Checkmate ... A cybercrime thriller dreamer
#7
சக்திவேல்: "இன்னும் இதை என் கிட்ட ஏன் கொடுக்கறேன்னு சொல்லலை .. " ஜாஷ்வா: "சொல்றேன் .. நாங்க ரெண்டு பேரும் லாங்க் டர்ம் விசா எடுத்துட்டு போறோம். பஹாமாஸ் மாதிரி இடங்களுக்கு இந்த மாதிரி நிறைய பேர் போறாங்க. இட் சீம்ஸ், இப்படி வர்றவங்களை சில கும்பல்கள் கண்காணிச்சு அவங்களை தள்ளிட்டு போய் ட்ரக் பண்ணி ட்ரான்ஸ்ஃபர் விவரங்களை கேட்டு தெரிஞ்சுக்கறாங்களாம். நாங்க என் கஸின்ஸ் மூலம் முன் ஏற்பாடுகள் செஞ்சுட்டுதான் போறோம். இருந்தாலும் ஒரு முன் ஜாக்கிரதைக்கு இதை நான் உன் கிட்ட கொடுக்கறேன். நான் அங்க போனதுக்கு அப்பறம் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செஞ்சுட்டு அந்த அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃபர் எங்க எல்லாம் பண்ணனும்னு சொல்றேன். நீ ஃபோன்ல கூப்பிட்டு அதை முடிக்கணும். இது உன் தங்கச்சியோட கட்டளை. நாளன்னைக்கு பாக்கும் போது அவளும் சொல்லுவா" சஞ்சனாவை பற்றி சொன்னதும சக்திவேல் முகம் மலர்ந்தான். நித்தின்: "ஐ சப்போஸ் இதை தவிர நார்மல் ட்ரான்ஸ்ஃபர்லையும் கொஞ்சம் பணம் எடுத்துட்டு போறே தானே?" ஜாஷ்வா: "என் சம்பளப் பணம் முழுக்க என் அக்கௌண்ட்ல இருக்கு. நான் அதை அங்க இருந்தும் எடுத்துக்கலாம். மத்த பணம் தான் அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃப்ர்ல போகுது" சக்திவேல்: "இஃப் யூ டோண்ட் மைண்ட் ... எவ்வளவு அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்பறே? " ஜாஷ்வா: "நாட் அட் ஆல். உனக்கு எப்படியும் தெரிஞ்சுதானே ஆகணும். மொத்தம் நாலரை மில்லியன். இதை தவிர இந்த அக்கௌண்ட்ல இருந்து என்னோட ஷேரான மூணு மில்லியனுக்கு ஒரு செக்கும் அவங்ககிட்ட இன்னைக்கு கொடுத்து இருக்கேன். நாளன்னைக்கு வரைக்கும் நான் அவங்ககிட்ட எதுவும் சொல்லலைன்னா அவங்க அதை நாளன்னைக்கு டெபாசிட் பண்ணுவாங்க" நித்தின்: "ஹே தாட் இஸ் ஃபன்னி... சொன்னா டெபாசிட் பண்ணுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன். சொல்லலைன்னா டெபாசிட் பண்ணுவாங்க அப்படிங்கறே?" ஜாஷ்வா: "அவங்களை பொறுத்த வரைக்கும் காண்டாக்ட் ரொம்ப கம்மியா இருக்கணும். எனக்கும் நல்லதுதானே. நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சரி, நான் கிளம்பறேன். என் டெரரிஸ்ட் மனைவி இன்னும் நாளைக்கு டின்னர்னு நினைச்சுட்டு இருப்பா. இப்ப போய் சொன்னா கொஞ்சம் ஒதை விழுந்தாலும் விழும் .. " சக்திவேல்: "ஏண்டா அவளை இன்னும் டெரரிஸ்ட்டுன்னு சொல்றே. அவ மனசு கஷ்டப் படும் இல்லையா?" ஜாஷ்வா: "ஜஸ்ட் கிட்டிங்க் .. அவ எனக்கு பர்ஸனல் டெரரிஸ்ட் .. அதாவுது அவளோட விக்டிம் நான் மட்டும்தான்!" என்றதும் மூவரும் வாய்விட்டு சிரித்த படி விடை பெற்றனர்.Joshua's Flat, Harlem, N.Y 7:30 PM ஜாஷ்வாவின் ஃப்ளாட், ஹார்லம் பகுதி, நியூ யார்க் நகரம், மாலை மணி 7:30 இந்திய சமையலின் மணம் ஃப்ளாட்டிற்கு அருகே வரும்போதே அவன் நாசியை துளைக்க கதவை தட்டாமல் தன்னிடமிருந்த சாவியால் திறந்து நுழைந்தான். வாசல் தெரியும்படி இருந்த சமையல் அறையிலிருந்து சஞ்சனா ஓரக்கண்ணில் பார்ப்பதை அறியாமல் தன் ஜாக்கெட்டை சுவற்றில் இருந்த கொக்கியில் மாட்டிவிட்டு பூனை போல் நடந்து சமையலறைக்குள் சென்றான். குளித்து முடித்து அடர்ந்த கூந்தலை ஒரு டர்கி டவலால் சுற்றி கொண்டையாக போட்டு வெற்றுடலை ஒரு டர்கி பாத் ரோப் தழுவ நின்று கொண்டிருந்தவளின் இடையை பற்றி காது மடல்களை கடித்தான். எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் ஃபில்டர் காப்பி நிறத்தில் இருந்த அவனது முகத்தருகே அவளது மாநிறம் விளக்கொளியில் தங்கம் போல் ஜொலித்தது. ஜாஷ்வா: "ஹேய் ஹனி! டெஸ்ட் ரிஸல்ட் வந்துதா? டிட் யூ மீட் த கைனிக்?" சஞ்சனா: "ம்ம்ம்ம் ... ஜாஷ்வா ஜூனியர் கன்ஃபர்ம்ட்" ஜாஷ்வா: "அதுக்குள்ள ஜாஷ்வா ஜூனியரா இல்லை சஞ்சனா ஜூனியரான்னு தெரியுமா என்ன?" திரும்பி நின்று அவன் கழுத்தில் கரங்களை மாலையாக போட்டவள். அவன் தலையை குனியவைத்து நுனிக்காலில் நின்று அவன் இதழ்களை தன் இதழால் கவ்வினாள். சில நிமிடங்கள் நீடித்த முத்தத்திலிருந்து மனமில்லாமல் விடுபட்டு தமிழில், "மண்டு!" என்று தொடர்ந்து ஆங்கிலத்தில், "என் ஸ்வீட் ஹஸ்பண்ட் பெரிய விஸ் கிட் சில சமயத்துல டம்போ. அதுக்குள்ள தெரியாது. நாலு மாசத்துக்கு அப்பறம் தான் டாக்டர்ஸ் கன்ஃபர்ம்டா சொல்லுவாங்க" ஜாஷ்வா: "எனக்கும் அது தெரியும் மை லவ். நீ ஜாஷ்வா ஜூனியர்னு சொன்னதுனால அப்படி கேட்டேன்" சஞ்சனா: "ஆனா .. ஜாஷ்வா ஜூனியர்தான்னு நான் 100% ஷ்யூர்" ஜாஷ்வா: "எப்படி சொல்றே?" சஞ்சனா: "கணவன் மனைவிமேல் வெச்சு இருக்கற காதலை விட அதிகமா மனைவி கணவன் மேல் வெச்சு இருந்தா நிச்சயம் ஆண் குழந்தைதான் பிறக்கும் அப்படின்னு எங்க ஊர்ல பாட்டிங்க சொல்லுவாங்க. அதனால தான்!" ஜாஷ்வா: "அப்ப நான் உன்னை லவ் பண்ணலைங்கறயா?" சஞ்சனா: "நான் அப்படி சொல்லலை. நீ என்னை லவ் பண்றதை விட அதிகமா நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னேன்" ஜாஷ்வா: "உன்னை தவிர வேற யாரையும் நான் லவ் பண்ணலை. பண்ணினதும் இல்லைன்னு உனக்கு தெரியும்தானே?" சஞ்சனா: "உயிருள்ள ஜீவராசியில நீ என்னை மட்டும்தான் லவ் பண்ணறேன்னு தெரியும். ஆனா என்னை லவ் பண்ணற அளவுக்கு உன் கம்ப்யூடர், அல்காரிதம் இதை எல்லாத்தையும் லவ் பண்றே. எனக்கு அந்த மாதிரி டிஸ்ட்ராக்ஷன் எதுவும் இல்லை. சோ, உன்னை விட நான் தான் அதிகமா லவ் பண்றேன்" ஜாஷ்வா: "உன் லாஜிக் பிடிச்சு இருக்கு. ஆனா இன்னும் ரெண்டு மாசம் பொறுத்துக்கோ. அப்பறம் பஹாமாஸ்ல எனக்கு ஒரு வேலையும் இருக்காது. இதுக்கு அடுத்தது சஞ்சனா ஜூனியர் ஒன், டூ, த்ரீன்னு சிக்ஸ் வரைக்கு அரை டஜன் பேபி டால்ஸ் வரும்" சஞ்சனா: "உன்னை மாதிரி ஒரு அப்பாவுக்கு நான் ஒரு டஜன் பிள்ளைங்ககூட பெத்து கொடுக்க தயார்" ஜாஷ்வா: "என்னை மாதிரி ஒரு அப்பாவா?" சஞ்சனா: "நீ எப்படிப் பட்ட ஒரு அப்பாவா இருப்பேன்னு உன்னை பாத்த முதல் மூணு மாசத்துல தெரிஞ்சுகிட்டேன்" என்றாள் ஜாஷ்வா: 
Like Reply


Messages In This Thread
RE: Checkmate ... A cybercrime thriller dreamer - by johnypowas - 08-02-2019, 06:15 PM



Users browsing this thread: 2 Guest(s)