09-02-2019, 10:05 AM
வலுவெல்லாம் வலது கையில் கொண்டு சென்று சரக்கென சர்வ செய்தேன். ப்ரியா மிக எளிதாக எடுத்தாள். என் பக்கம் அடித்து விட்டாள். ஒரு நான்கைந்து முறை பந்தை டவுன் தி லைனிலேயே அடித்து ஆடிக்கொண்டிருந்தோம். பின்பு நான் திடீரென குறுக்காக சென்று, ராலியில் வந்த பந்தை க்ராஸ் கோர்ட்டில் அடிக்க, ப்ரியா ஓடிச்சென்று பந்தை எடுத்து, திரும்ப என்பக்கம் அனுப்ப சற்றே சிரமப்பட்டுப் போனாள். எனக்கு அது நல்ல வாய்ப்பாக தோன்றியது. அவள் எல்லைகோட்டுக்கு அருகே நின்று கொண்டிருக்க, நான் ராக்கெட்டின் வேகத்தை திடீரென குறைத்து, பந்தை டிராப் செய்தேன்.
ஸ்லோமோஷனில் பறந்து சென்ற பந்து, நெட்டில் பட்டு அதன் மீதே தயங்கி நின்றது. ப்ரியா சற்றே லேட்டாக சுதாரித்துக் கொண்டு, நெட் நோக்கி ஓடி வந்தாள். அதற்குள் தயங்கி நின்ற பந்து அவளுடைய எல்லைக்குள் மெதுவாக விழுந்தது. பின் எழும்பி மீண்டும்..!!!!! தான் தோற்றுப் போனதை நம்ப முடியாமல், ப்ரியா உறைந்து போய் நின்றிருந்தாள். நான் ஜெயித்த நிம்மதியில் கண்களை ஒருமுறை மூடித் திறந்தேன். தாராளமாக மூச்சு விட்டேன்.
ப்ரியா சோர்ந்து போனவளாய் சென்று சேரில் அமர்ந்து கொண்டாள். இரண்டு கைகளாலும் தலையை இறுக்கி பிடித்துக் கொண்டாள். நானும் அமைதியாக சென்று அருகில் அமர்ந்தேன். அவ்வளவு நேரம் ஆர்வமாய் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த அவளது அல்லக்கைகள், இப்போது போன இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தனர். நான் ஓரக்கண்ணால் ப்ரியாவை பார்க்க, அவள் என் பக்கம் திரும்பவே இல்லை. நடந்ததை நம்பமுடியாதவளாய் காட்சியளித்தாள்