08-02-2019, 11:24 AM
தனது அறைக்குள் நுழைந்த சத்யன் மகனின் கழுத்தில் கையில் இடுப்பில் இருந்த நகைகளை கழட்டி கட்டிலில் வீசினான், தன் கழுத்தில் கிடந்த செயின், கையில் இருந்த வாட்ச், மோதிரம் எல்லாவற்றையும் கழட்டி எறிந்தான், போட்டிருந்த கோட்சூட்டை கழட்டி சாதாரண லுங்கியை கட்டிக்கொண்டு ஒரு பழைய சட்டையை மாட்டினான். மகனை தூக்கிக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்து படிகளில் இறங்கி வீட்டைவிட்டு வெளியே போனான்
அவன் பின்னாலேயே ஓடிவந்த திலகம் அவனுக்கு முன்னால் சென்று வழிமறித்து நின்று " ஐயா நீங்க போகவேண்டாம்னு தடுக்க நான் இங்கே வரலை,, போயிடுங்க இங்கே இனிமேல் இருக்கவேண்டாம் உடனே போயிடுங்க,, ஆனா இதை வாங்கிக்கங்கய்யா, கையில பத்து பைசா இல்லாம இந்த சின்னப்புள்ளயை தூக்கிகிட்டு எப்படிய்யா ஊருக்கு போவீங்க, தயவுசெஞ்சு இந்த பணத்தை வாங்கிக்கங்க" என்று அவன் கையில் ஒரு ஆயிரம் ரூபாய் தாளை தினித்தாள் திலகம்
சத்யன் பிடிவாதமாக பணத்தை வாங்க மறுக்க,, " ஐயா இது இந்த வீட்டு காசு இல்லய்யா, அரசாங்கத்தோட பணம், அரசாங்கம் எனக்கு குடுத்த முதியோர் பென்ஷன் பணம், அதனால நீங்க தயங்கமா வாங்கிக்கங்க, உங்களை என் மகனா நெனைச்சு தான் குடுக்கிறேன்" என்று கூறி சத்யன் கையில் பணத்தை வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் விடுவிடுவென்று நடந்தாள் திலகம்
சத்யன் ஒரு பிச்சைக்காரனைப் போல சிறிதுநேரம் தெருவில் நின்றுவிட்டு, பிறகு ஒரு ஆட்டோவில் ஏறி சென்ரல் ரயில்நிலையம் வந்தான்,, நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருக்க , வேகமாய்ச்சென்று டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ரயிலை நோக்கி ஓடி இவன் குழந்தையோடு ஏறவும் ரயில் புறப்படவும் சரியாக இருந்தது,,
சத்யன் ஏறியது ஜெனரல் கம்பார்ட்மெண்ட் என்பதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது, ஐந்துபேர் இருக்கையில் ஏழுபேர் அமர்ந்திருக்க, இவன் குழந்தையோடு இருப்பதைப் பார்த்து இரண்டு பெண் பிள்ளைகளின் தாய் ஒருத்தி எல்லோரையும் நெருங்கி அமரும்படி சொல்லி எட்டாவதாக இவன் அமர்வதற்கு ஆறு அங்குலத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்தாள்,
சத்யன் அமரவில்லை, “ பரவாயில்லை சிஸ்டர்,, இவனை மட்டும் வச்சுக்கங்க” என்று மகனை அந்த பெண்ணிடம் நீட்டினான், அந்த பெண்மணி மறுக்காமல் வாங்கி மடியில் வைத்துக்கொண்டாள், மனு அதிகமாக அடம்பிடிக்கும் குழந்தை இல்லை என்பதால் சமர்த்தாக அந்த பெண் மடியில் அமர்ந்துகொண்டான்
சத்யன் படியருகே கதவில் சாய்ந்து நின்றுகொண்டான், ஈரக்காற்று வந்து முகத்தில் பலமாக மோதி முதுகுத்தண்டில் ஊடுருவியது, கடும்குளிர் வாட்டியது,
ஆனால் அதற்கு நேர்மாறாக மனம் அனலாய் கொதித்தது, ரயிலை விட வேகமாக அவன் இதயம் துடித்தது, நடந்தவைகள் கண்முன் காட்சியாக விரிந்தது, இத்தனை நாட்களாக மித்ராவை தொட்ட உடலை கொழுத்திவிடலாமா என்று நினைத்தான், முன்பு மித்ராவின் அட்டகாசத்தை பொருத்துக்கொள்ள வழியுறுத்திய மனுவின் முகம் இப்போது வாழ்க்கையை வாழவும் வழியுறுத்தியது,
அதற்குள் ரயில் செங்கல்பட்டை கடந்து மேல்மருவத்தூரை நோக்கி அதிவேகமாக பயனிக்க, குளிர் அதிகமாக வாட்டியது, மனுவுக்கு ஒரு ஸ்வெட்டர் கூட இல்லையே இந்த குளிரை குழந்தை எப்படி தாங்குவான் என்று அவசரமாக திரும்பி பார்த்தான், அந்த பெண்மணியின் பத்து வயது மகள் மனுவை மடியில் வைத்துக்கொண்டு இருவருக்குமாக சேர்த்து ஒரு சால்வையைப் போர்த்திக்கொண்டு இருந்தாள்
சத்யன் நிம்மதியுடன் திரும்பி மறுபடியும் இருட்டை வெறித்தான், கழிவிரக்கத்தால் சத்யனின் கண்கள் அடிக்கடி நிரம்பியது சட்டையின் காலரை இழுத்து எடுத்து வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டான், அவசரமாக குழந்தையோடு வெறியேறிய போது பணம்கொடுத்து உதவிய திலகத்தை மனம் நன்றியோடு நினைத்துப் பார்த்தது,
ரயில் மேல்மருவத்தூரில் நிற்க ஒரு செவ்வாடைக் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு ஏறியது, சத்யனால் அதற்க்கு மேல் அங்கே நிற்காமல் உள்ளே போக, அந்த பெண்மணி ஒரு நியூஸ் பேப்பரை அவனிடம் நீட்டி “ தம்பி இதை கீழேபோட்டு உட்கார்ந்துக்கிட்டு வாங்க, எம்புட்டு நேரம் நிக்கமுடியும்” என்று அனுசரனையுடன் சொல்ல..
சத்யன் மறுக்காமல் பேப்பரை வாங்கி நடக்கும் பாதையில் ஓரமாக விரித்து அதில் கால்களை இடுக்கி அமர்ந்துகொண்டான், ரயில் முண்டியம்பாக்கத்தை கடந்தபோது அந்த பெண்மணி ஒரு டிபன் கேரியரை திறந்து இரண்டு மகள்களுக்கும் ஆளுக்கொரு கப்பை கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கி தன் மடியில் வைத்துக்கொண்டு, சத்யனிடம் ஒரு கப் உணவைக் கொடுத்து “ சாப்பிடுங்க தம்பி” என்றாள்
“ இல்லீங்க சிஸ்டர் வேண்டாம் பசியில்லை” என்று மறுத்த சத்யனுக்கு ஏனோ தனது தாயின் நினைவு வர கண்கலங்க தலைகுனிந்து கொண்டான், அவன் மனம் இருந்த நிலையில் யாரையாவது கட்டிக்கொண்டு ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது, அப்படி அழுவதற்கு தனது தாய் இல்லையே என்று நினைத்தாலும் அதற்கும் அழுகை வந்தது, அது பொது இடம் என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முயன்றான்
இவன் அழுகிறான் என்பதை புரிந்துகொண்டு அந்த பெண் தண்ணீர் பாட்டிலை அவனிடம் கொடுத்து “ கொஞ்சம் தண்ணி குடிங்க தம்பி” என்று மெதுவான குரலில் கூற, சத்யன் சட்டையின் தோள் பகுதியில் முகத்தை துடைத்துக்கொண்டு தண்ணீரை வாங்கி குடித்தான்
“ என்ன தம்பி ஆச்சு,, ஏதாவது பிரச்சனையா? குட்டிப்பையனோட அம்மா எங்க?” என்று மெதுவாக கேட்க
“ இறந்துட்டாங்க” என்று பட்டென்று ஒரே வார்த்தையில் சத்யன் முடிக்க..
அந்த பெண் பலத்த அதிர்ச்சியுடன் “ அய்யோ கடவுளே,, எத்தனை நாளாச்சு தம்பி” என்று கேட்க
“ மூணுநாள் ஆச்சு” என்று பதில் சொன்ன சத்யன் தன்னிடம் தாவிய மனுவை வாங்கி நெஞ்சோட அணைத்துக்கொண்டான்
அவன் சொன்னதை கேட்டு அங்கு நிறையபேர் உச்சுக்கொட்டி தங்களின் வருத்தத்தை தெரிவித்தாலும் அவனை மேலும் எதுவும் கிளறவில்லை