08-02-2019, 12:14 PM
அங்கிருந்து வந்தவுடன் எனக்கு வீட்டிலிருந்து என் பையன் பொன் செய்தான், அவனுடைய இண்டர்வியுவில் எதிர்பார்க்கும் சம்பளத்தை பற்றி மட்டுமே கேட்டார்கள். நீங்க சொல்லியபடி தான்20லாக் பர் அனம் என்றேன் குறைந்தது 18என்றாலும் ஓகே என்றேன். 18 லாக் பிக்ஸ் செய்து ஆர்டர் கொடுத்து ரெண்டு நாட்களுக்குள் ஜாயின் பண்ணனும் என்றனர். ஆர்டரை வாங்கியதும், அங்கே என் ஆபீசுக்கு சென்று என்னுடைய ரிசைன் லெட்டரைக் கொடுத்தேன். இப்போது உடனே ரிலீவ் செய்யச் சொன்னேன். அதற்கு அவர்கள் ஒரு மாத சாலரியை கட்டினால் உடனே ரிலீவிங் ஆர்டர் கிடைத்துவிடும் என்றனர் என்று சொன்னான். நான் அவனிடம் சொன்னேன், நீ உன் ஆபீசுக்கு மறுபடியும் போய் நாளை காலை பணத்தைக்கட்டிவிடுவதாகவும், ரிலீவிங் ஆர்டரை ரெடி பண்ணிவைக்கும்படியும் சொல்லிவிட்டு வரச்சொன்னேன். அவன் எப்படி அப்பா அவ்வளவு பணம் நாளைக்குள் கிடைக்கும், என் பேங்க் அக்கவுன்ட்டில் அவ்வளவு பணம் இல்லையே என்றான். நான் அதனை ஏற்பாடு செய்கிறேன் நீ கவலைப்பட வேண்டாம் என்றேன். அவன் மேலும் சொன்னான் மேலே உள்ள ஆண்டியிடம் கேட்கப்போகிறீர்களா? என்றான் அதைப்பற்றி நீ கவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தைரியப் படுத்திவிட்டு போனை வைத்தேன். அப்போது டாக்டரும் வந்தார், சரசுவை நன்றாக செக்கேப் பண்ணிட்டு, கைகட்டுகள் நன்றாக உள்ளது. கைகளை தொங்கவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு20நாள் சென்று வந்து காட்டும்படியும் சொன்னார்.
இப்போ எழுதிதந்திருக்கும் மாத்திரைகளை கவனமாக சாப்பிட்டுவர வேண்டும்என்றார். சரி என்று சொல்லிட்டு, டிஸ்சார்ஜ் எழுதி தரும்படிக் கேட்டுக் கொண்டேன் அவரும் அதனை எழுதிக்கொடுத்ததும், கவுண்டருக்கு சென்று எல்லா பில்லும் பாக்கி பணம் உண்டென்றால் அதனையும் கொடுக்கும்படிக் கேட்டுக்கொண்டேன். அவர்களும் எல்லாவற்றையும் இன்னும் அரை மணி நேரத்தில் ரெடி பண்ணித் தருகிறோம் என்றனர். எங்களை அட்டென்ட் செய்த நர்சுகளையும் அட்டேண்டர்களையும் ரூமுக்கு வரச்சொன்னேன். எல்லாவரும் வந்தபின் எல்லோருக்கும் 100- 200 என்று கொடுத்தனுப்பினேன்.