அந்த சுந்தர மூர்த்தி, அவன் பொண்ணுலாம்.. எல்லாத்தையும் விட்டுருடா..!! பிசினஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணு..!! சரியா..?"

"ம்ம்ம்.. சரிடா.. எனக்கும் அதுதான் சரின்னு படுது..!!"

அடுத்த நாள் காலையிலேயே நான் க்ளப் சென்றேன். மெம்பர்ஷிப்பை கேன்சல் செய்தேன். என்னுடைய காண்டாக்ட் டீடெயில்ஸ், வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். க்ளப்பில் இருந்து கிளம்பியபோது ப்ரியாவிடம் இருந்து கால் வந்தது. பிஸி டோன் அனுப்பினேன். வேறு சிம்கார்ட் வாங்கி செல்போனில் திணித்துவிட்டு, பழைய சிம்மை தூக்கி தூர எறிந்தேன். அவ்வளவுதான்..!! இனி பிரியாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இருக்கப் போவதில்லை..!! மனம் இப்போது சற்று நிம்மதியாக இருந்தது.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 09-02-2019, 10:07 AM



Users browsing this thread: 7 Guest(s)