screw driver ஸ்டோரீஸ்
#90
"நான் ஜெயிச்சிட்டா.. நீ தலையை மொட்டை அடிச்சுக்கணும்.. மீசையை ஷேவ் பண்ணிக்கணும்.. மெம்பர்ஷிப்பை கேன்சல் பண்ணிட்டு.. இந்த க்ளப் பக்கமே தலை வச்சு படுக்க கூடாது..!!"

நான் நிஜமாகவே மிகவும் அதிர்ந்து போனேன். அவளுக்கு என் மீது வெறுப்பு இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் இந்த அளவிற்கு இருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன். அப்புறம் மெல்லிய குரலில் சொன்னேன்.

"ஓகே.. சப்போஸ் நான் ஜெயிச்சிட்டா..?"

"ஹாஹா.. அப்டிலாம் வேற நப்பாசை இருக்கா உனக்கு..?" ப்ரியா கேலியாக சொன்னாள்.

"நப்பாசைன்னே வச்சுக்கோ..!! என்ன பெட்..?"

"நீயே சொல்லு..!!"

அவள் சொல்லிவிட்டு என்னை அலட்சியமாக பார்த்தாள். உடனிருந்த அவளது தோழிகள் நான் என்ன கேட்கப்போகிறேன் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்களாய் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். நான் ப்ரியாவின் முகத்தை கூர்மையாக பார்த்து, தெளிவாக அந்த வார்த்தைகளை உச்சரித்தேன்.

"என்னை நீ கிஸ் பண்ணனும்..!! உதட்டுல..!!"

இப்போது ப்ரியா என்னைப் போல இரு மடங்கு அதிர்ந்து போனாள். ஒரு மாதிரி மிரட்சியாக பார்த்தாள். 'மு..முத்தமா...?' என தடுமாறினாள். அருகிலிருந்த அவளது அல்லக்கைகள் அவளை தனியாக கூட்டி சென்று குசுகுசுவென எதோ பேசினார்கள். நான் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு அவர்களை புன்னகையுடன் வேடிக்கை பார்த்தேன். 'ப்ரியா இதற்கு ஒத்துக் கொள்ளமாட்டாள்.. போட்டியை வாபஸ் வாங்கிக் கொள்வாள்..' என்றுதான் நினைத்தேன்.

ஆனால் அவளுடைய தோழிகள் அவளை விடவில்லை. 'இவன்லாம் ஜெயிக்க சான்சே இல்லடி.. இவனை பழிவாங்க இதை விட்டா.. வேற நல்ல சான்சே கெடைக்காது..' என்று அவள் காதில் மந்திரம் ஓதி அவளை 'டீல்...!!' சொல்ல வைத்தார்கள். எனக்கும் வேறு வழியில்லை. ஒத்துக்கொண்டேன். ஒரு வாரம் கழித்து ஒரு நாள் மாலையில் மேட்ச் என்று பிக்ஸ் செய்து கொண்டோம்.

அந்த ஒரு வாரம் நான் கடுமையாக ப்ராக்டீஸ் செய்தேன். போட்டியில் ஜெயித்தே ஆகவேண்டும் என்று வெறியாக இருந்தேன். தோற்றுப் போனால், என் பழிவாங்கல் திட்டம் பாழாய் போவதோடு, நான் வேறு மொட்டை அடித்துக் கொண்டு அவமானப்பட வேண்டியதாகிவிடும்.

இன்றுதான் அந்த போட்டி நாள். ஒரு மணி நேரம் முன்னதாக ஆரம்பித்தது. நான் எதிர்பார்த்ததை விட ப்ரியா நன்றாக ஆடினாள். அவள் எதிர்பார்த்ததை விட நான் மிக நன்றாக ஆடினேன். ஆளுக்கொரு செட் ஜெயித்தோம். மூன்றாவது செட் இழுபறியாகி.. டை பிரேக்கர் வந்து.. இதோ.. மேட்ச் பாய்ன்ட்..!! ப்ரியாவின் இதழ்கள் என் இதழ்களோடு இணைய.. நான் ஜெயிக்க வேண்டிய இறுதி பாய்ன்ட்..!! கதையின் ஆரம்பத்தில் அம்பயர் சொன்ன அதே மேட்ச் பாய்ன்ட்..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 09-02-2019, 10:04 AM



Users browsing this thread: