08-02-2019, 11:21 AM
அதன் பிறகு சத்யனின் மறுப்புகள் அங்கே எடுபடாமல் போனது, தன் மகன் நல்லாருக்கனும் , தன் பேரன் நல்லாருக்கனும் என்ற இரண்டு தாயுள்ளங்களின் வேண்டுதலை தட்டமுடியாமல் தன்னுடைய தன்மானத்தை ஒரு சுபயோக சுபதினத்தில் மித்ராவிடம் அடகு வைத்தான்,
வீட்டோடு மாப்பிள்ளையாக வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டான், ஆனால் அன்று அடகு வைத்த தன்மானத்தை இன்று வரை சத்யனால் மீட்க்கமுடியவில்லை, அடகுவைத்த தன்மானத்தின் மீது வட்டி ஏறிக்கொண்டே போய் இன்று மூழ்கும் நிலையில் இருக்கிறான் சத்யன்
சத்யனுக்கு திருமணம் ஆன ஆறாவது மாதம் மகனைப் பார்க்க வந்த அம்மாவின் முன்பு சத்யன் எப்படித்தான் நடித்தும் அந்த தாயுள்ளம் தன் மகனின் வேதனையை அவமானத்தை கண்டுகொண்டது, அன்று இரவே கண்ணீருடன் ரயில் ஏறிய அம்மா தன் மகனின் வாழ்க்கை தன்னால் சீரழிந்து போனது என்ற குற்றவுணர்வில் வந்து படுத்துவிட்டாள், சத்யனின் அம்மா துக்கம் தாளாமல் சிறிதுநாள் உடல்நலமின்றி கிடந்து , பிறகு ஒரு மழைக்கால இரவில் இடி மின்னல்களின் துணையோடு தன் கணவனைத் தேடி சந்தோஷமாக பயணமானாள்
அம்மாவின் உடலை அடக்கம் செய்ய பெரிய காரில் வந்து கோட்சூட்டுடன் வந்து இறங்கிய சத்யன், அந்த ஏழையின் வீட்டுக்குள் நுழைந்ததும் மனதோடு ஒட்டாத அந்த உடைகளை கலைந்துவிட்டு தன் தாயின் உழைப்பில் வாங்கிய நாலு முழம் வேட்டியைக் கட்டிக்கொண்டு தாயின்மீது விழுந்து கதறினான்
அவன் மனைவி மாமியாரின் மரணத்துக்கு கூட வரவில்லை என்று ஊர் கிசுகிசுத்தாலும் அவனின் கண்ணீர் அந்த ஊரையே அழவைத்தது, சத்யனின் துக்கங்கள் மொத்தத்தையும் தாயின் மரணம் வெளிக்கொணர சத்யன் வாய்விட்டு கதறியழுதான், அந்த ஊரே சமாதானம் செய்தாலும் அவன் நெஞ்சின் வலி குறையவில்லை, கண்களின் கண்ணீர் நிற்கவில்லை,
தாயை அடக்கம் செய்த அடுத்த நிமிடம் உடனே கிளம்பி வரும்படி மித்ராவிடம் இருந்து அழைப்பு வர போகக்கூடாது என்று பிடிவாதத்துடன் இருந்த சத்யனை “ இது சாதரண விஷயம் இல்லை ராசா ஒரு குடும்பம்,, அவ்வளவு சீக்கிரம் உதறிட்டு வர முடியாது, அதுவுமில்லாம இப்போ நம்ம குடும்ப வாரிசு அவ வயித்துல வளருது, இந்த சமயத்தில் வெட்டிவிட்டுட்டு வரமுடியாது ராசா, தயவுபண்ணி போயிடு சத்தி ” பாட்டிதான் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்
அதன்பிறகு சத்யன் வாழ்ந்த யந்திர வாழ்க்கையில் வசந்தமாக வந்தது மனுநீதியின் பிறப்பு தான் இறந்து போன அவன் அம்மாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்த மகனை மித்ராவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, கருவிலேயே அழிக்க நினைத்தவள் முழுதாக பிறந்ததும் தொட மறுத்தாள், தன் அழகெல்லாம் வீணாகிவிட்டது என்று கோபத்தின் உச்சியில் கொதித்தாள்
மூன்று மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் கொடுக்க மறுத்துவிட , சத்யன் குழந்தையின் பொருட்களை தனது அறைக்கு மாற்றிக்கொண்டு, குழந்தையை ஒரு தாயுமானவனாக இருந்து காப்பாற்றினான், தன் மகன் அவள் வயிற்றில் இருக்கும்போதே அந்த சிசுவை காப்பாற்ற சத்யன் எந்த இழிநிலைக்கும் இறங்க தயாராக இருந்தான், இப்போது தன் தாயின் மறுபிறவியாக வந்திருக்கும் மகனை காக்க மித்ராவின் அட்டூழியங்கள் அத்தனையையும் பொறுத்துக்கொண்டான்
மித்ரா,, இவள் உருவம் எழிலாய் இருந்தாலும் உள்ளம் எரிமலையாய் இருந்தது, அவளது உடல் தேவைக்கு மட்டும் இந்த ஆணழகனை பிடிக்கும், தேவை தீர்ந்ததும் தன் கட்டிலில் படுக்கக்கூட இவனுக்கு தகுதியில்லை என்று விரட்டுவாள், அதிலும் ஏதாவது பார்ட்டிகளுக்கு சென்று வந்தாள் என்றால் போதையில் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்றே புரியாமல் வேலைக்காரர்கள் முன்பு இவள் நடந்து கொள்ளும் போது சத்யன் அவளை இழுத்து வந்துதான் அறைக்குள் தள்ளுவான், ,
இவளின் குணத்தை பார்த்துதான் சத்யனை தேர்ந்தெடுத்தாரோ இவள் அப்பா? சத்யனுடைய பொறுத்துப்போகும் குணமும், அனுசரித்துப் போகும் மனமும் தன் மகளுக்கு பொறுத்தமாக இருக்கும் என்று மித்ராவின் அப்பா போட்ட கணக்கு தப்பவில்லை, மகளுக்கு திருமணத்தை செய்துவிட்டு சில பொருப்புகளை மட்டும் இவர்களிடம் ஒப்படைத்து விட்டு தனது வெளிநாட்டு காதலியைத் தேடி லண்டன் பறந்த மனிதர் இன்னும் திரும்பவில்லை, மனு பிறந்ததை கூட ஆர்வமின்றி கேட்ட அவரிடம் சத்யன் தன்பிறகு பேசவில்லை,,
மித்ரா ஒரு செக்ஸ் பேய் என்றுகூட சத்யன் பலநேரங்களில் நினைப்பதுண்டு,, நாளுக்கு நாள் அவளது நண்பர்கள் கூட்டமும் போதையும் அதிகமானது, சத்யன் பணம் தரமறுத்தால் கம்பெனியில் வந்து அத்தனை பேரின் எதிரிலும் கத்தி கலாட்டா செய்வாள், தன்மானத்திற்கு பயந்த சத்யன் பணத்தை அவளிடம் வீசி எரிந்துவிட்டு வேலைகளை கவணிப்பான்
திருமணம் ஆனபோது ஆர்வத்தோடு அவளிடம் செக்ஸில் ஈடுப்பட்ட சத்யன் , அதன்பிறகு அவளுடன் படுப்பதையே அருவருப்பான விஷயத்தை போல செய்தான், சத்யனுக்கு கலவியை கவிதைபோல் ரசிக்கவேண்டும் என்று ஆசை, ஆனால் மித்ராவுக்கு செக்ஸை அசிங்கமாய் பேசி அங்காரமாய் சத்தமிட்டு அனுபவிக்கவேண்டும், அறையைவிட்டு வெளியே வரும்போது வேலைக்காரர்கள் முகத்தில் தெரியும் ஏளனம் சத்யனின் உடலை கூச வைக்கும்
அவன் இருந்த கிராமத்தில் காதலும் கலவியும் புனிதம்,, அவனும் அப்படித்தான் வளர்க்கப்பட்டான், ஆனால் இங்கே நகரவாசிகளுக்கு செக்ஸ் வெறும் உடல் தேவை என்பது சத்யனுக்கு புரிந்தது, ரோட்டோரத்தில் இருக்கும் நடைபாதை வாசிகளிடம் இருக்கும் காதலும் நேசமும் பங்களாவாசிகளிடம் இல்லாமல் போனது, காரில் வரும்போது பாதையோர மக்களை சத்யன் கவணிப்பான், முதல்நாள் இரவு குடித்துவிட்டு அடிக்கும் புருஷனுக்கு மறுநாள் மீன்குழம்பு வச்சு அருகில் இருந்து சோறு போடும் பெண்ணை பார்த்து சத்யன் மனசுக்குள் ஏங்குவான்
திருமணம் ஆன இந்த நான்கு வருடத்தில் ஒருமுறை கூட மித்ரா அவனுக்கு சாப்பாடு பரிமாறியதில்லை, சாப்பிட்டாயா என்று கேட்டதும் இல்லை, பெற்ற குழந்தையைக் கூட கவனிக்காதவள் புருஷனை எங்கே கவனிக்கப் போகிறாள் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்வான்