08-02-2019, 11:23 AM
கட்டிலைவிட்டு இறங்கிய சத்யன் “ ஏய் ச்சீ உன்னை தொடவே எனக்கு பிடிக்கலை, என்னை வற்புறுத்தாதே” என்று கூறிவிட்டு கதவை திறந்து வெளியே வந்தவன், முன்னெச்சரிக்கையாக கதவை வெளிப்பக்கமாக பூட்டினான்
தனது அறைக்கு வந்து படுத்தவன் காதுகள் கிழிந்துவிடும் அளவிற்கு பக்கத்து அறையில் பொருட்கள் உடைபடும் சத்தம் கேட்டது, அதன்பிறகு சத்யன் உறங்க வெகுநேரம் ஆனது
மகனின் முகத்தில் விழித்த சத்யன், எழுந்து காலைக்கடன்களை முடித்து வெளியே வந்தான் பக்கத்து அறையின் கதவு சலமின்றி மூடிக்கிடந்தது, தன் கையில் இருந்த சாவியால் பூட்டை திறந்த சத்யன், கதவை திறக்காமல் கீழே வந்தான், மித்ரா எழுந்திருக்க எப்படியும் மணி பதினொன்று ஆகும்,
காலை உணவை விஷத்தை போல உண்டுவிட்டு மனுவை திலகாவிடம் ஒப்படைத்துவிட்டு ஆபிஸ்க்கு கிளம்பினான் சத்யன்
அன்று மாலையே அலுவல் விஷயமாக அவசரமாக பெங்களூர் செல்ல வேண்டியிருந்ததால் வீட்டுக்கு வந்து இரண்டு நாட்களுக்கு வேண்டிய துணிகளை எடுத்துக்கொண்டான், மகனை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி திலகாவிடம் கூறிவிட்டு பெங்களூர்க்கு புறப்பட்டான் சத்யன்
போன வேலையை மூன்று நாட்களில் வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, மகனை பார்க்கும் சந்தோஷத்தில் பகலிலேயே பஸ் படித்து, மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தான்,
வந்ததும் ஹாலில் விளையாடிக்கொண்டிருந்த மகனை தூக்கிக் கொஞ்சியவனை கலவரத்துடன் பார்த்தாள் திலகா, அவள் முகத்தில் இருந்த கலவரம் சத்யனை குழப்பத்தில் ஆழ்த்த மகனின் நெற்றியில் கைவைத்து பார்த்தான்,, சூடு எதுவுமில்லை, குழந்தை நன்றாக இருந்தான், அப்புறம் ஏன் திலகாவின் முகத்தில் கலவரம்..
“ என்னாச்சு திலகாம்மா?, ஏன் இப்படி இருக்கீங்க?, ஏதாவது உங்களுக்கு உடம்பு சரியில்லையா?” என்று மாற்றிமாற்றி சத்யன் கேள்வி கேட்டாலும் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை, அடிக்கடி அவள் பார்வை மாடியில் இருந்த மித்ராவின் அறையை தொட்டுவிட்டு வர...
“ ஓ மித்ராவுக்கு என்ன? உடம்பு சரியில்லையா?” என்ற சத்யன் அவசரமாக மாடிப்படிகளில் ஏற..
அவன் இரண்டாவது படியில் கால் வைத்ததுமே திலகா குறுக்கே ஓடிவந்து தடுத்து “ ஐயா நான் சொல்றதை கேளுங்க, அங்க போகாதீங்க ஐயா, கீழயே இருங்கய்யா” என்று கைக்கூப்பி கெஞ்சினாள்
சத்யனின் நெஞ்சில் சுருக்கென்று முள் தைக்க “ ஏன் போகக்கூடாது, இன்னிக்கு ரொம்ப ஓவரா குடிச்சிருக்காளா,, பரவாயில்லை விடுங்க நான் சமாளிச்சுக்கறேன்” என்று கூறிவிட்டு அடுத்த படியில் கால் வைத்தான் சத்யன்
சட்டென்று மண்டியிட்டு அவன் கால்களை பிடித்துக்கொண்ட திலகா “ ஐயா உங்களை கும்புட்டு கேட்டுக்கிறேன் தயவுசெஞ்சு அங்க போகாதீங்க ஐயா” என்று கண்ணீருடன் அவன் காலைப் பற்றிக்கொண்டு கெஞ்ச...
சத்யனின் முதுகுத்தண்டு சட்டென்று விரைத்தி நிமிர, கையில் இருந்த மகனை படியில் இறக்கிவிட்டு திலகாவை விலக்கி ஒதுக்கிவிட்டு தடதடவென்று மாடிக்கு ஓடினான் சத்யன்
பாதியளவு திறந்திருந்த மித்ராவின் அறைக்கதவை முழுவதுமாக திறந்துகொண்டு உள்ளே போனான், அங்கே இருந்த சோபாவில் வாட்டசாட்டமான ஒருவன் அமர்ந்திருக்க அவன் மடியில் மித்ரா அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்தாள், அவனுடைய ஒரு கை மித்ராவின் மார்பை பற்றி முரட்டுத்தனமாக பிசைந்துகொண்டு இருக்க, மற்றொரு கை அவளின் தொடையிடுக்கில் புகுந்து உள்ளே வெளியே என்று உறவாடிக் கொண்டு இருந்தது
சத்யனை யாரோ உயிரோடு நெருப்பில் எரிந்தது போல் துடித்துப்போனான்,, “ ஏய் “ என்று ஆவேசத்துடன் கத்திக்கொண்டு அவர்களை நெருங்க,, இருவரும் திடுக்கிட்டு விலகி எழுந்தனர்,
ஒரு நிமிடம் தான் சத்யனை கலவரத்துடன் பார்த்தாள் மித்ரா,, அடுத்த நிமிடம் நெஞ்சை நிமிர்த்தி " ஏய் உனக்கு மேனர்ஸ் இல்ல கதவை தட்டிட்டு உள்ளே வரவேண்டியது தானே, போ வெளியே" என்று அலறினாள்
சத்யனின் மொத்த ரத்தமும் முகத்தில் பாய ரௌத்திரமான முகத்தோடு அவர்களை நெருங்கி கூட இருந்தவனின் சட்டையை கொத்தாக பற்றி தாடையில் பலமாக ஒரு அறைவிட, கடைவாயில் ரத்தம் பிடிங்கிகொண்டது,
தன்னுடன் இருந்தவன் உதடு கிழிந்துபோனதை பார்த்து ஆத்திரமடைந்த மித்ரா, எட்டி சத்யனின் சட்டையை பற்றி விலக்கி தள்ளினாள் " ஏய் அவனை அடிக்க உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு, அவன் என் லவ்வர், இனிமேல் அவன்தான் என்கூட இருப்பான், நீ வெளியேப் போ" என்று ஆங்காரமாய் சத்தமிட..
சத்யனுக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை, ஒரு பெண் இவ்வளவு கீழ்த்தரமாக கூட இறங்குவாளா? என்று எண்ணினான், ஏதாவது பூகம்பம் வந்து மொத்த வீட்டையும் விழுங்கிவிடக்கூடாதா என்று நினைத்தான், கடைசி முயற்சியாக தன் நிலையை அவளுக்கு உணர்த்தும் விதமாக " மித்ரா நான்....' என்று மேலே சொல்லமுடியாமல் தடுமாறி நிறுத்தினான் சத்யன்
" என்ன நீ யாரு, என் புருஷன்னு சொல்ல வர்றியா,, அதுக்கு உனக்கு என்ன தகுதியிருக்குது, நீ கட்டின தாலியை என்னிக்காவது என் கழுத்தில் நான் போட்டுருக்கேனா? நீ பார்த்திருக்கியா, எனக்கு நீ தேவை அதனால இத்தனை நாளா உன்னை என் வீட்டுல அனுமதிச்சேன், என்னிக்கு உன்னால முடியாதுன்னு என்னை உதறிட்டு போனியோ அன்னிக்கே நீ இனி தேவையில்லைன்னு முடிவு பண்ணிட்டு, இனிமேல் இவன் இங்கதான் இருப்பான், உனக்கு இஷ்டமிருந்தால் எதையும் கண்டுக்காம இரு, இல்லேன்னா இந்த நிமிஷமே உனக்கு தேவையான பணத்தை எடுத்துக்கிட்டு உன் பிள்ளையையும் தூக்கிகிட்டு எங்காவது போய் சேரு, இப்போ நீ அடிச்சதுக்கு என் லவ்வர் கிட்ட மன்னிப்புக் கேளு" என்று மித்ரா எகத்தாளமாக அதிகாரமாக பேசி சத்யனின் இழிநிலையை குறிப்பிட்டு சொல்ல ..
சிறிதுநேரம் அசைவின்றி கல்போல் நின்ற சத்யன், அடுத்த நிமிடம் கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த பழக்கூடையில் சொருகியிருந்த கத்தியை தாவியெடுத்தான்,, சத்யன் கையில் கத்தியை பார்த்ததும், உடல் பதற கள்ளக்காதலர்கள் இருவரும் உயிருக்கு பயந்து சுவற்றோடு ஒன்றினர்
சத்யன் கத்தியோடு அவர்களை நெருங்க, கதவை திறந்துகொண்டு ஓடிவந்த திலகா கையிலிருந்த மனுநீதியை சத்யனின் காலடியில் போட்டு, " ஐயா பிள்ளையை பாருங்கய்யா, இந்த பிள்ளையை அனாதையாக்கிடாதீங்க" என்று கதறியழ,, அவள் அழுவதைப் பார்த்து குழந்தையும் அழுதது,
சத்யன் ஒரு நிமிடம் கண்மூடினான், மூடிய கண்களில் கண்ணீர் வழிந்தது, கண்களை திறந்தான், கையிலிருந்த கத்தியை வீசியெறிந்தான், கீழே கிடந்த மகனை தூக்கிக்கொண்டு அந்த அறையைவிட்டு வெளியேறினான்