09-02-2019, 10:02 AM
சுந்தரமூர்த்தி எங்கள் ஊர்க்காரர்தான். இப்போது சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார். பெரிய பிசினஸ்மேன். கோடீஸ்வரர். மினிஸ்டருக்கு மிக நெருக்கமானவர். என்னுடைய பிரச்னையை அவரிடம் சொன்னபோது, வேலையை முடித்து தர பத்து லட்சம் பணம் கேட்டார். வேறு வழி தெரியாமல் நானும் பல கஷ்டங்களுக்கு இடையில் அந்த பணத்தை புரட்டிக் கொடுத்தேன். அப்புறமும் இரண்டு மாதங்கள் அவருடைய ஆபீசுக்கு என்னை அலையவிட்டார். இரண்டு மாத இறுதியில் ஒருநாள் என் இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவது மாதிரி அதை சொன்னார்.
"இன்னும் ஒரு பத்து இருந்தாதான் வேலை ஆகும் தம்பி..!!" அவர் கூலாக சொல்ல, நான் அப்படியே அதிர்ந்து போனேன்.
"ஸார்... என்ன ஸார் சொல்றீங்க..? பத்து லட்சத்துல முடிச்சு தர்றேன்னுதான சொல்லீருந்தீங்க..?"
"வாஸ்தவந்தான்..!! ஆனா.. நெனச்சதை விட வேலை சிக்கலா இருக்கு தம்பி.. நெறைய பேரை கரக்ட் பண்ண வேண்டி இருக்கு.. மினிஸ்டர் கூடுதலா எதிர்பார்க்குறாரு.. அதனால இன்னும் ஒரு பத்து ரெடி பண்ணிடுங்க..!!"
"இன்னும் பத்தா..? ஸார்... நான் ஏற்கனவே கொடுத்த பத்து லட்சத்தை ரெடி பண்ணுறதுக்கே ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.. இன்னும் பத்துலாம் சான்சே இல்லை..!!"
"அப்போ வேலை முடியாது..!!"
அந்த ஆள் சொல்லிவிட்டு குச்சியால் பல் நோண்ட, நான் கடுப்பானேன். அவனவன் வெயிலிலும், மழையிலும் அயராது உழைத்தாலும், ஆயிரம் ரூபாய் பார்ப்பது அரிதாக இருக்கிறது. இந்த மாதிரி ஆட்கள் உட்கார்ந்த இடத்தில், பல் நோண்டிக்கொண்டே பல லட்சங்கள் பார்த்துவிடுகிறார்களே என எரிச்சலாக வந்தது. அவர் மீது லேசான ஒரு சந்தேகம் வேறு மனதுக்குள் முளைவிட்டது. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஒரு முடிவுடன் சாந்தமான குரலில் சொன்னேன்.
"சரி ஸார்.. நீங்க வேலையை முடிச்சு தர வேணாம்..!! நான் வேற ரூட் மூலமா மினிஸ்டரை புடிக்கிறேன்..!! நான் குடுத்த பணத்தை மட்டும் திரும்ப கொடுத்திருங்க.." நான் சொல்லி முடிக்கும் முன்பே, அந்த ஆள்
"ஹஹா ஹாஹ்ஹா ஹ்ஹ்ஹ்ஹஹா..." என்று எதோ பெரிய ஜோக்கை கேட்டது போல விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.
"ஏ..ஏன் சிரிக்கிறீங்க..?"
"என்ன தம்பி புரியாத ஆளா இருக்குறீங்க..? லஞ்சமா கொடுத்த பணம் திரும்பி வந்ததா எங்கயாவது சரித்திரம் உண்டா..? அதுலாம் அவ்ளோதான் தம்பி..!!" அவர் கிண்டலாக சொன்ன விதம் எனக்கு ஆத்திரத்தை கிளப்பியது.
"ஸார்.. வெளையாடாதீங்க.. அந்த பத்து லட்சத்தை புரட்டுறதுக்கு நான் எவ்ளோ கஷ்டப் பட்டேன்னு உங்களுக்கு தெரியாது..!! தயவு செஞ்சு திரும்ப கொடுத்திடுங்க.. இல்லன்னா.." நான் சற்றே கோபத்துடன் சொல்ல,
"இல்லன்னா..? சொல்லு.. இல்லன்னா..? என்ன மெறட்டுறியா..? என்ன பண்ணிடுவ..?" பட்டென்று அந்த ஆள் ஒருமைக்கு தாவினார். என்னை முறைத்தார்.
"நீங்க இப்டி பேசுறது சரியில்லை ஸார்.. அந்தப் பணத்தை நீங்களே அமுக்கிட்டீங்களோன்னு.."
"ஆமாம்.. அப்டியே வச்சுக்கோ..!! என்ன இப்போ..? வேலை ஆகணும்னா.. இன்னும் பத்து லட்சத்தோட வா.. இல்லன்னா அப்டியே வெளில ஓடிப் போயிடு..!! அதுக்கும் மேல என்கூட மோதிப் பாக்கனும்னா.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ.. நானும் ரெடி..!! என்னை மீறி அந்த லைசன்ஸை.. நீ எப்டி வாங்குறேன்னு நானும் பாக்குறேன்..!!"
சந்தேகமே இல்லை..!! இந்த ஆள்தான் நடுவில் புகுந்து எல்லாவற்றையும் தின்று ஏப்பம் விட்டிருக்கிறான்..!! ச்சே.. எவ்வளவு ஒரு மோசமான முட்டாளாய் நான் இருந்திருக்கிறேன்..? இப்படி ஏமாந்து போய் நிற்கிறேனே..? இவனிடம் பணம் தந்ததற்கு கூட எந்த வித ஆதாரமும் என்னிடம் இல்லையே..? ச்சே..!!!!!!!! கோட் சூட் மாட்டிக் கொண்டு, நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு, எவ்வளவு நல்ல பிள்ளையாய் நடித்து என்னை ஏமாற்றி விட்டான்..? இப்படி ஏமாற்றி சேர்த்ததுதான் இந்த கார், பங்களா, கம்பெனி என்று இவ்வளவு சொத்துக்களா..?
நான் நொந்து போனேன். நான் கட்டிய லட்சியக் கோட்டை என் கண்முன்னே சீட்டுக்கட்டு கோபுரம் மாதிரி சிதறி விழுவது போல இருந்தது. என்ன செய்வது..???? இந்த பணம் படைத்த திமிங்கிலத்துடன் மோதி.. நான் எப்படி ஜெயிப்பது..??? ஒன்றும் புரியவில்லை. இனி இந்த ஆளிடம் பேசியும் பிரயோஜனம் இல்லை. அமைதியாக எழுந்தேன். சோர்ந்து போனவனாய் திரும்பி நடந்தேன். அறைக்கதவை திறக்க போனபோதுதான்.. பட்டென்று அந்த கதவை திறந்து கொண்டு, புயல் மாதிரி அந்தப்பெண் உள்ளே நுழைந்தாள். மிக மிக அழகாய் இருந்தாள்.
"டாடி............................!!!!!!!!!!!!!!" என்று கத்திக்கொண்டே, ஓடிப்போய் அந்த சுந்தரமூர்த்தியின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.