Checkmate ... A cybercrime thriller dreamer
#6
பிஸ்டலை அவர்களிடமிருந்து வாங்கிய ஜாஷ்வா அதை தன் ஜாக்கெட் பாக்கெட்டில் போட்டபடி கூடுதல் தோட்டாக்கள் இருந்த கவரை தன் கைப்பைக்குள் வைத்தான். பிறகு அந்த பையில் இருந்து ஒரு பேஸ் பால் தொப்பியையும் கூலிங்க் க்ளாஸையும் எடுத்து நித்தினிடம் கொடுத்தான். 'என்ன ?' என்று புருவத்தை உயர்த்தியவனிடம், "இன்னோர் முன் எச்சரிக்கை கார்ல வரும்போது இதை போட்டுட்டு வா. ஓரளவுக்கு உன்னை அடையாளம் தெரியாம இருக்கணும். சக்தி, நீ பின் சீட்டுல உக்காந்துட்டு வா. பார்க்கிங்க் லாட்டுக்கு உள்ள நுழையும் போது கீழ குனிஞ்சுக்கோ. பாக்கறவங்களுக்கு ஒரே ஒரு ஆள் காரோட்டிட்டு வர்ற மாதிரி இருக்கணும்" சக்திவேல்: "எதுக்கு இந்த சீக்ரஸி?" ஜாஷ்வா: "என்னோட ரெண்டாவுது சந்தேகம் ... ஒருவேளை நம்மை மிரட்டி எப்படி இந்த ட்ரான்ஸ்ஃபர் பண்ணறோம்னு தெரிஞ்சுக்கறதுக்காக இந்த மீட்டிங்குக்கு கூப்பிட்டு இருந்தா?இந்த ஆபரேஷன்ல எனக்கு தெரிஞ்ச சில விஷயம் உங்க ரெண்டு பேருக்கும் தெரியாது. அதே மாதிரி உங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச விஷயம் எனக்கு தெரியாது. சோ, மூணு பேரும் ஒண்ணா அவங்க கைல சிக்க கூடாது அதனால எனக்கு எந்த விதமான டவுட்டும் இல்லைன்னு தோணறவரைக்கும் நான் உங்களுக்கு சிக்னல் கொடுக்க மாட்டேன்" நித்தின்: "ஹேய், இது என்ன புது ட்விஸ்ட்?" சக்திவேல்: "ஜஷ்வா சொல்றது சரி தான். நம்மளோட பாட்நெட்டை காப்சர் பண்ண எவ்வளவு சைபர் அட்டாக் வந்துதுன்னு மறந்துடுச்சா?" (BotNet என்று அழைக்கப் படும் ஒரு ஸைபர் சூழ்ச்சி முறையை அடுத்த அப்டேட்டில் ஆராயலாம்) நித்தின்: "அதெல்லாம் வலை உலகத்தில. நிஜத்தில பண்ணுவாங்களா?" ஜாஷ்வா: "உன் பாங்க் பாலன்ஸை பாரு உனக்கே தெரியும் உன் பாட்நெட்டுக்காக நீ டிவலப் பண்ணினதை வெச்சுட்டு எவ்வளவு சம்பாதிக்க முடிஞ்சுதுன்னு. மத்தவங்க கைக்கு அது போய் இருந்தா அந்த மாதிரி பத்து மடங்கு சம்பாதிச்சு இருப்பாங்க. இன்னும் சம்பாதிக்க முடியும்" சக்திவேல்: "என்ன ஜாஷ்வா? இன்னும் சம்பாதிக்கணும்னு உனக்கு இருக்கா?" ஜாஷ்வா: "நோ வே! ஐ ஹாவ் இனஃப் .. " நித்தின்: "இந்த மாதிரி சொல்றதுக்கு ஒரு மெச்சூரிட்டி வேணும் .. அது உங்கிட்ட இருக்கு" சக்திவேல்: "எங்க ஊர்ல ஒரு பழமொழி இருக்கு" என்றவன் தமிழில் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்றபின் அதற்கு விளக்கத்தை ஆங்கிலத்தில் தொடர்ந்தான், "போதும் என்று சொல்லும் மனம் இருந்தா அதை வெச்சுட்டு தங்கம் செய்யலாம்" ஜாஷ்வா: "You mean like Philosopher's Stone? நல்லா இருக்கு!" நித்தின்: "ம்ம்ஹூம் ... தங்கத்தை செயற்கையா செய்ய முடியாதுங்கறதுக்கு ஒரு விளக்கம் மாதிரி இருக்கு" சக்திவேல்: "எல்லாத்தையும் இப்படி ஏண்டா விதண்டா வாதமா யோசிக்கறே? சரி ஜாஷ்வா, எப்படி சிக்னல் கொடுக்க போறே" ஜாஷ்வா: "அவங்களை பாக்கறதுக்கு முன்னாடி என் செல்லுல இருந்து உன் நம்பரை கூப்பிடறேன். காலை கட் பண்ணாம ஃபோனை பாக்கெட்ல வெச்சுக்கறேன். நாங்க என்ன பேசறோம்னு உங்களுக்கு கேக்கும். நிலமை சரியா இருந்தா பேச்சு வாக்கில நான் 'தே ஷுட் பீ ஹியர் இன் தெ நெக்ஸ்ட் த்ரீ மினிட்ஸ்' அப்படின்னு சொல்வேன். எக்ஸாக்டா அப்படி சொன்னால் மட்டும் இறங்கி வாங்க" சக்திவேல்: "எனக்கு என்னமோ இன்னமும் இந்த மீட்டிங்க் தேவையான்னு படுது ... " நித்தின்: "டோண்ட் வொர்ரி டா, ஜாஷ் சமாளிப்பாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு"ஜாஷ்வா: "தட்ஸ் தெ ஸ்பிரிட். அப்பறம் இன்னொரு விஷயம்." என்றபடி கை பையில் இருந்து இன்னோரு கவரை எடுத்து சக்திவேலிடம் கொடுத்து, "இதுல ரெண்டு ஷீட்ஸ் இருக்கு, ஒண்ணுல இந்த நம்பர் அக்கௌண்ட் டீடெயில்ஸ் அப்பறம் நெட் பாங்கிங்க் லாகின் ஐடியும் பாஸ்வர்டும் இருக்கு. " சக்திவேல்: "அதை எதுக்கு எங்கிட்ட கொடுக்கற?" ஜாஷ்வா: "நாம் பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணலைன்னு அவங்களுக்கு சந்தேகம் இல்லைன்னா உடனே அதுல இருக்கற பணம் எல்லாத்தையும் நம் அக்கௌண்டுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடனும். நான் என் கஸின் கிட்ட சொல்லி அதை க்ளோஸ் பண்ண சொல்லுடுவேன். நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கு மூணு மில்லியன் எடுத்துக்குங்க. ஒரு மில்லியனை சாரிட்டிக்குன்னு நாம் வெச்சு இருக்கற அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க. அதுக்கு அப்பறம, அந்த சாரிட்டி அக்கௌண்ட்ல மொத்தம் ஒன்றரை மில்லியன் டாலருக்கு கொஞ்சம் அதிகமா இருக்கும். இதுவரைக்கும் நாம் சாரிட்டிக்குன்னு ஏழரை லட்சம் (முக்கால் மில்லியன்) தான் செலவழிச்சு இருக்கோம். பாக்கியை நீங்க இந்தியாவிலயும் நான் பஹமாஸ்லயும் செலவு செய்யறதா இருந்தோம். கூடிய சீக்கிரம் அந்த அக்கௌண்ட்ல இருக்கறது முழுக்க செலவு செஞ்சுடணும். மனசுல வெச்சுக்குங்க." நித்தின்: "இந்தியா போன உடனே முதல் வேலை என்னோடது அது தான். ஏற்கனவே நாங்க சில அனாதை விடுதி அப்பறம் ஓல்ட் ஏஜ் ஹோம் எல்லாம் ஷார்ட் லிஸ்ட் பண்ணி வெச்சு இருக்கோம்" சக்திவேல்: "அது சரி, ரெண்டு ஷீட்ஸ் இருக்குன்னு சொன்னே?" ஜாஷ்வா: "சொல்றேன். இன்னோரு ஷீட்ல நான் இங்க இருந்து அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்ணறதை பத்தி டீடெயில்ஸ் இருக்கு" சக்திவேல்: "உன்னோட பணத்தை இங்க இருந்து எடுத்துட்டு போறதை பத்தி ... என் கிட்ட ஏன் குடுக்கறே?" ஜாஷ்வா: "நான் அதை பிரிச்சு கூட பாக்கலை. பாக்க வேண்டாம்னு சொல்லி சஞ்சனா சொன்னா. அப்படியே உன் கிட்ட கொடுக்கறேன்" சக்திவேல்: "அதான் ஏன்?.. " ஜாஷ்வா: "இந்த அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃபர் எப்படி வொர்க் பண்ணும் தெரியுமா? ஒரு பாங்க் மாதிரி தான். ஆனா கொஞ்சம் வித்தியாசமா .. நான் என் பணத்தை எல்லாம் அவங்க கிட்ட கொடுத்துட்டேன். அதுக்கு பதிலா அவங்க எங்கிட்ட அந்த ஷீட்ல ஒரு ஃபோன் நம்பர், ஒரு அக்கௌண்ட் நம்பர் அப்பறம் ஒரு சாலஞ்ச் ரெஸ்பான்ஸ் லிஸ்ட் (challenge-response list) கொடுத்து இருக்காங்க. அந்த நம்பருக்கு ஃபோன் பண்ணி அக்கௌண்ட் நம்பரை சொன்னதும் அந்த லிஸ்ட்ல இருக்கற ஒண்ணு ரெண்டு சாலஞ்ச் கேள்விகளை கேப்பாங்க. அதுக்கு நீ அந்த கேள்விக்கு அதுக்கு நேரா இருக்கற ரெஸ்பான்ஸை பதிலா சொல்லணும். அதுக்கப்பறம் நீ எவ்வளவு பணத்தை எந்த நாட்டில எந்த ஊர்ல யார் கிட்ட கொடுக்கணும் இல்லை எந்த பேங்க்ல எந்த அக்கௌண்ட்ல டெபாசிட் பண்ணனும் அப்படின்னு சொல்லலாம்." நித்தின்: "ஹே, நம்பகமான பார்டிங்க தானே?" ஜாஷ்வா: "இந்த அண்டர்க்ரௌண்ட் நெட் வொர்க் ஓடறதே நம்பிக்கைலதான். கமிஷன் கொஞ்சம் அதிகம். மூணரை பர்சன்ட். நாம் சார்ஜ் பண்ணின மாதிரி ஒன்றரை பர்ஸன்ட்னா கொலம்பியா ட்ரக் கார்டல் காரங்க நம்ம கிட்ட வந்து இருக்க மாட்டாங்க" 
Like Reply


Messages In This Thread
RE: Checkmate ... A cybercrime thriller dreamer - by johnypowas - 08-02-2019, 06:14 PM



Users browsing this thread: 2 Guest(s)