09-02-2019, 09:56 AM
(This post was last modified: 10-02-2019, 10:39 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
MATCH POINT
மேட்ச் பாய்ன்ட்
கொஞ்சம் சினிமாத்தனமான லவ் ஸ்டோரி பிரண்ட்ஸ்..!! இதமான காதலோடும், மிதமான காமத்தோடும் டென்னிஸ் விளையாட்டையும் ஒரு விதமாக கலந்து எழுதியிருக்கிறேன். கிரிக்கெட் ஜூரத்தில் ஊரே இருக்கும்போது, டென்னிஸ் கொஞ்சம் மாறுதலாக இருக்கும் என்று நம்புகிறேன்..!! காதல் பிடிக்காதவர்கள் தவிர்த்து விடுங்கள். அதையும் மீறி கதையை படிப்பவர்கள், தயவு செய்து கதை பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்
"மேட்ச் பாய்ன்ட்..!!"
சொல்லிவிட்டு அம்பயர் என்னைப் பார்த்து மெலிதாக புன்முறுவல் செய்தார். இவ்வளவு நேரம் இல்லாத ஒரு படபடப்பு, இப்போது என் இதயத்தின் ஒவ்வொரு அணுவிலும் படுவேகத்தில் பரவ ஆரம்பித்தது. விரல்கள் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பித்தன. தலைக்குள் யாரோ அமர்ந்து தபேலா வாசிப்பது மாதிரி இருந்தது. நான் கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின் நிதானமாக வெளியே விட்டேன். பதறும் இதயத்தின் படபடப்பை குறைக்க முயன்றேன்.
இந்த மேட்ச் பாய்ன்ட் எனக்கு மிகவும் முக்கியம். நான் நினைத்தததை சாதிக்க.. என் முயற்சியில் வெற்றி பெற.. இந்த மேட்ச் பாய்ன்ட் மிக மிக முக்கியம்..!!! வென்றே ஆகவேண்டும்..!!! இந்தப் பாய்ண்டில் நான் வென்று விட்டால்.. இந்த மேட்சிலும் வென்று விடுவேன். என்னுடைய திட்டத்தில் நான் வெற்றி பெறுவதும் மிக எளிதாகிவிடும். தோற்றுப் போனால்.. இத்தனை நாள் நான் திட்டமிட்டு செய்த எல்லா செயல்களுமே வீணாய் போகும்.
ஒரு நான்கைந்து வினாடிகள் அந்த மாதிரி நான் மனதை ஆசுவாசப் படுத்தினேன். அப்புறம் படக்கென கண்களை திறந்தேன். சர்வீஸ் போட தயாரானேன். லேசாக குனிந்து, இரண்டு மூன்று முறை அந்த ஆப்டிக் யெல்லோ நிற டென்னிஸ் பந்தை கீழே போட்டு, உயர எழும்ப செய்து பிடித்தேன். பின்பு என் தலைக்கு மேலே உயரமாய் தூக்கிப் போட்டேன். அந்த பந்து கீழே வர வர, நான் தரையில் இருந்து லேசாக ஜம்ப் செய்து, என் கையில் வைத்திருந்த டென்னிஸ் ராக்கெட்டை சரக்கென ஓங்கினேன்.
இந்த மேட்ச் பாய்ண்ட்டின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள, என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சற்றே நீளமான கதை..!! சொல்கிறேன்..!! பொறுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!! என் பெயர் அசோக். எம்.பி.ஏ படித்திருக்கிறேன். பிறந்தது காஞ்சிபுரத்துக்கு அருகே மாமண்டூர். படித்ததெல்லாம் சென்னையில்தான். எனக்கு அண்ணன் ஒருவன் இருக்கிறான். பெயர் அபிஷேக். இப்போது சென்னையில் அவனுடன்தான் தங்கியிருக்கிறேன். அப்பா அம்மா இன்னும் காஞ்சிபுரத்தில்தான் இருக்கிறார்கள்.
ஸ்கூல் படிக்கும்போது எதேச்சையாக ஆரம்பித்ததுதான் இந்த டென்னிஸ் விளையாடும் பழக்கம். ஒருநாள் PET மாஸ்டர் நான் விளையாடுவதை கவனித்து, எனக்கு இயல்பாகவே அந்த திறமை இருப்பதாக சொன்னார். டென்னிஸ் விளையாட்டின் நுணுக்கங்களை நிறைய கற்றுக் கொடுத்தார். என் வாழ்க்கையில் விழுந்த முதல் டென்னிஸ் வித்து அதுதான்..!! பின்பு காலேஜிலும் டென்னிஸை கண்டின்யூ செய்தேன். ஒருமுறை இன்டர் காலேஜ் டோர்னமண்டில் சாம்பியன் பட்டம் வென்றேன். என்னையும் அறியாமல் டென்னிஸ் என்னுடன் கலந்தது. டென்னிஸை காதலித்தேன்.
எம்.பி.ஏ முடித்தபோது என் மனதில் இருந்த ஒரே லட்சியம், டென்னிஸ் பந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிப்பதுதான்..!! அம்பத்தூரில் இருக்கும், அந்த மாதிரி ஒரு கம்பெனியில் குறைந்த ஊதியத்திற்கே வேலைக்கு சேர்ந்தேன். ஐந்தே வருடங்கள்..!! அந்த பிசினஸ் பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். நிறைய காண்டாக்ட்ஸ் கிடைத்தது. அவர்களுடன் நல்ல ரிலேஷன்ஷிப் வளர்த்துக் கொண்டேன். நான் தனியாக பிசினஸ் ஆரம்பித்தால், பிரகாசிக்க முடியும் என்று நம்பிக்கை வந்தது.
கொரட்டூரில் ஒரு சின்ன யூனிட் ஆரம்பிப்பது என்று முடிவெடுத்தேன். ஊரில் உள்ள நிலம், அம்மாவின் நகைகள் கொஞ்சம், எல்லாம் சேர்த்து முதலீடு தயார் செய்தேன். பந்து தயாரிக்க தேவையான எந்திரங்கள் எல்லாம் கூட ஆர்டர் செய்துவிட்டேன். அப்போதுதான் வந்தது சிக்கல்.. கம்பெனிக்கு லைசன்ஸ் பெறும் வடிவில்..!! சிக்கலை தீர்க்க தொழிற்துறை மந்திரியின் உதவியை நாட சொன்னார்கள் தெரிந்தவர்கள்..!! மந்திரியிடம் உதவி கேட்க, நான் சுந்தரமூர்த்தியை அணுகினேன்.