08-02-2019, 09:34 AM
பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் உருவாகி வந்த 'வர்மா' திரைப்படத்தை கைவிடுவதாக, அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெலுங்கில் மாபெரும் வெற்றி அடைந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம், பாலா இயக்கத்தில் 'வர்மா' என்ற பெயரில் தயாராகி வந்தது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாவதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்று, டிரெய்லரும் வெளியானது. விரைவில் படம் வெளியாகும் என கருதப்பட்ட நிலையில், எதிர்பாராத திருப்பமாக, 'வர்மா' படம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று கூறி, இந்த படத்தை கைவிடுவதாக E4 பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், துருவ்-வை கொண்டே மீண்டும் அர்ஜுன் ரெட்டி படத்தின் மறு ஆக்கத்தை வேறு இயக்குநரை கொண்டு உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனரின் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.