08-02-2019, 06:12 PM
நித்தின்: "ஹேய், அவ்வளவு அபாயம் இருக்குன்னா எதுக்கு இந்த மீட்டிங்க். நீ சொல்ல வேண்டியதை ஒரு ஈமெயில்ல ஹாஃப்மனுக்கு அனுப்பிடு" ஜாஷ்வா: "ஈமெயில் எவ்வளவு ஸேஃப்னு உனக்கு தெரியும். என்.எஸ்.ஏ காரங்க போற வர்ற மெயில் எல்லாம் மோப்பம் பிடிச்சுட்டு இருக்காங்க. ஹாஃப்மனோட பர்ஸனல் ஈமெயில் ஐடிக்கு அனுப்பினா அரசாங்கத்துகிட்ட போய் என்னை அரெஸ்ட் பண்ணுன்னு சொல்ற மாதிரி. இந்த ஒரு மெயிலுக்காக நாம் யூஸ் பண்ணற மாதிரி அவனுக்கு செக்யூர் மெயில் செட்-அப் பண்ணி கொடுக்க நான் விரும்பல. சில விஷயங்கள் நம் பாதுகாப்புக்கு மட்டும்தான். வெளியே யாருக்கும் தெரிய கூடாது" சக்திவேல்: "இல்லை, ஒரு லெட்டர் எழுதி அதை உன் கஸின் யார் மூலமாவுது அவங்க கிட்ட கொடுக்க சொல்லேன்?" ஜாஷ்வா: "ஹேய், அவங்களுக்கு தெரியுமாங்கறதே இன்னும் முடிவா நமக்கு தெரியாது. அப்படி இருக்கும் போது எதுக்கு வந்த பணத்தை அவங்க கேக்காமலே கொடுக்கணும்? யோசிச்சு பாரு. அந்த பணம் நமக்கு கிடைக்க வாய்ப்பு இருக்குன்னா கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் ஆகணும். அவங்க கூட வேற ஆள் யாராவுது இருந்து பேச்சு சுமுகமா போலைன்னா உடனே கன்னை எடுத்து ஆண்டர்ஸனை குறிவெச்சு பிடிச்ச படி இந்த கவரை அவங்க கிட்ட வீசுவேன். அதை பாத்து என் கஸின் காரை பக்கத்தில கொண்டு வருவான். கார்ல ஏறி வந்துடுவேன். இந்த பிஸ்டலை எடுத்துட்டு போறது ஒரு தற்காப்புக்காக தான். டோண்ட் வொர்ரி. ஐ கேன் ஹாண்டில் இட்" என்றபடி இருவரையும் சகஜ நிலைக்கு கொண்டு வந்தான். ஆர்வத்தில் நித்தின் அந்த கவரை ஜாஷ்வாவிடமிருந்து வாங்கி டேபிளுக்கு கீழே பிடித்த படி அந்த பிஸ்டலை கையில் எடுத்துப் பார்த்தான். ஜாஷ்வா: "ஜாக்கிரதை. காலுக்கு நடுவில எதையாவுது சுட்டுட போறே. உனக்கு இன்னும் கல்யாணம்கூட அகலை" சக்திவேல் சிறிது அதிர்ச்சியுடன், "ஏய் ஜாஷ்வா, சேஃப்டி லாக் ஆன்ல இல்லையா?" சிரித்த படி ஜாஷ்வா, "கவலை படாதே. சேஃப்டி லாக் ஆன்லதான் இருக்கும். இந்த பிஸ்டலை பத்தி தெரியாதவங்க இதுல சுடறது ஆல்மோஸ்ட் இம்பாசிபிள். அதோட சேஃப்டி லாக் எப்படி ஆபரேட் பண்ணறதுன்னு அவ்வளவு சுலபமா கண்டு பிடிக்க முடியாது" நித்தின்: "ரொம்ப லைட்டா இருக்கற மாதிரி இருக்கு?" ஜாஷ்வா: "ம்ம்ம் .. GLOCK-17" சக்திவேல்: "ஓ, அந்த பாலிமர் பாடி பிஸ்டலா. எங்க குடுடா நானும் பாக்கறேன்" அது GLOCK-17 எனப்படும் செமி-ஆடோமாடிக் பிஸ்டல். பொதுவாக பிஸ்டல்கள் முழுவதும் மிக கடினமான எஃகிரும்பில் (carbonised steel) அல்லது கன்-மெட்டல் என்ற உலோகத்தில் செய்யப் பட்டு இருக்கும். ஆனால் GLOCK-17 முக்கால் பாகத்திற்கு மேல் பாலிமர் எனப்படும் ஒரு கடினமான ப்ளாஸ்டிக்கில் செய்யப் பட்டது. ப்ளாஸ்டிக் என்றதும் வாசகர்களுக்கு குளியலறை பக்கெட் மற்றும் மக் நினைவுக்கு வரலாம். ஆனால் இந்த ப்ளாஸ்டிக் எஃகிரும்பை விட கடினமானது. இருநூறு செல்ஸியஸுக்கும் மேல் வெப்பம் தாங்கக் கூடியது. இருப்பினும் உலோகங்களை விட மிகவும் எடை குறைவானது. 9mm குறுக்களவும் 19mm நீளமும் உள்ள பதினேழு தோட்டாக்களை நிரப்பிய கார்ட்ரிட்ஜ் மேகஸீன் லோட் செய்த பிறகும் அந்த பிஸ்டலின் எடை ஒரு கிலோவுக்கும் குறைவே. GLOCK-17 பிஸ்டலை பற்றி குறிப்பிடத்தக்க இன்னொன்று அதன் மிகக் குறைவான ரிகாயில் (recoil). ஒரு பிஸ்டலை சுடும்போது தோட்டாவில் இருக்கும் வெடிமருந்து வெடித்து குண்டு முன்புறம் தள்ளப் படுகிறது. அதே சமயம் பிஸ்டல் நியூடனின் மூன்றாவது விதிப் படி (For every action there is an equal and opposite reaction) பின்னோக்கி அழுத்த மாக தள்ளப் படும். அந்த பின்னோக்கி தள்ளும் சக்திக்கு பெயர் ரிகாயில். சிலர் இதனை கிக்-பாக் என்றும் அழைப்பது வழக்கம். துப்பாக்கியின் எடை, தோட்டாவின் அளவு இவைகளைப் பொறுத்து ரிகாயிலின் அழுத்தம் வேறு படும். ரிகாயிலினால் துப்பாக்கி சுடுவதில் பழக்க மில்லாமல்லாதவர்களுக்கு கையிலோ முகவாயிலோ காயம் படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உலகத்தில் உள்ள பிஸ்டல்கள் அனைத்தையும் விட மிக குறைவான ரிகாயில் கொண்டது GLOCK-17. ஏனெனின் இந்த பிஸ்டல் ரிகாயில் சக்தியையே அடுத்த தோட்டாவை மேகஸீனிலிருன்து சேம்பர் எனப்படும் தோட்டா வெடிக்கும் பகுதிக்கு தள்ள உபயோகப் படுத்துகிறது. எஞ்சி இருக்கும் ரிகாயில் சக்தியால் ஏற்படும் அதிர்வை ஓரளவு அதன் பாலிமர் பாகங்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. இக்காரணத்தால் பழக்க மில்லாதோரும் இந்த பிஸ்டலை எளிதில் உபயோகிக்கலாம்.