09-02-2019, 10:03 AM
"அடடே.. ப்ரியா குட்டி.... என்னடா செல்லம்... டாடியை பாக்க ஆபீசுக்கே வந்துட்ட..?" அவரும் அவளை அணைத்துக் கொண்டார்.
"ஏன்.. வரக்கூடாதா..? என் செல்ல டாடியை பாக்க.. நான் வருவேன்.."
அந்த ப்ரியா கொஞ்சலாக சொல்லிக்கொண்டே, அவருடைய கன்னத்தில் மாறி மாறி 'இச்ச்..!!' வைத்தாள். அவரும் முகமெல்லாம் பூரிப்பாக, மகளுக்கு தன் கன்னத்தை மாறி மாறி காட்டிக் கொண்டிருந்தார். நான் ஓரிரு வினாடிகள் அவர்கள் இருவரையும் வெறுப்பாக பார்த்தேன். அப்புறம் பட்டென்று கதவை திறந்து வெளியேறினேன்.
ஏமாந்து போன விஷயத்தை அண்ணனிடம் சொன்னபோது அதிர்ந்து போனான். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு எனக்கு ஆறுதல் சொன்னான். 'போனா போதுடா.. விடு.. நாம வேற வழில ட்ரை பண்ணலாம்..' என்று இரண்டு க்ளாசிலும் ஊற்றியிருந்த விஸ்கியின் அளவை சரிபார்த்துக் கொண்டே சொன்னான்.
அப்புறம் அடிக்கடி அண்ணனுடன் தண்ணியடிக்க வேண்டி இருந்தது. சுந்தரமூர்த்தி எனக்கு ஏற்படுத்திய நஷ்டம் எங்கெங்கேயோ இடித்தது. கடன் கொடுத்தவர்களுக்கு, லைசன்ஸ் கிடைக்காத விஷயம் தெரிய வர, என்னை நெருக்க ஆரம்பித்தார்கள். ஆர்டர் செய்த எந்திரங்களை கேன்சல் செய்து.. பணத்தை திரும்ப கட்டி சரி செய்ய வேண்டி இருந்தது. சுந்தரமூர்த்தி ஏற்படுத்தியதை போல இன்னொரு மடங்கு நஷ்டம்..!!
எனக்கு பணம் போனது கூட கவலை இல்லை. என் லட்சியம் சிதைந்து போனதில் மிகவும் இடிந்து போனேன். அண்ணன் இன்னும் நம்பிக்கை இழக்காமல், வேறு வழியில் பணம் புரட்ட.. ப்ளான்ட்டுக்கு அப்ரூவல் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆனால்.. நான் சுத்தமாக நம்பிக்கை இழந்து விட்டேன். எல்லாம் அந்த சுந்தரமூர்த்தி என்ற ஏமாற்று ஆசாமியால் வந்தது. நான் அந்த ஆள் மீது உச்சபட்ச வெறுப்பில் இருந்தேன். அப்போதுதான் ஒருநாள் அந்த ப்ரியாவை ஐநாக்ஸில் வைத்து பார்க்க நேர்ந்தது.
நண்பிகள் புடை சூழ.. கார் பானட்டில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு.. கோக் உறிஞ்சிக்கொண்டு.. சிவந்த இதழ்களை விரித்து, பளீரென்ற வெண்பற்களை காட்டி இளித்துக் கொண்டு..!!! என்னவென்றே தெரியவில்லை.. அவளை பார்க்க பார்க்க.. எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது..!! பற்களை கடித்துக் கொண்டு நகர முற்பட்டவனின் மனதில்.. திடீரென அந்த எண்ணம் விழுந்தது..!!
நான் அந்த ப்ரியாவை ஃபால்லோ செய்தேன். ஒரு இரண்டு மூன்று நாட்களிலேயே அவளை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். சுந்தரமூர்த்திக்கு ப்ரியா என்றால் உயிர்..!! அவளுக்காக அப்படி உருகுகிறார்..!! அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்து போகிறார்..!! ப்ரியாவை அடித்தால் அவருக்கு வலிக்கும் என்று எனக்கு தெளிவாக புரிந்து போனது. சுந்தரமூர்த்தியை பழிவாங்க ப்ரியாவை கேடயமாக ஆக்கிக்கொண்டால் என்ன என்று, என் மனம் விகாரமாக யோசித்தது.
அவளது தினசரி நடவடிக்கைகளை அறிந்து கொண்டேன். தினமும் காலையில் ஏரோபிக்ஸ் க்ளாஸ்.. அப்புறம் காலேஜ்..!! ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிறாள். முன்னிரவில் இருந்து நள்ளிரவு வரை நண்பிகளோடு காரில் ஊர் சுற்றுகிறாள். மாலையில்தான் எனக்கே ஆச்சரியமான அந்த வேலையை செய்கிறாள். ஒரு க்ளப் சென்று ரெண்டு மணி நேரம் டென்னிஸ் ஆடுகிறாள்..!