09-02-2019, 10:03 AM
அந்த டென்னிஸ் க்ளப், நான் முன்பு வேலை பார்த்த கம்பெனி மூலமாக எனக்கு கிடைத்த காண்டாக்ட்களில் ஒன்றுதான். எளிதாக என்னால் மெம்பர்ஷிப் வாங்க முடிந்தது. ப்ரியா வரும் டைமிங்கிலேயே எனக்கும் ஸ்லாட் வாங்கிக் கொண்டேன். எனக்கு ப்ரியாவை என்ன செய்வதென்றெல்லாம் அப்போது பெரிதாக ப்ளான் இல்லை. அவளை என்னை நம்ப வைக்க வேண்டும். முடிந்தால் காதலிக்க வைக்க வேண்டும். நான் சொல்வதை அவள் கேட்கும் அளவிற்கு மாற்ற வேண்டும். அவள் மூலமாக அவளுடைய அப்பனின் கண்ணில் விரல் விட்டு ஆட்ட வேண்டும்..!!
க்ளப்பில் சேர்ந்து ஒரு இரண்டு வாரங்களிலேயே, நான் ப்ரியாவுக்கு மிகவும் தெரிந்தவனாகிப் போனேன். ஒரு சில சந்திப்புகளிலேயே என் மீது உச்சபட்ச வெறுப்புக்கு ஆளாகினாள். காரணம் இருக்கிறது..!! அவளுடன் மோதலில்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று நான் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். வேண்டும் என்றே அவளை தேடிச்சென்று சீண்டினேன்.
போன முதல் நாளே, அவள் கார் நிறுத்தும் இடத்தில் என் பைக்கை நிறுத்தி பிரச்னை செய்தேன். அவள் என்னை கடக்கும்போதெல்லாம் ஏதாவது கமென்ட் வாய்க்குள் முனுமுனுப்பேன். சில தடவைகள் இன்ட்டென்ஷனோடு பந்தை அவளுடைய பட்டெக்ஸில் அடித்து வெறுப்பேற்றினேன். நான் எதிர்பார்த்த மாதிரியே ப்ரியா என் மீது படு எரிச்சலுக்கு உள்ளானாள். என்னை பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
போனவாரம் திடீரென என்னிடம் தேடிவந்து இளித்தாள். என்னை காபி சாப்பிட அழைத்தாள். நண்பிகளின் உதவியுடன் என்னை கலாய்த்து நோகடிப்பதுதான் அவளுடைய நோக்கம். ஆனால் அந்த கலாய்த்தல் திட்டம் அவளே எதிர்பாராமல் வேறு திசையில் திரும்பியது.
"ஏண்டி ப்ரியா.. நேத்து சேந்த கத்துக்குட்டி பசங்கல்லாம்.. உன்கிட்ட மொறைச்சுக்கிறாங்க போல..!! மொதல்ல அவனுகளை டென்னிஸ் ராக்கெட்டை ஒழுங்கா புடிக்க சொல்லு..!!"
மறைமுகமாக என்னை தாக்கினாள் ப்ரியாவின் அல்லக்கை ஒருத்தி. டென்னிஸே தெரியாத கத்துக்குட்டி மாதிரிதான், நான் ப்ரியாவிடம் அத்தனை நாளாய் காட்டிக் கொண்டிருந்தேன். இப்போது ப்ரியா பல்லை கடித்தவாறு, ஓரக்கண்ணால் என்னை முறைத்தபடியே சொன்னாள்.
"ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. ஒருநாள் வச்சுக்குறேன் அந்த 'L' போர்ட் பையனை..!! அப்புறம் நான் இருக்குற பக்கமே தலை வச்சுப்படுக்க மாட்டான் பாரு..!!"
அவர்கள் என்னைத்தான் மறைமுகமாக சொல்கிறார்கள் என்று எனக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், புன்னகையுடன் சொன்னேன்.
"ஹலோ.. ஏன் 'L' போர்ட் பையன், கத்துக்குட்டின்லாம் சொல்லி அவரை கேலி பண்றீங்க..? நீங்களும் ஒருநாள் கத்துக்குட்டியா இருந்தவங்கதான..? ஒரு ஒருவாரம் ப்ராக்டீஸ் பண்ணினா.. அவரும் உங்களை மாதிரி வெளையாடிட்டு போறாரு..!!"
"ஓஹோ..? ஒருவாரம் ப்ராக்டீஸ் பண்ணினா.. நீங்க எங்க ப்ரியா மாதிரி வெளையாடிடுவீங்களா..?" இது இன்னொரு அல்லக்கை.
"ஓ.. அப்போ இவ்ளோ நேரம் என்னைப் பத்தித்தான் சொல்லிட்டு இருந்தீங்களா..?"
"அப்டித்தான் வச்சுக்கோங்களேன்..!!"
"அப்போ.. நீங்களும் அப்டியே வச்சுக்கோங்க..!!"
"எப்படி..?"
"ஒருவாரம் ப்ராக்டீஸ் பண்ணினா.. நானும் உங்க ப்ரியாவை பீட் பண்ண முடியும்..!!"
"சான்ஸே இல்லை.. எங்க ப்ரியா டென்னிஸ் ஆடி.. நீங்க பாத்தது இல்லை..!!"
"ஹாஹா.. நான் டென்னிஸ் ஆடியும் நீங்க பாத்தது இல்லை..!!"
"ஓஹோ..? அப்போ நெக்ஸ்ட் வீக் மேட்ச் வச்சுக்கலாமா..?"
"தாராளமா வச்சுக்கலாம்..!!"
"என்ன பெட்..?"
"பெட்டா..? பெட்லாம் எதுக்கு..? சும்மா ஜாலியா வெளையாடலாம்..!! யாரு நல்லா வெளையாடுறாங்கன்னு பாக்கணும்.. அவ்ளோதான..?"
"ஹ்ஹ்ஹா.. பயந்துட்டீங்க பாத்தீங்களா..?"
"பயமா..? சரி.. பெட் என்னன்னு சொல்லுங்க..!!"
நான் புன்னகையுடன் கேட்க, அவ்வளவு நேரம் அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ப்ரியா, இப்போது வாய் திறந்தாள். என் முகத்தை ஒருமாதிரி வெறுப்பாக பார்த்தவாறு மெல்லிய குரலில் சொன்னாள்.